ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

18 நவம்பர், 2008

கிளிநொச்சியை, இலங்கை ராணுவம் கைப்பற்ற விடமாட்டோம் : பிரபாகரன் சூளுரை!


பூநகரியில் இருந்து பின்வாங்கியது போர்தந்திரம்

கிளிநொச்சியை, இலங்கை ராணுவம்
கைப்பற்ற விடமாட்டோம் : பிரபாகரன்சூளுரை!

கிளிநொச் சியை இலங்கை ராணுவம்கைப்பற்ற விடமாட்டோம் என்று, விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் சூளூரை ஏற்றுள்ளார். பூநகரியில் இருந்து பின்வாங்கியது போர் தந்திர நடவடிக்கையே என்றும் அவர்கூறி இருக்கிறார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே உச்ச கட்ட போர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் முக்கியகடற்படை தளமான பூநகரியை கைப் பற்றிய ராணுவம், விடுதலைப் புலிகளின்அரசியல் தலைநக ராக விளங்கும் கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வருகிறது.

இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் ஆதரவு கட்சியான தமிழ் தேசியகூட்டமைப்பின் எம்.பி.க்கள் சேனாதிராஜா ஜெனந்த மூர்த்தி மற்றும் சந்திர நேருஆகியோர் வன்னிப் பகுதிக்குச் சென்று, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கதலைவர் பிரபாகரனை சந் தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது, கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று, விடு தலைப்புலிகள் சூளூரை ஏற்று இருப்பதாக அவர்களிடம்பிரபாகரன் தெரிவித்தார்.

பூநகரி பிரதேசத்தில் இருந்து பின்வாங்கிச்சென்றது போர் தந்திர உபாயமே. இன்னும் 3 மாதங்களுக்குள் ராணு வத்துக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதல்முன்னெடுக்கப்படும் என்றும் பிரபாகரன் கூறி இருக்கிறார்.

இந்த சந்திப்பு தொடர்பான விவரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிலஎதிர்க்கட்சி உறுப்பினர் களுக்கு ஜெனந்த மூர்த்தி வழங்கி இருக்கிறார். இந்ததகவல்கள், கொழும்பில் நேற்று வெளியிடப்பட்டன. இதற்கிடையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் அளித்த பேட்டிஒன்றில் என்ன விலை கொடுத்தேனும் கிளி நொச்சியை பாதுகாப்பது எனதிடமான சபதம் ஏற்று விடு தலைப்புலிகள்போராடி வருவ தாக தெரிவித்தார். பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது அவர் மேலும் கூறிய தாவதுசரண் அடைந் தால்தான் போர் நிறுத்தம் என்று ராஜபக்சே கூறுவதை ஏற்கமுடியாது. புலிகளின் ஆயுதங்கள் என்பது, தமிழ் மக்களின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. தமிழ் மக் களுக்கு பாதுகாப்பு அச்சுறுத் தல் இருக்கும் வரைபுலிகளின் ஆயுதங்கள்தான் மக்களுக்கான கேடயங்கள். இங்குள்ள ஒவ்வொருதமிழ ரும் வீரத்தை வெளிப்படுத் தியபடி, தியாகங்களை புரிந்த படி போராடிவருகிறார்கள். கடந்த 30 வருடங்களாக எங்களுடைய சுதந்திர தீயைஅணையவிடாது பாதுகாத்துக் கொண்டு இருக்கிறோம். எங்களுடையதியாகங்கள் என்றைக்கும் வீண் போகாது.

தமிழக அரசு தலையிட்ட பிறகு இந்திய அரசு மேற் கொண்ட முயற்சிகளினால்இங்கே எந்த மாற்றமும் நிகழ வில்லை. மாறாக, சிங்களப் படையினர் போரைதீவிரப் படுத்தி இருக்கின்றன. தமிழ கத்தின் எழுச்சிக்கோ, இந்திய அரசின்முயற்சிக்கோ சிங்கள அரசு செவிசாய்த்ததாக தெரிய வில்லை. வெளிநாட்டுஅரசுகளும் நிதி அமைப்புகளும் கடந்த காலங்களில் அளித்த பல்வேறு நிதிஉதவிகள் எமக்கு வந்து சேரவில்லை. தமிழக அரசு மத்திய அரசு வழியாக வழங்கும் நிவாரண உதவிகள், இந்த அமைப்பின் வழியாக அனுப்பிவைக்கப்பட்டால்தான் முழு மையாக தமிழ் மக்களை சென்றடையும். அல்லதுஐக்கிய நாடுகள் பொது அமைப்புகள் மூலம் நேரடி யாக வன்னிப்பகுதிக்குகொண்டு வரப்பட்டு வழங்கப்பட வேண் டும்.

மாறாக, தமிழக மக்களின் நிதி சிங்கள அரசின் கைகளுக் குப்போனால், அதுபேராயுதங்களாக மாறி ஈழத்தமிழர்களை அழிக்கும் என்பதுதான் உண்மை.


லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு