ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

18 நவம்பர், 2008

விஷாலின் புதிய வெப்சைட்டும், பிற நடிகர்களின் லட்சணமும்...!

விஷாலின் புதிய வெப்சைட்டும்,
பிற நடிகர்களின் லட்சணமும்...!

ஆர்வமும், அவசரமும் உந்தி தள்ள. வெப்சைட் துவங்குகிற நடிகர்கள் வரிசையில் Vishalவிஷாலும் சேர்ந்துவிட்டார். இந்த வெப்சைட்டுக்கு விஷால்பிளாக்.காம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தனது பிறந்த நாளான ஏப்ரல் 17 ந் தேதி தடபுடலாக ஒரு வெப்சைட்டை துவங்கினார் சீயான் விக்ரம். இனிமேல் தனது ரசிகர்களுடன் தொடர்பு கொள்வேன், அவர்களுக்கு அவ்வப்போது குவிஸ் போட்டிகள் வைத்து அதில் வெற்றி பெறுகிற ரசிகர்களுடன் டின்னர் சாப்பிடுவேன் என்றெல்லாம் அப்போது வரிசையாக வாக்குறுதிகள் கொடுத்த சீயான், அதன்பின் அந்த வெப்சைட்டை கண்டுகொள்ளவே இல்லை. துவங்கிய நாளோடு நிற்கிறது அப்படியே!

இனிமேல் என்னை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால், என்னையோ, என் மேனேஜரையோ கூட தொடர்பு கொள்ள தேவையில்லை. எனது வெப்சைட்டை பார்த்தால் போதும். நான் எங்கிருக்கிறேன்? என்ன படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்? போன்ற விபரங்கள் அதில் அத்துப்படி என்றார் நயன்தாரா. அந்த வெப்சைட்டும் இப்போது நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது. அஜீத்தின் வெப்சைட் கதியும் இப்படியே! ஆனால், இவர்களுக்காக ரசிகர்கள் நடத்தும் ஃபேன்ஸ் கிளப் வெப்சைட்டுகள் உற்சாகமாக இயங்கி வருகின்றன என்பதை சொல்லியே ஆக வேண்டும். அஃபீஷியல் வெப்சைட்டுகள்தான் அலங்கோலம்!

பிற நடிகர்களின் ஹிஸ்ட்டரி இப்படி இருக்கும்போது விஷாலின் ஆர்வம் எப்படியிருக்கும்? தொடர்ந்து நடத்துவாரா? என்ற கேள்விகள் எழாமல் இல்லை. இதற்கு தனது வெப்சைட்டியே பதில் சொன்னால் கூட சந்தோஷம்தான்

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு