ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

24 நவம்பர், 2008

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்தார் என்ற அறி வியலையும் படித்துவிட்டு கிரகணம் பிடிப்பதற்கு முன்னா லேயே குளித்து முடித்துவிட்டு சாப்பிட்டு விட வேண

கவிஞர்கள் தாராபாரதி, கவிமுகில் நூல்கள்
பல்கலைக் கழகங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியவை
சென்னை நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் பேச்சு


கவிஞர் தாராபாரதி, கவிஞர் கவி முகில் நூல்கள் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டிய நூல்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
கவிஞர் தாராபாரதி அறக்கட்டளையின் எட்டாம் ஆண்டு விழா கவிஞர் கவி முகிலின் நூல்கள் வெளியீட்டு விழா 21.11.2008 அன்று மாலை 5 மணிக்கு சென்னை - தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் மிகச் சிறப்பானதொரு எழுச்சி விழாவாக இலக்கிய விழாவாக இன உணர்வுப் பெருவிழாவாக நடைபெற்றது.
சுப்பு ஆறுமுகம் பேரன் - கலைமகன்
முதலாவதாக இசை அரங்கில் இன்னிசை தொடங்கி நடை பெற்றது.
கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களின் பெயரன் தி.கலைமகன் தாத்தாவைப் போல இன்னிசை நிகழ்ச்சியை நடத்தி அனைவருடைய கரவொலியையும் பெற்றார். அவரைத் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி நினைவுப் பரிசினை அனைவருடைய கரவொலிக்கிடையே வழங்கினார்.
நிகழ்ச்சிகளைப் பற்றிய விளக்கத்தை முனைவர் இரா.பிரேமா தொகுத்து வழங்கினார்.
அடுத்ததாக சென்னை இலக்கிய வீதி இனியவன் தாராபாரதி அறக்கட்டளை பற்றியும் கவிஞர் கவிமுகிலைப் பற்றியும் பெருமைபடக் கூறி விளக்கமளித்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இலங்கையில் இனப் படுகொலை யில் தங்களது இன்னுயிரை ஈந்த ஈழத் தமிழர்களுக்கு இரங்கல் மற்றும் மரியாதை தெரிவிக்கின்ற வகையில் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.
பேராசிரியர் இராம.குருநாதன் விழாவில் பங்கேற்ற சிறப்பாளர்களின் பெருமைகளைப் புகழ்ந்து விளக்கிப் பேசினார்.
தாராபாரதி படத்திறப்பு
தொடர்ந்து மறைந்த கவிஞர் தாராபாரதி அவர்களின் படத்தினை பிரபல தொழிலதிபர் ஒரத்தநாட்டிற்கு அருகில் உள்ள காவாரப்பட்டைச் சேர்ந்த ஆர்.கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார்.
தமிழர் தலைவர் நூலை வெளியிட்டார்
இதனைத் தொடர்ந்து கவிஞர் கவிமுகில் அவர்கள் எழுதிய நூல்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் (கவிமுகிலின் முச்சந்தி என்ற நூலினை) அனைவருடைய கைதட்டல்களுக்கிடையே வெளியிட முதற் படியை எஸ்.சங்கர வடிவேலு (அய்.ஆர்.எஸ்.) பெற்றுக் கொண் டார்.
கவிமுகில் கவிதைகளை ஈரோடு தமிழன்பன் வெளியிட டிஏவி கல்வியியல் கல்லூரி தலைவர் எஸ்.வரதராஜன் பெற்றுக்கொண் டார். கவிமுகிலின் குநயவாநசநன குநளவடிடிளே என்ற நூலினை கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வெளியிட காவல் துறை முன்னாள் உதவி ஆணையர் சி.இராஜமாணிக்கம் பெற்றுக் கொண்டார்.
பங்கேற்றுப் பேசியோர்
நிகழ்ச்சியில் ஓவியர் வீர சந்தானம், ஈரோடு தமிழன்பன், தமிழச்சி தங்கப்பாண்டியன், திரைப்பட நடிகர் செந்தில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன், காவல் துறை முன்னாள் உதவி ஆணையர் சி.ராஜ மாணிக்கம் ஆகியோர் உரையாற்றினர்.
தமிழர் தலைவர் உரை
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்ட முக்கிய செய்தி வருமாறு:
இந்த நாள் என்றைக்கும் மறக்க முடியாத சிறப்பான ஒரு நிகழ்ச்சியாக தமிழ் இலக்கிய வரலாற்று நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இலக்கியவீதி இனியவன்
சென்னை கம்பன் கழகச் செயலாளர் இலக்கிய வீதி இனிய வன் மிகவும் அடக்கமானவர், அன்பாகப் பழகக் கூடியவர்.
நல்ல பூங்காவுக்கு - நல்ல இலக்கியக் காற்றை வாங்க உங் களை அழைத்துப் போகின்றோம். எனவே இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வர வேண்டும் என்று அழைத்தார்கள் - வந்திருக் கின்றோம் இங்கே.
இங்கே மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. தாராபாரதி யின் கவிதை நூலையும் நான்காவது நூலாக வெளியிட வைத் திருக்கின்றார்கள்.
இந்த கூட்டம் தாராபாரதி அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம். அதில் கவிஞர் கவிமுகில் எழுதிய நூல் கள் வெளியீட்டு விழாவும் இணைந்து இன்றைக்கு நடை பெற்றிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியைப்பற்றி நம்முடைய இனியவன் அவர்களே சில குறிப்புகளை எனக்குக் கொடுத்தார்கள்.
இன்றைக்கு வில்லிசை வித்தகர் கவிமாமணி சுப்பு ஆறு முகம் அவர்களுடைய பெயரன் கலைமகன் இன்னிசை நிகழ்ச் சியைக் கண்டு வியந்து பாராட்டுகிறோம். அவ்வளவு சிறப்பாக அவர் பாடினார்.
கவிமுகிலின் வறுமை
வாழ வழி தெரியாமல் தவித்துப் போகின்றவர்களுக்கெல் லாம் கவிமுகில் அவர்களுடைய நூல் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. இந்த நூல்கள் வடிவமைப்பிலே கூட உலகத் தரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கவிமுகில் குநயவாநசநன குநளவடிடிளே என்ற ஆங்கில நூலையும் எழுதியிருக்கின்றார்கள். அந்த நூலும் இங்கே வெளியிடப் பட்டிருக்கிறது.
பெரியார் கருத்துகள், அண்ணா கருத்துகள்
தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகள், அண்ணா அவர்களுடைய கருத்துகள் நாம் ஆங்கிலத்தில் முன்பே வெளியிட்டிருந்தோமேயானால் நம்முடைய திராவிட இயக் கத்தின் தாக்கம் முன்பே மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கும். தாரா பாரதி அவர்கள் ஒரு புரட்சி எழுத்தாளர். புரட்சி என் றாலே சமுதாயத்தைப் புரட்டிப் போடுவது என்பது பொருள்.
கடவுளை நம்பி கூழைக்கும்பிடுபோடுகின்ற கோழை களுக்கு சம்மட்டி அடி கொடுக்கின்றார். காகிதங்களை ஆயுதங்களாக ஏந்துங்கள் என்று சொல்லுகின்றார்.
பகுத்தறிவு, சுயமரியாதை
தாராபாரதி, கவிமுகிலன் நூல்கள் பகுத்தறிவை சுயமரி யாதையை, இன நலனை அடிப்படையாகக் கொண்ட நூல்கள். இவைகள் எல்லாம் சிறந்த இலக்கியங்கள்.
பழைய, பழைய புராணங்களையே நாம் படிப்பதற்கு பல்கலைக் கழகங்களில் வைத்திருக்கின்றோம்.
நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்தார் என்ற அறி வியலையும் படித்துவிட்டு கிரகணம் பிடிப்பதற்கு முன்னா லேயே குளித்து முடித்துவிட்டு சாப்பிட்டு விட வேண்டும் என்று படித்தவர்களே நம்புகின்ற மூடத்தனங்களும் இருக் கின்றன.
பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்குரியவை
எனவே தாராபாரதி, கவிமுகில் போன்றவர்களுடைய நூல்களை நம்முடைய பல்கலைக் கழகங்களில் நுழைய விட வேண்டும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.இராசேந்திரன் இதை பின்னாலே இசைவு தந்து வழி மொழிவார் என்று கருதுகின்றேன்.
எழுத்தாளர்கள் தாராபாரதி, கவிமுகிலின் நூல்கள் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு