இந்தியாவின் 2 லட்சத்து 17 ஆயிரம் கிராமங்களில் தூய குடிநீர் இல்லை

பிற மாநிலங்களில்

  • இந்தியாவின் 2 லட்சத்து 17 ஆயிரம் கிராமங்களில் தூய குடிநீர் இல்லை என்று உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் நீர் ரசாயனப் பொருள்களால் மாசுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குடிநீரில் ஃபுளோரைடு கூடுதலாக உள்ளது. இவை அரியானா, டில்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ளன.

  • பழங்குடி மக்கள் நிறைந்த மாநிலமாக சட்டிஸ்கர் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அம்மாநில முன்னாள் பா.ஜ.க. அரசு செலவு செய்யவே இல்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இந்த வகையில் 8 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவு செய்யவில்லை.

  • இந்திய எகிப்து நாடுகள் அய்ந்து ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. விண்வெளி ஆய்வில் கூட்டு முயற்சி, வான்வெளியை அமைதிக்குப் பயன் படுத்துதல், வர்த்தகக் கூட்டுறவு போன்ற ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

  • போர்ப்படையைச் சேர்ந்த 7 பேரும் பொது மக்கள் 3 பேரும் ஜம்மு-காஷ்மீரில் குரேஸ் பகுதியில் காணாமல் போயுள்ளனர். பனிப் புயலில் சிக்கிக் காணாமல் போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவர்களில் ஒரு மேஜர், ஒரு லெப்டினன்ட் அடங்குவர்.

  • கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒரிசா, கந்தமால் பகுதிகளில் மய்ய வேளாண்அமைச்சர் சரத் பவார், அதிகாரிகளுடன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பழங்குடியினர் நல அமைச்சர் சிந்தியா, சமூக நீதி அமைச்சர் மீரா குமார் ஆகியோரும் உடன் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

  • ஆர்.எஸ்.எஸ்.காரரான கோவிந்தாச்சார்யா சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவர் - இப்போது உமா பாரதியின் பாரதீய ஜனசக்திக் கட்சியில் சேர்ந்து பணியாற்ற முன் வருகிறார். பா.ஜ. கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த இவர், வாஜ்பேயியை முகமூடி என்று வருணித்து வம்பில் சிக்கிக் கொண்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை