ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

24 நவம்பர், 2008

பேராசிரியர் சுப.வீ அவர்களுடன் தமிழ்வெளிக்காக நேர்காணல்

பேராசிரியர் சுப.வீ அவர்கள் தமிழ்வெளிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்


தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் குறிப்பிடும்படியான தமிழ்த்தேசியவாதிகளில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர். இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கியிருக்கிறார். தான் கொண்ட கொள்கைக்காக எந்த சிக்கலையும் எதிர் கொள்ள தயங்காதவர். அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படுகிறார்.

அவரின் சிந்தனைகள்.
தமிழியக்கங்கள் என்பவைகளை நான் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். திராவிட இயக்கத்தையும், தமிழுணர்வாளர்களையும் ஒருங்கிணைப்பதுதான் எங்கள் பணி. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.

எங்கள் அமைப்புக்கு மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.
1. தமிழின, தமிழ் மொழி மேம்பாடு
2. பகுத்தறிவு, சமூகநீதி, பெண்விடுதலை
3. உலகத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்குக் குரல் கொடுப்பது

தமிழீழம் தொடர்பான பல கேள்விகள் இன்றைய தலைமுறைக்கு இருக்கின்றன, மேலும் தமிழீழ பிரச்சினை தொடர்பான சில பொய் பரப்புரைகள் இன்றைய தலைமுறையை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன, எனவே ஈழம் தொடர்பான சில விளக்கங்களை அது சார்ந்த தெளிவுடையவர்களிடம் தமிழ்வெளி தம் வாசகர்களுக்காக தொடர்பு கொண்டு பெற்று வெளியிட முயற்சி எடுத்துள்ளது, பேராசிரியர் சுப.வீ அவர்கள் தமிழ்வெளிக்காக நேரம் ஒதுக்கி தமிழ்வெளி வாசகர்களின் கேள்விகளுக்கு விடையளித்ததை நன்றியுடன் வணங்குகிறோம்...

பேராசிரியர் சுப.வீ அவர்களுடன் தமிழ்வெளிக்காக நேர்காணல் நடத்திய நண்பர் பிரின்சு அவர்களுக்கும் எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்.

இனி தமிழ்வெளி வாசகர்களின் கேள்விகளும் அதற்கு பேராசிரியர் சுப.வீ அவர்களின் பதில்களும்

1. தனி ஈழம் உருவானால் இங்கே தனித்தமிழ்நாடு கேட்பார்களே? இது இந்தியஇறையாண்மைக்கு ஊறுவிளைவிக்காதா?


இது எந்த ஆதாரமும் இல்லாத ஒரு கேள்வி, இப்போது பங்களாதேஷ் என்ற நாடு உருவானவுடன் யாரும் தனி வங்காளம் கேட்கவில்லை, அதாவது இது வேறு கோரிக்கை, அது வேறு கோரிக்கை. திராவிட நாட்டு கோரிக்கை என்பது எப்போதோ இங்கு கைவிடப்பட்ட ஒன்று. எனவே இன்று தனித்தமிழீழத்திற்கும் தனி தமிழ்நாடு என்பதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

இரண்டாவதாக இன்றைக்கு தனித்தமிழீழம் என்பது தலைமுறையாக போராடிக்கொண்டிருக்கிறார்கள், அதே போன்று இங்கு எந்த வித போராட்டமு இல்லை, அதனால் தமிழீழம் வந்த உடனே தனி தமிழ்நாடு கேட்பார்கள் என்பது வெறும் பயம் மட்டுமல்ல, வேண்டுமென்றே கிளப்பிவிடப்படும் வதந்தி, எப்படியாவது தமிழீழத்தை தடுத்துவிட வேண்டுமென்று கருதுபவர்கள் அதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள் அதிலே இதுவும் ஒன்று, இதிலே துளிகூட உண்மையில்லை

2. இந்தியா ஆயுதம் தரவில்லையென்றால் பாக்கிஸ்தானோ, சீனாவோ இலங்கைக்குஆயுதம் தரும் வேறு யாரோ தருவதற்கு இந்தியாவே தரலாமே?

இந்தியா ஆயுதம் தருகிறபோதும் கூடத்தான் பாக்கிஸ்தானும் சீனாவும் ஆயுதம் தந்து கொண்டிருக்கிறார்கள், இன்னொன்று இது இந்தியாவுக்கு நல்லது தானே என்பது கூட அடிப்படையில் வெளியுறவுக்கொள்கையில் உள்ள புரிதலில் தவறானது என்பதை காட்டுகின்றது.

உண்மையை சொல்லப்போனால் இந்தியா தனக்கொரு சரியான நேச நாட்டை அண்டை நாடாக உருவாக்கிகொள்ளவேண்டும் பங்களாதேஷைப்போல ஒரு தமிழீழத்தை உருவாக்கிக்கொள்வதில் தான் அது கவனத்தை செலுத்த வேண்டும், ஆனால் இன்றைக்கு ஈழத்தை தாக்கி சிங்கள இனவெறியர்களுக்கு துணை போவதன் மூலம் மேலும் மேலும் தனக்கு எதிரான ஒரு சூழலைத்தான் இந்தியா உருவாக்கிக்கொண்டுள்ளது.இந்தியா தான் இலங்கைக்கு உதவியிருக்கிறதே தவிர, ஒரு நாளும் ஒரு போது ஸ்ரீலங்கா அரசு ஒரு போரிலும் இந்தியாவிற்கு உதவியாக இருந்ததில்லை, இப்போது அதைக்காட்டிலும் சீனா முத்துமாலை நடவடிக்கையின் அடிப்படையில் இந்தியாவை சுற்றியிருக்கிற இடங்களையெல்லாம் கைப்பற்றிக்கொண்டிருக்கிறது.அதற்காகத்தான் அது இலங்கையையும் கைப்பற்ற முனைகிறது,

ஒரு தமிழீழம் என்கிற நேசம் மிகுந்த ஒரு நாட்டை அண்டை நாடாக உருவாக்கிக்கொள்வதற்கான ஒரு வழி. எனவே இந்தியா ஆயுதத்தை சிங்கள அரசுக்கு கொடுப்பதன் மூலம் மேலும் மேலும் அது இந்திய நலனுக்கே எதிரான செயல்களில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை.

3. அமெரிக்காவின் தலையீடு என்பது இலங்கை அரசுக்கு உதவியாக அமையும் பட்சத்தில் அதுவும் இந்தியாவிற்கு ஆபத்து தானே? பிறகு ஏன் அதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றது?

இந்தியா வெளியுறவுக்கொள்கை தமிழீழத்தை பொறுத்தவரை நீண்ட நெடுங்காலமாகவே பிழையாக உள்ளது, இந்திராகாந்தி இருந்த போதும் திரு பார்த்தசாரதி இந்தியாவின் தூதராக இலங்கையில் இருந்த காலகட்டத்திலும் அது மிகச்சரியாக இருந்தது.பிறகு ராஜீவ்காந்தி தலைமை அமைச்சராக வந்து பார்த்தசாரதிக்கு பதில் ரமேஷ் பண்டாரியை வெளியுறவுச்செயலாளராக நியமித்த அந்த நாளிலிருந்து வெளியுறவுக்கொள்கை தவறுதலான பாதையில் நடை போடத்தொடங்கி இன்று வரை அதே பாதையில் தான் அது தொடர்ந்து நடை போட்டுக்கொண்டுள்ளது, எனவே அமெரிக்காவினோட அங்கிருக்கும் ஆட்களைமைப்பு, சீனாவின் உதவி சீனா இலங்கையோடு தமிழீழத்தையும் வளைத்துப்போட முயற்சித்தல் இவை அணைத்துமே இந்தியாவோட நலனுக்கு எதிரானதாகத்தான் இருக்கிறது. எனவே தமிழீழத்தை ஆதரிப்பது என்ற ஒரே ஒரு கொள்கையினால் தான் இந்தியா தன் நாட்டிற்கான நலனை உருவாக்கிக்கொள்ளமுடியும் மற்ற எல்லா வழியும் இந்தியாவுக்கு எதிரானது.

4. கச்சத்தீவு ஏன் இலங்கைக்கு தரப்பட்டது?

கச்சத்தீவு 1959இலிருந்து அது பற்றிய பேச்சுவார்த்தையை அங்கிருக்கும் இலங்கை அதிபர்கள் தொடங்குகிறார்கள் அது நேருவின் காலத்திலேயே பேசப்படுகிறது. ஆனால் அப்போது அது வலுப்பெறவில்லை. பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் திரும்ப திரும்ப அவர்கள் கச்சத்தீவை ஒரு வித வெறியோடு பேசுகிறார்கள், அது இந்திராகாந்தியின் காலத்திலும் கூட தொடக்கத்திலே அது மறுக்கப்படுகின்றது. ஒரு முறை நாடாளுமன்றத்திலே கூட கச்சத்தீவு முழுக்க முழுக்க தமிழ்நாட்டிற்க்கு கீழாகத்தான் இருந்திருக்கிறது, சேதுபதி அரசரின் ஆளுமையில் தான் இருந்திருக்கிறது, என்று நாடாளுமன்றத்திலே கூட வெளிப்படையாக சொல்லப்பட்டது, ஆனால் அதற்கு பிறகு ஒன் டு ஒன் மீட்டிங் என்று சொல்லப்படுகின்ற இந்திராகாந்தி சீரிமாவோவும் சேர்ந்த ஒருவருக்கொருவர் ஆன அந்த சந்திப்பில் கச்சத்தீவை கொடுப்பது என்ற முடிவு ஏற்படுகின்றது, அது தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படுகின்றது அப்போது தமிழக அரசு அதை எதிர்க்கிறது, கலைஞர் தலைமையிலான அரசு அதை எதிர்த்து சட்டமன்றத்திலேயே தீர்மாணம் இயற்றுகிறது.

ஆனால் தமிழக அரசினுடைய அதிகார எல்லை என்ன என்பதை நாம் அறிவோம், அந்த காரணத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் எதிர்ப்பை செலுத்த முடியவில்லை. மேலும் கூடுதலாக அன்றைக்கு இந்திரா காங்கிரசும் திமுகவும் கூட்டணி அரசியலில் இருந்த காரணத்தினால் கூடுதலாக அழுத்தத்தை தரமுடியவில்லை ஆனாலும் கூட அன்றைக்கு கச்சத்தீவை கொடுப்பதை எதிர்க்கத்தான் செய்தார்கள், அதையும் தாண்டி இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டது, அது நமக்கு பெரிய இழப்புதான்கிட்டத்தட்ட

5. இன்றைக்கும் அதே சூழல்தான், திமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. இன்றைக்கும் அன்றைக்கும் வேறுபாடு என்ன?

இன்றைக்கு முழுமையாக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்யும் வகையிலும் உணர்வுகளை பதிவு செய்யும் வகையிலும் தமிழக அரசே முன்னின்று நடத்தியிருக்கிறது. மேலும் தொடர்ச்சியான மத்திய அரசோடு ஒரு பேச்சுவார்த்தை என்கிற நிலையில் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. தமிழக அரசும் திமுகவும் கூட ஒரு கூட்டணியிலே மத்திய அரசில் பங்கு பெற்றிருந்தாலும் கூட இன்றைக்கு ஈழத்திற்கு ஆதரவாக குரல் உயர்த்தி மனித சங்கிலி, மற்ற போராட்டங்கள் போன்றவைகள் எல்லாம் இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, இன்னொன்றையும் நாம் எப்போதும் கவனத்திலே கொள்ளவேண்டும் திமுக என்கிற ஒரு கட்சிக்கும் தமிழக அரசுக்கும் இருக்கிற எல்லைகளுடைய அதிகார எல்லைகளுடைய வரம்பு என்ன என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே ஒரு கட்சியோ ஒரு தலைவரோ எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. மக்களினுடைய எழுச்சிதான் எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும். இன்றைக்கு தமிழகத்திலே தாய் தமிழகத்திலே எழுந்திருக்கிற தமிழீழ ஆதரவு என்பது ஒரு பெரிய நம்பிக்கை கொள்வதாக இருக்கிறது, எனவே இதை வைத்துக்கொண்டு திமுகழகம் வலிமையாக ஆளுங்கட்சியாக இருக்கிற திமுக்ழகம் மத்திய அரசிடம் மறுபடியும் மறுபடியும் இந்த கோரிக்கைகளை எடுத்து செல்லும் என்று நாம் நம்புகிறோம்

தடைசெய்யப்பட்ட இயக்கங்களை (உதாரணமாக புலிகளை) ஆதரித்து பேசலாமா?அப்படி பேசினால் இந்திய இறையாண்மை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவாய்ப்புள்ளதா?

பெரும்பாலான பிராமணர்களும் தமிழரல்லாத பெரும்பாலான பிற இந்தியர்களும்ஏன் எப்போதும் ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறார்கள்?

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு