பட்டதாரிகளுக்கு கடலோரக் காவல்படையில் அதிகாரி வேலை
பட்டதாரிகளுக்கு கடலோரக் காவல்படையில் அதிகாரி வேலை
கடலோரக் காவல்படையில் அசிஸ்டன்ட் கமாண்டன்ட் (ஜெனரல் டியூட்டி) பணிக்குத் தகுதியான பட்டம் முடித்த ஆண் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தேர்வானவர் களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் பயிற்சி தொடங்கும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தங்கள் பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், கணிதம் படித்திருப்பது முக்கியம். தொடர்ச்சியான கல்வியின் மூலம் மேற்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 1-7-84 ஆம் தேதிக்கும், 30-6-88 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள். அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகளும் உண்டு.
உடல் தகுதி: உயரம் குறைந்தது 157 செ.மீ. மார்பளவு சாதாரண நிலையில் இருந்து 5 செ.மீ. விரிவடையவேண்டும். உயரம் - வயதுக்கு ஏற்ற உடல் எடை தேவை.
தேர்வுகள்: இரண்டு பிரிவாக தேர்வுகள் நடத்தப்படும். கொல்கத்தா, புவனேசுவர், விசாகப்பட்டினம்;, சென்னை, கொச்சி, மும்பை, நாக்பூர், போர்ட் பிளேயர், நொய்டா (உ.பி.) ஆகிய நகரங்களில் துவக்க நிலைத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வு விண்ணப்பதாரரின் மனநிலைத் திறனறியும் விதத்தில் நடத்தப்படும். பொது அறிவு, ரீசனிங் உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
இதன் பின்னர் சென்னை, நொய்டா ஆகிய இடங்களில் இறுதிக்கட்டத் தேர்வு நடத்தப்படும். உளவியல் சோதனை, குழுத் தேர்வு, பெர்சனாலிட்டி தேர்வுகள் ஆகியவை இறுதிக்கட்டத் தேர்வில் அடங்கி உள்ளன. இதில் வெற்றி பெற்றவர்களின் மருத்துவத் தகுதிகளும் உறுதி செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இதற்கான மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் அனைத்தும் நவம்பர் 22-28, 2008 ஆம் தேதிக்கான எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் கொடுக்கப்பட்டுள்ளது.
நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் பின் வரும் முகவரிக்கு 31-12-08 ஆம் தேதிக்குள் சென்றடையவேண்டும்.
The Director (MPR&T), Post Box No. 127, Noida (UP) - 201 301
கருத்துகள்