ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

18 நவம்பர், 2008

கைதான சாமியார்களை பா.ஜ.கட்சி காப்பாற்றுமாம் : ராஜ்நாத் சிங் கூறுகிறார் எந்த மதமானாலும் பயங்கரவாதிதான் : அத்வானி

இந்துப் பயங்கரவாதம்

கைதான சாமியார்களை பா.ஜ.கட்சி காப்பாற்றுமாம் :
ராஜ்நாத் சிங் கூறுகிறார் எந்த மதமானாலும் பயங்கரவாதிதான் : அத்வானி

பானிப்பட், சண்டிகர் நவ.17 மாலேகான் குண்டு வெடிப் புச்சதியில் ஈடுபட்ட பிரக்யா சிங் தாக்கூர், சிறீகாந்த் புரோ கித் ஆகியவர்களுக்கு வெளிப் படையாக ஆதரவு தெரிவித் துள்ளார் பா.ஜ.க. தலைவர் ராஜ்நத் சிங்.

இந்தியாவின் அரசியல் எப் போதுமே மதத்துடன் தொடர்பு கொண்டதாம். ஆகவே சாமியார்களைக் கேவலப்படுத்தும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் முயற்சிகளை எதிர்த்து பா.ஜ.க. போராடுமாம். அரசியல் காரணங்களுக்காக புரோகித் மீது குற்றம் சுமத்தப்படுகின்றனவாம்.

வி.எச்.பி. குரல்

இப்படிப் பேசிய ராஜ்நாத் சிங்குடன் சேர்ந்து கோஷ்டி கானம் பாடியவர் வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால். உத்தரகாண்ட் முதலமைச்ச ரான முன்னாள் ராணுவ அதிகாரி புவன்சந்த் கந்தூரியும் கூட்டு இசையில் சேர்ந்து கொண்டு இந்துத்வ இசையைப் பாடியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்.கருத்து

இந்துப் பயங்கரவாதம் என்று பேசுவதே தவறு என்றும் இந்து என்றால் சகிப்புத் தன்மை எனப் பொருள் என்றும் ஆர். எஸ்.எஸ். தலைவர் சுதர்சனம் பேசியுள்ளார்.

13 மதப்பிரிவுகளை (அக ராக்கள்)ச் சேர்ந்த பண்டாரப் பரதேசிகளின் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசி, இந்து மதச் சாமியார்களையும் போர்ப்படையினரையும் காப்பாற்றுவதற்காக தர்ம சங்கர்ஷன் சமிதி அமைக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

அத்வானி

எந்த மதத்தைச் சேர்ந்தவ ராக இருந்தாலும், பயங்கர வாதி, பயங்கரவாதிதான். கிரிமினல் குற்றம் செய்தவர் களைத் தண்டித்தே தீரவேண் டும் என்று பிரதமர் கனவில் இருக்கும் அத்வானி பேசியுள் ளார். வாக்கு வங்கிக்காக இந்துப் பயங்கரவாதம் எனக் காங்கிரஸ் பேசுகிறதாம்.

நவம்பர் 26 முதல் தர்ம சங்கர்ஷன் சமிதியை அமைப் பதற்கான பணிகளில் டில்லி யில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபடும் என்று அறிவித்துள்ளது. இக் கூட்டத்தில் பிரவீன் தொகா டியா, நிர்மல பீட சங்கராச் சாரி மற்றும் இமாச்சலப் பிர தேசம், உத்தரகாண்ட் மாநில பி.ஜே.பி. முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

மற்றுமொரு வழக்கு

புரோகித் மீது மேலும் ஒரு வழக்கு பதிவாகி யுள்ளது. புனேயைச் சேர்ந்த யஷ்வந்த் டட்டே என்பவருக்குப் போலி ஆவணங்களைக் கொடுத்துத் துப்பாக்கி உரிமம் வாங்கிக் கொடுத்ததாக புரோகித் மீது புகார். எங்கோ குடியிருந்த வரை தேவலி ராணுவ முகாமில் இருப்பதாகக் கள்ள ஆவணம் தந்து 2006 இல் துப்பாக்கி உரிமம் வாங்கிக் கொடுத்துள் ளார்.

பஜ்ரங்தள்

புரோகித் மீது பொய்யாக வழக்கு போட்டிருப்பதாகவும், பண்டாரப் பரதேசிகளை (மகாமண்டலேசுவரர்களாம்)க் காட்டி காங்கிரசு நாடாளு மன்ற உறுப்பினர்களை கெரோ (முற்றுகை) செய்யப் போவதாகவும் பஜ்ரங்தள் தலைவர் அக்ஷய் புரோகித் அறிவித்துள்ளார். கடை யடைப்பு, சாலை மறியல், சிறை நிரப்பல் போன்ற பல போரட்டங்களையும் பஜ்ரங் தள் நடத்துமாம். இந்து தலை வர்களைக் குறி வைப்பதை நிறுத்தும் வரை இவர்கள் போராடுவார்களாம்.

சன்னியாசிகளும், காவிக்கா ரர்களும் சல்லடம் கட்டிக் கொண்டு சண்டைக்குத்தயார் ஆகிறார்கள். இந்நிலையில் மாலேகாவ்ன் சதிச் செயல் தொடர்பாகக் கைது செய்யப் பட்ட 10 பேர் அன்னியில் மேலும் மூன்று பேரைக் காவல் துறை தேடிவருகிறது.


சேலத்துக்கு விருது!

சேலம் உருக்காலைக்கு தேசிய விருது ஒன்று கிடைத் துள்ளது. அதன் சிறப்பான பணிக்கான தேசிய விருதாகும். 12-ஆவது முறையாக இந்த விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட ஆலை யைத்தான் இழுத்து மூடவும் விரிவுக்கு நிதி உதவி தராமலும் இந்திய அரசு அடிக்கடி பிரச் சினை செய்கிறது

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு