பிள்ளையைக் கொடுப்பது கடவுள் செயல் என்றால், கள் ளத்தனமாகக் கூடி பிள்ளை களைப் பெறுகிறார்களே - அதற்கும் ஆண்டவன்தானே காரணம்?


நாட்டுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலையில் கூடஅரசியல் ஆதாயம் தேடுவதற்காக அத னைப் பயன்படுத்திக்கொள் ளும் பாஜகட்சியின் போக்கைக் காங்கிரசுக் கட்சிகடுமையாக விமர்சனம் செய்துள்ள.
உலகமே இந்திய நாட்டின் பக்கம் கவலையுடன் இருக்கும்போது பாஜக மட்டும் அரசைக் குறைகூறி வருகிறது. மும்பைத்தாக்குதல் தொடர்பாக மோச மான விளம்பரங்களை டில்லிசெய்தித்தாள்களில் வெளியிடும் பாஜகட்சியையும் அதன் குஜராத் முதல் அமைச்சரையும் வன்மையாகக் கண்டித்துள் ளனர். கலவரம் நடந்தநேரத் தில் எந்த ஒரு மாநில அர சையோ, மய்ய அரசையோ காங்கிரசு குறைகூறியது கிடை யாது. ஆனால் பிரதமர் கனவில் மிதக்கும் அத்வானி இதனைச்செய்கிறார் என்று மய்ய அமைச்சர் கபில் சிபில் கூறி யுள்ளார்.
அக்ஷார்தம் கோயிலில் 2002இல் நடந்த குண்டு வெடிப் பில்பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை இதுவரைஅளிக் காத குஜராத் முதல் அமைச்சர் மோடி இப்போது ஒரு கோடி ரூபாய் உதவிஎன அறிவித்திருப் பது வேடிக்கைதான் என்று வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

சித்து

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோதி சித்து பா...வில் சேர்ந்து மக்களவைஉறுப்பின ராகவும் ஆகிவிட்டார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மதஉணர்வுகளைத் தூண்டிய வகை யில் பிரச்சாரம் செய்ததாக வழக்கு ஒன்றுஅவர்மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
அப்படிப் பார்க்கப் போனால், பா...வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்ஒவ்வொருவர்மீதும் இந்த வழக்கு பாயவேண்டுமே!
பா... என்ற ஒன்றும், அதன் சங் பரிவாரங்களும் இருக்கின்றவரை - அனுமதிக்கப்படும்வரை - இந்தத் தனி நபர்மீதான வழக்கு என்ப தெல்லாம் கண்துடைப்பே!

வழக்கு

உச்சநீதிமன்றத்தில் நிலுவை யில் இருக்கும் முல்லை பெரி யாறு வழக்குவிசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கரு நாடகம் ஏற்றுக்கொண்டதாஎன்ன?

ஆண்டவனா?

தேனி மாவட்டம் வீர பாண்டி அருகே கள்ளத்தொடர் பால் பிறந்த குழந்தையைபெற் றோர்கள் கொன்று விட்டன ராம். வழக்குப் பதிவு செய்யப் பட்டு சிறையில்அடைக்கப் பட்ட அவர்கள், பிணை கேட்டு நீதிமன்றத்திற்குச் சென்ற போது, பிணை மறுக்கப்பட்டு விட்டது.
பிள்ளையைக் கொடுப்பது கடவுள் செயல் என்றால், கள் ளத்தனமாகக் கூடிபிள்ளை களைப் பெறுகிறார்களே - அதற்கும் ஆண்டவன்தானே காரணம்?

இப்படியும்

மிசோரமில் பெண் வாக் காளர்கள் தான் அதிகம். மொத்தம் 6 லட்சத்து 11 ஆயிரத்து 124 வாக்காளர்களில், பெண் வாக்காளர்கள் 3 லட் சத்து எட்டாயிரத்து 840 பேர் கள் ஆவர்.
இருந்தும் என்ன பயன்? போட்டியிடும் பெண் வேட் பாளர்களின் எண்ணிக்கையோவெறும் ஒன்பதுதான். போட் டியிடும் மொத்த வேட்பா ளர்கள் எண்ணிக்கையோ
பெண்களுக்கு 33 விழுக் காடு இடங்கள் என்பதை எதிர்க்க நாடாளுமன்ற உறுப்பினர்களே தயாராக இருக் கும்பொழுது மிசோராமில் இந்த நிலை என்பதுஆச்சரியப் படத்தக்கது அல்லவே
205.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்