ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

17 நவம்பர், 2008

மன்றத் தலைவர் மாற்றம்! ரஜினி அதிரடி முடிவு சுதாகர் என்பவரை அகில உலக ரஜினி ரசிகர் மன்ற தலைவராக நியமித்திருக்கிறார் ரஜினி.


மன்றத் தலைவர் மாற்றம்!
ரஜினி அதிரடி முடிவு

கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது சத்யநாராயணாவுக்கு! ஒரு காலத்தில் Sathya narayananகாரில் வந்து போய் கொண்டிருந்த ரஜினி ரசிகர் மன்ற தலைவர், தற்போது ஆட்டோவில்தான் வருகிறார். இந்த பின்னிறக்கம் பதவி விஷயத்திலும் நடந்திருப்பதுதான் பலருக்கும் அதிர்ச்சி.

சும்மா கிடக்கும் ரசிகர்களை தூண்டிவிடுவதாக கடந்த பல மாதங்களாக சத்யநாராயணா மீது கோபத்தில் இருந்தாராம் ரஜினி. அதுமட்டுமல்லாமல் ரசிகர் மன்றத்தில் தனக்கென்று தனி கோஷ்டி அமைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுதான் இந்த கட்டாய ஓய்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது என்கிறார்கள் மண்டப வாசலில்! மன்றங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இனிமேல் சத்யநாராயணா பெயரை போஸ்டர்களில் போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறதாம்.

தன்னுடன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒன்றாக படித்தவரும், ராகவேந்திரா மண்டப பொறுப்பாளர்களில் ஓருவருமான சுதாகர் என்பவரை அகில உலக ரஜினி ரசிகர் மன்ற தலைவராக நியமித்திருக்கிறார் ரஜினி. கடந்த முறை ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியை முறையாக தொகுத்தளித்தவரும் இவரேதான். தனக்கு முழு நம்பிக்கையான ஒருவரை இந்த பதவியில் அமர்த்த வேண்டும் என்று முடிவு செய்த ரஜினி, சுதாகரை மிகுந்த வற்புறுத்தலுக்கு பிறகுதான் சம்மதிக்க வைத்தாராம்.

ரசிகர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சுமா நியூ அப்பாயின்ட்மென்ட்?

லேபிள்கள்: , , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு