"ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு செய்யப்பட்டதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; ஒரு "டிவி'யும், ஒரு பத்திரிகையும் தொடர்ந்து தவறான செய்திகளையே வெளியிட்டு வருகிறது
சென்னை: "மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மூலம், "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடுசெய்யப்பட்டதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; ஒரு "டிவி'யும், ஒரு பத்திரிகையும்தொடர்ந்து தவறான செய்திகளையே வெளியிட்டு வருகிறது' என முதல்வர் கருணாநிதிதெரிவித்துள்ளார்.
தொலைத்தொடர்புத் துறையில், உரிமம் வழங்குவதில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் யெச்சூரி மற்றும் பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனரே?
மத்திய அமைச்சர் ராஜா, சென்னையிலும், டில்லியிலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, இந்தப் பிரச்னைகுறித்து விவரமாகவும், விளக்கமாகவும் பல் வேறு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார். அவரது விளக்கத்திற்கு பிறகும் வேண்டுமென்றே ஒரு பத்திரிகை, இதுகுறித்து தொடர்ந்து தவறான செய்திகளையே திருப்பிதிருப் பிச் சொன்னால், அது உண்மையாகி விடாதா என்ற எண்ணத்துடன் தங்களுக்கு தெரிந்த சிலரைப்பிடித்து, வெளியிடச் செய்து வருகிறது. தொலைத்தொடர்புத் துறையில் உரிமங்கள் மற்றும் அலைவரிசைஒதுக்கீட்டில் முதலில் விண்ணப்பம் செய்தவருக்கு முன்னுரிமை என்ற விதி, 2003ம் ஆண்டுக்குமுன்பிருந்தே கடைபிடிக்கப்பட்டு வந்திருப்பதை கோப்புகள் வாயிலாகவே அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
கடந்த 2003ல் பா.ஜ., ஆட்சியில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பிலே இருந்தவர் அருண்கிஷோரி. அவர் கோப்பிலே கையெழுத்திட்டதையே தற்போது மத்திய அமைச்சர் ராஜா தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார். இதே அடிப்படையில் தான் தற்போதும் அந்த உரிமம் வழங்கப் பட்டுள்ளது. வேண்டுமென்றே தி.மு.க., மீதும், அமைச்சர் மீதும் பழி சுமத்த வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்துவிஷமப் பிரசார பணியிலே ஈடுபட்டுள்ளனர் என்பது தான் உண்மை.
அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு அறிவிப்புக்கு தாங்கள் தான் காரணம் என்பதைப் போல வேறு சில கட்சிகளும் கூறுகின்றனவே?
இந்த கோரிக்கையில் முனைப்புடன் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கட்சி என்பதை மறக்க மாட்டேன். ஏற்கனவே என் வீட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்து மருமகள்களும், மருமகன்களும் பல ஆண்டுகளுக்குமுன்னரே சமபந்தி உறவினர்களாகி விட்டனர் என்பதையும் பெருமிதத்துடன் எண்ணிப் பார்த்து மகிழ்ச்சிஅடைகிறேன். இன்றைக்கும் என்னிடம் 24 மணி நேரமும் அணுக்கத் தொண்டனாக இருந்து என்னைகவனித்துக் கொள்வதே நித்யா என்ற அருந்ததிய இளைஞன் தான்.
தமிழகத்திலே உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப மத்திய அரசு அறிவித்திருப்பதைப் போல தா.பாண்டியன், நெடுமாறன் போன்றவர்கள் சொல்லியிருக்கின்றனரே?
அந்தச் செய்தியில் உண்மை இல்லை என்று உடனடியாக அரசின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது. யுத்த நேரத்தில், உணர்ச்சிக்கு ஆளாகக் கூடிய இது போன்ற பிரச்னைகளில் உண்மை எதுவென்றுதெரியாமல், அவசரப்பட்டு அறிக்கை விட்டு மக்களை குழப்பி விடக்கூடாது. இவ்வாறு கருணாநிதிதெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூ.,வுக்கு அவசரம் ஏன்?
தங்கள் தலைமையில் ஒரு சில ஆண்டுகளாக இருந்த கட்சிகள், கூட்டணிக் கட்சிகளையே மதிக்கத் தெரியாத ஜெயலலிதாவிடம் அணி சேர துடிப்பதைப் பற்றி?
பயணம் செய்ய ரயிலுக்கு செல்பவர்கள், அதிலே இடம் பிடிக்க ஒருவருக்கொருவர் முந்திச் செல்லநினைப்பதில்லையா? அது போன்றது தான் இதுவும். தேர்தல் பயணமே தவிர லட்சியப் பயணம் அல்ல. தேர்தல் எப்போது என்று தெரியாத நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் மிகவும் தான்அவசரப்படுகின்றன.
ஜெயலலிதாவை சந்திக்கச் சென்றவர்கள், நல்லகண்ணுவை கூட அழைத்துச் செல்லாமல் சென்றதில்இருந்தே, அவர் களின் அவசரம் தெரியவில்லையா? அழைப்பின் பேரில் சென்றதாக பரதன் கூடச்சொல்லியிருக்கிறார். அவருடைய கட்சியிலே இருப்பவர்கள் வேறு எங்கும் சென்று விடாமல் இருக்க, தான்சுறுசுறுப்பாக இருப்பதைப் போலக் காட்டிக் கொள்ளவும், மற்ற கட்சிகள் எல்லாம் இவரிடம் கூட்டணிஅமைக்க துடித்துக் கொண்டிருப்பதைப் போலவும் ஒரு நாடகத்தை அரங்கேற்றப் பார்க்கிறார். அதற்கு ஒருசிலர் இரையாகின்றனர்; அவ்வளவு தான்.
விலைவாசி உயர்வை தி.மு.க., மறைக்கிறது என்று தே.மு.தி.க., தலைவர் பேசியிருக்கிறாரே?
படப்பிடிப்பு முடிந்து விட்டதா
கருத்துகள்