இடுகைகள்

நவம்பர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெனாவட்டு ;கூவாகம் திருவிழாவை இவ்வளவு விபரமாக ஆவணப்படங்களில் கூட பாத்திருக்க முடியாது.

படம்
தெனாவட்டு இரும்படிக்கிற தொழில் செய்கிற ஹீரோ, எறும்படிக்கிற மாதிரி வில்லனை அடித்துப் போடுகிறார். தம்பியை அடித்த ஹீரோவை வில்லனின் அண்ணன் துரத்த, காதலியோடு ஓடுகிறார் ஹீரோ. அவரே துணிச்சலாக திரும்பி நின்றால் என்னாகும்? இப்படி இரண்டரை மணிநேர படத்தில் மோதல், ஆக்ஷன் என்று கலவரப் பொங்கலை பரிமாறியிருக்கிறார் இயக்குனர் கதிர். அங்கங்கே தென்படும் காதல் முந்திரியில் மட்டும் கனஜோரான ருசி. கிராமத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வரும் ஜீவா, ரவிகாளேயிடம் வேலைக்கு சேருகிறார். தொழில் அருவா அடிச்சு கொடுப்பது. இதற்கிடையில் பூனம் பாஜ்வாவிடம் காதல் வயப்படுகிற ஜீவா, தனது காதலியை ஒருவன் நடுரோட்டில் மானபங்க படுத்த முயலும்போது, அவனை நையப்புடைக்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கும் அவன், ரவிகாளேயின் தம்பி என்று தெரிய வரும்போது, தைரியமாக அவரிடமே போய், “தம்பி தப்பு பண்ணுச்சு. நான்தான் அடிச்சேன்” என்று தலையை கொடுக்கிறார். பிறகென்ன..? தலையை எடுக்க ரவிகாளே துரத்த, காதலியை காப்பாற்ற ஊரைவிட்டே

கொக்கரக்கோ நாயகன் படத்தின் ரிசல்ட்டை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

படம்
கொக்கரக்கோ சத்தத்தில் கோடம்பாக்கத்தையே மிரட்டிய இயக்குனரும், அப்படத்தில் நடித்த ஹீரோவும் மேற்படி படத்தின் ரிசல்ட்டை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள். போட்ட பணத்தில் பாதியை கூட வசூல் செய்யவில்லையாம் கொக்கரக்கோ! படத்தை நல்ல விலைக்கு தள்ளிவிட்டு ஒதுங்கிக் கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர், இன்னும் கொஞ்ச நாளைக்கு பழைய தொழிலான விநியோகத்தையே பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். இதற்கிடையில், கொக்கரக்கோ நாயகன் தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம், இப்போது வேண்டாம். சிக்ஸ் முகம் வந்ததும் அட்வான்ஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறாராம். கொக்கரக்கோவுக்கு முன்பே கொண்டு வந்த அட்வான்சை வாங்கியிருக்கலாம். அப்போதும் இந்த படம் வரட்டும். வந்தபின் அட்வான்ஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றார். இப்போது சிக்ஸ் முகத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ரிசல்ட்டாவது நல்லபடியாக அமையட்டும் என்கிறார்கள் கொக்கரக்கோவை வைத்து படம் இயக்க விரும்பும் தயாரிப்பாளர்கள். இதற்கிடையில் ஆணானப்பட்ட உச்ச நடிகர், உலக நடிகர், புதுக்கட்சி நடிகர் என்று எல்லாரையும் சோதனைக்

ஸ்ரேயாவின் சந்தோஷம் ஹாலிவுட் படத்தின் ரிலீஸ் தினத்தோடு போய்விட்டது.

படம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது என்று சந்தோஷப்பட முடியாத நிலையில் இருக்கிறார் ஸ்ரேயா. அதே நிலையில்தான் இருக்கிறார்கள் த்ரிஷாவும், நயன்தாராவும். கந்தசாமி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, "நான் ஹாலிவுட் படத்திற்கு போகணும். என் போர்ஷனை சீக்கிரம் முடிங்க" என்று அப்படத்தின் இயக்குனர் சுசிகணேசனுக்கு பிரஷர் கொடுத்த ஸ்ரேயா, சொன்ன மாதிரியே அவசரம் அவசரமாக அங்கே போய் நடித்துக் கொடுத்தார். ஆனால், ஸ்ரேயாவின் சந்தோஷம் ஹாலிவுட் படத்தின் ரிலீஸ் தினத்தோடு போய்விட்டது. வெளிவந்த சில நாட்களிலேயே அந்த படம் பயங்கர ஃபிளாப் ஆகிவிட்டதாம். ஹாலிவுட் தள்ளிவிட்டால் என்ன? பாலிவுட் இருக்கிறதே என்று சந்தோஷப்பட்டவருக்கு அங்கேயும் இதே நிலை. இவர் நடிப்பில் வெளிவந்த பாலிவுட் படங்களும் வந்த வேகத்திலேயே தியேட்டரை விட்டு ஓட, சென்¬க்கே ஓடி வந்துவிட்டார் ஸ்ரேயாவும். தங்களின் போட்டியில் ஒருவர் விலகிப் போய்விட்டார் என்று ஸ்ரேயாவின் இந்திப்பட மோகத்தை சந்தோஷமாக அனுபவித்து வந்த த்ரிஷாவும், நயன்தாராவும் அவரது சென்னை வருகையை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள். வந்த வேகத்தில் வலையை வீச ஆரம்பித்த

பிள்ளையைக் கொடுப்பது கடவுள் செயல் என்றால், கள் ளத்தனமாகக் கூடி பிள்ளை களைப் பெறுகிறார்களே - அதற்கும் ஆண்டவன்தானே காரணம்?

படம்
நாட்டுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலையில் கூட அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அத னைப் பயன்படுத்திக் கொள் ளும் பாஜகட்சியின் போக்கைக் காங்கிரசுக் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ள . உலகமே இந்திய நாட்டின் பக்கம் கவலையுடன் இருக்கும் போது பாஜக மட்டும் அரசைக் குறைகூறி வருகிறது . மும்பைத் தாக்குதல் தொடர்பாக மோச மான விளம்பரங்களை டில்லி செய்தித்தாள்களில் வெளியிடும் பாஜகட்சியையும் அதன் குஜ ராத் முதல் அமைச்சரையும் வன்மையாகக் கண்டித்துள் ளனர் . கலவரம் நடந்த நேரத் தில் எந்த ஒரு மாநில அர சையோ , மய்ய அரசையோ காங்கிரசு குறை கூறியது கிடை யாது . ஆனால் பிரதமர் கனவில் மிதக்கும் அத்வானி இதனைச் செய்கிறார் என்று மய்ய அமைச்சர் கபில் சிபில் கூறி யுள்ளார் . அக்ஷார்தம் கோயிலில் 2002 இல் நடந்த குண்டு வெடிப் பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை இதுவரை அளிக் காத குஜராத் முதல் அமைச்சர் மோடி இப்போது ஒரு கோடி ரூபாய் உதவி என அறிவித்திருப் பது வேடிக்கைதான் என்று வீரப்ப மொய்லி கூறியுள்ளார் .

தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடுகள் தீயைக் கக்கும் தலையங்கத்தைத் தீட்டி தம் ஆற்றாமையை வெளிப் படுத்திக் கொண்டன

படம்
1993 தேர்தலில் ஜனதா தளத் தேர்தல் அறிக்கை வெளிவந்தது . தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு அதில் மிக முக்கியமாகக் குறிப் பிடப்பட்டு இருந்தது . பொறுக் குமா பார்ப்பனர்களுக்கு ? தினமணி , இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடுகள் தீயைக் கக்கும் தலையங்கத்தைத் தீட்டி தம் ஆற்றாமையை வெளிப் படுத்திக் கொண்டன . துரதிர்ஷ்ட வசமாக ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கை நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மீது கவனம் செலுத்தவில்லை . தனியார்த் துறைகளிலும் மண்டல் கமிஷனை அமல் படுத்தக் கோருவது பெரும் பான்மை மக்களை அந்நியப் படுத்தும் என்று எழுதியது தினமணி . பிற்படுத்தப்பட்ட மக்களும் , தாழ்த்தப்பட்ட மக்களும் பெரும் பாலான மக்கள்தானே . இந்த நிலையில் , தனியார்த் துறை களில் இட ஒதுக்கீடு என்பது எப்படி பெரும்பான்மை மக்களை அந்நியப்படுத்தும் ? வி . பி . சிங் பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு , ஜனதா தளம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மறக் காமல் - கொண்ட கொள்கை யில் சிறிதும் நழுவாமல் , தனி யார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிக்கு

தமிழ், ஜோக்ஸ், jokes,

என்ன பெரியவரே கரண்ட் எப்ப போச்சு? போன மாசம்னு நினைக்கிறேன் தம்பி, கடைசியா கரண்ட் எப்ப இருந்துச்சுன்னு சரியா ஞாபகம் இல்ல - ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- - தம்பி -உங்க பாட்டை கேட்டா போதும் என்னோட துக்கம் எல்லாம் பறந்து போயிடும். நிஜமாவா? ஆமாம், உ‌ங்க பா‌ட்டு‌க்கு மு‌ன்னா‌டி எ‌ன்னோட சின்ன சின்ன துக்கமெல்லாம் ப‌ற‌ந்து -போ‌யிடு‌ம்ல

இந்தியர்கள் ஒரு காலத்தில் குடிநீர் இல்லாமல் திண்டாட வேண்டி வரலாம்

படம்
இமாலயத்தில் உள்ள 3 முக்கியப் பனிமலைகளை குடைந்து பார்த்த போது அதில் பனி தொடர்ந்து இருப்பதற்கான கதிர்வீச்சு சமிக்ஞைகள் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்பொழுது ஏற்பட்டுவரும் தட்பவெப்ப மாற்றங்களால் அங்கு பனி சேருவதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், குறைந்தது அரை பில்லியன் (50 கோடி) இந்தியர்கள் ஒரு காலத்தில் குடிநீர் இல்லாமல் திண்டாட வேண்டி வரலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இல்லாமல் போன அந்தக் கதிர்வீச்சு அரை நூற்றாண்டுக்கு முன்னர் நடத்தப்பட்ட அணு குண்டு சோதனையின் விளைவாய் ஏற்படுவது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திபெத்தில் உள்ள நைமோனான்யி போன்ற பனிமலைகளால்தான் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் வற்றாத ஜீவ நதிகளாக இருந்து வருகின்றன. இதே நதிகள், சில இடங்களில், சில மாதங்களில் தண்ணீர் இல்லாமல் வற்றியிருப்பதன் காரணமும் இதுவாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் பனிமலைகளில் புதிதாக பனி உருவாவதில்லை என்பது பிரச்சனைகளை மேலும் மோசமாக்கலாம் என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக் கழக புவியியல் வி

உளவு முன்னெச்சரிக்கை வராதது ஏன்?மும்பை நகரம் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

படம்
2001 ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தின் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு இரண்டாவது பெரிய பயங்கரவாதத் தாக்குதல் மும்பையில் நடந்துள்ளது. இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பை நகரம் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம், தாஜ், டிரைடண்ட் நட்சத்திர விடுதிகள், நாரிமேன் மாளிகை, வில்லே பார்லே, மெட்ரோ திரையரங்கு ஆகியன உட்பட 9 இடங்களை குறிவைத்து நேற்று இரவு புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,187க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். தாஜ் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்நிய நாட்டு முக்கிய நபர்கள் ஆகியோர் உள்ளிட்ட பலரை பயங்கரவாதிகள் பிணையமாக பிடித்துவிட்ட நிலையில், அவர்களை மீட்க விடுதிக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்திய மும்பை காவல் துறை அதிகாரி கார்க்கரே உட்பட 3 அதிகாரிகளும், 11 காவலர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர மற்ற இடங்களில் நடந்த மோதல்களில் அசோக் காம்தே, விஜய் சலாஸ்கார் உள்ளிட்ட அதிகாரிகளும், மேலும் பல காவலர்களும் உயிரிழந்துள்ளனர். பய

ஆனால் நேற்றிரவு நடந்த ஆலோசனை‌க்குப் பிறகு பாகிஸ்தான் தனது நிலையை மாற்றிக் கொண்டு ஐ.எஸ்.ஐ உறுப்பினரை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளது

படம்
மு‌ம்பை பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌ல் ‌விசாரணை தொட‌ர்பாக பா‌கி‌ஸ்தா‌‌னி‌ன் உ‌ள்நா‌ட்டு‌ப் புலனா‌ய்வு அமை‌ப்பான ஐ.எ‌ஸ்.ஐ.‌யி‌ன் தலைவ‌ரை இ‌ந்‌தியா‌வி‌ற்கு அனு‌ப்‌பி வை‌ப்பதாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான், தற்போது ஐ.எஸ்.ஐ. அதிகாரிக‌ள் மட்டும் அனுப்பி வைக்கப்படுவர் எனக் கூறியுள்ளது. இஸ்லாமாபாத்தில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ராணுவத் தளபதி பர்வேஸ் கயானி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோர் நடத்திய அவசர ஆலோசனை‌யில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகு‌றி‌த்து‌ப் பா‌‌கி‌ஸ்தா‌ன் ‌பிரதம‌ர் யூசு‌‌ப் ரசா ‌கிலா‌னி‌யி‌ன் பே‌ச்சாள‌ர் ஜா‌கி‌த் ப‌ஷீர் கூறுகை‌யி‌ல ், " மு‌ம்பை தா‌க்கு‌த‌ல்க‌ள் தொட‌ர்பான ‌விசாரணை ‌ஒ‌த்துழை‌ப்பு தொட‌ர்பாகவு‌ம ், ‌ சில தகவ‌ல்களை‌ப் ‌ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்வத‌ற்காகவு‌ம் ஐ.எ‌ஸ்.ஐ. உறுப்பினர் ஒருவர் இ‌ந்‌தியா‌வி‌ற்கு அனுப்பப்படுவார் எனத் தெரிவித்தார். மு‌ம்பை பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌ல் ‌விசாரணை தொட‌ர்பாக ஐ.எ‌ஸ்.ஐ.‌யி‌ன் தலைவ‌ர் லெ‌ப்டின‌ன்‌ட் ஜெனர‌ல் அகமது சுஜா பாஷாவை இ‌ந்‌தியா‌வி‌ற்கு அனு‌ப்‌பி வை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று

போலீஸ் அதிகாரி வேடமேற்கும் சினேகா,; போலீசார் வந்து இந்து முன்னணியினர் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

படம்
' வைஜெயந்தி ஐபிஎஸ்'சின் ரீமேக்கான 'பவானி'யில் போலீஸ் அதிகாரி வேடமேற்கும் சினேகா, இதற்காக தனது மேனரிஸங்களை ரொம்பவே மாற்றிக்கொண்டு வருகிறாராம். இதற்காக, தனது இயல்பான புன்னகையை மறந்து௦ எப்போதும் முறைத்த பார்வையும், விரைத்த நடையுமாக இருக்க பழகிக்கொண்டிருக்கிறார் சினேகா. இந்நிலையில், அவருக்கு கோபத்தை தூண்டும் வகையிலேயே படப்பிடிப்பில் பலவிதமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் பாளையங்கோட்டை ராமர் கோவிலில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது, அங்கு வந்த இந்து முன்னணியினர், கோவில் வளாகத்தில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். முறைப்படி அனுமதி பெற்றுதான் படப்பிடிப்பு நடத்துகிறோம் என்று இயக்குனர் ஆர்த்தி குமார் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் ரொம்பவே தொல்லை கொடுக்க, போலீசார் வந்து இந்து முன்னணியினர் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர் .

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் உரை ;உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; இந்தியாவுடன் நட்புறவு!

படம்
உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; இந்தியாவுடன் நட்புறவு! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் உரை எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலா சைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம் என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை: இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கவுரவிக்கும் புனித நாள். ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக் கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்கள

மண்டல் அமலாக்கம் என்பது வெறும் சம்பளத்திற்கான வேலை வாய்ப்பு மட்டுமல்ல. அதிகார வர்க்கத்தில் நமக்கு பங்கு கிடைக்க வேண்டும் என்பதுதான்.

படம்
வீரமணியிடமிருந்து பெறும் உணர்ச்சி: வி.பி. சிங் நான் என்னுடைய நன்றியை வெளிப் படையாக நண்பர் வீரமணி அவர் களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்பு கிறேன். ஏனெனில், மண்டல் ஆணையை நான் நடைமுறைக் குக் கொண்டு வந் தேன். அப்போது, வடபுலமே எனக்கு எதிராக கிளிர்ந்தெ ழுந்தது. ஆனால், ஒரு மாபெரும் கருங்கற் கோட்டையாக, மாபெரும் எஃகுக் கூடாரமாக நின்று எனக்கு நீங்கள் ஆதரவு அளித்ததை இப்போது நினைவு கூர்கிறேன். இரண்டு நாட்களாக நான் தமிழகத் திலே உலா வந்து கொண்டிருக்கிறேன். நான் எங்கே சென்றாலும் திராவிடர் கழகத் தோழர்கள் கருப்புச் சட்டையு டனும், திராவிடர் கழகக் கொடியுடனும் நின்று வரவேற்கிற காட்சியினை காண் கின்றேன். அது என் மனதை விட்டு அக லாத காட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. மிகப் பெரிய தலைவர் தந்தை பெரி யார்தாம் வாழ்ந்த காலத்திலே, இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமுதாயக் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும் பினார். அதன் காரணமாக இந்த சமூக அநீதியை - கொடுமையை துடைத்தெறிய

உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; இந்தியாவுடன் நட்புறவு! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் உரை

படம்
உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; இந்தியாவுடன் நட்புறவு! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் உரை எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலா சைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம் என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை: இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கவுரவிக்கும் புனித நாள். ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக் கிடந்த எமது தேசத்தை,

ஈழத் தமிழர் போராட்டம் குறித்து 'குமுதம்' ரிப்போர்ட்டரில் தவறான தகவல்கள்

ஈழத் தமிழர் போராட்டம் குறித்து 'குமுதம்' ரிப்போர்ட்டரில் தவறான தகவல்கள் 'யுத்த சரணம்' எனும் தலைப்பில் திரு பா.ராகவன் என்பவரால் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதப்பட்டு வரும் தொடர் தப்புத் தவறுமான தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டு இருக்கிறது என்று ஆலமரம் என்ற இணைய தளத்தில் வெளிவந்துள்ள இக்கட்டுரை அம்பலப் படுத்தியுள்ளது படியுங்கள். பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுத தொடங்கியி ருக்கின்ற "யுத்தம் சரணம்" என்ற தொடர் பெருத்த ஏமாற்றத்தை யும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இரண்டு பாகங்களே வெளியாகி இருக்கின்றன. அந்த இரண்டு பாகங்களும் பல தகவல் பிழைகளுடன், குழப்பங்களுடன் வெளியாகி உள்ளன. இத்தனைக்கும் இது இன்னும் 1948 நிகழ்வுகளுக்கோ, 1990க்கு முன்பான சூழலுக்கோ செல்ல வில்லை. கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து தான் இந்தத் தொடர் தற்பொழுது பேசுகிறது. அதிலேயே இத்தனை பிழைகள் என்றால் இலங்கையின் குழப்பமான ஆரம்பகாலம், போராளிக் குழுக் களுக்குள் நிகழ்ந்த சண்டை, இந்தியாவின் தலை

ஈழத் தமிழர் போராட்டம் குறித்து 'குமுதம்' ரிப்போர்ட்டரில் தவறான தகவல்கள்

படம்
ஈழத் தமிழர் போராட்டம் குறித்து ' குமுதம் ' ரிப்போர்ட்டரில் தவறான தகவல்கள் ' யுத்த சரணம் ' எனும் தலைப்பில் திரு பா . ராகவன் என்பவரால் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதப்பட்டு வரும் தொடர் தப்புத் தவறுமான தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டு இருக்கிறது என்று ஆலமரம் என்ற இணைய தளத்தில் வெளிவந்துள்ள இக்கட்டுரை அம்பலப் படுத்தியுள்ளது படியுங்கள் . பா . ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுத தொடங்கியி ருக்கின்ற " யுத்தம் சரணம் " என்ற தொடர் பெருத்த ஏமாற்றத்தை யும் , எரிச்சலையும் ஏற்படுத்துகிறது . இரண்டு பாகங்களே வெளியாகி இருக்கின்றன . அந்த இரண்டு பாகங்களும் பல தகவல் பிழைகளுடன் , குழப்பங்களுடன் வெளியாகி உள்ளன . இத்தனைக்கும் இது இன்னும் 1948 நிகழ்வுகளுக்கோ , 1990 க்கு முன்பான சூழலுக்கோ செல்ல வில்லை . கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து தான் இந்தத் தொடர் தற்பொழுது பேசுகிறது . அதிலேயே இத்தனை பிழைகள் என்றால்