ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

20 நவம்பர், 2008

"சங்கராச்சாரியாரின் விலை என்ன? "கத்தரிக்காய், புடலங்காய், வெங்காயம் வாங்குவதுபோல

"சங்கராச்சாரியாரின் விலை என்ன? "

கடைகளில் கத்தரிக்காய், புடலங்காய், வெங்காயம் வாங்குவதுபோல சங்கராச் சாரி பதவியையும் விலைக்கு வாங்கலாம் என்று சொன் னால், சொல்கின்றவர்களைப் பார்த்து நகைப்பார்கள்தான்.

உண்மையைத் தெரிந்து கொண்டால், முதலில் நகைத் தற்காக வெட்கப்படவே செய்வார்கள்.

மாலேகான் குண்டுவெடிப் பில் சம்பந்தப்பட்டுள்ள தயா னந்த பாண்டே என்பவர் யார் தெரியுமா?

எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்திய இராணுவத்தில் விமானப் படையில் பணி யாற்றியவர். அதன்பின் வாரணாசிக்கு (காசிக்கு) வந்தார் - சுற்றுமுற்றும் பார்த் தார். சாமியார் தொழில் நல்ல வளமான தொழில் என்பதை உணர்ந்தார். சபலம் தட்டியது.

என்ன செய்தார் தெரி யுமா? வாரணாசியில் உள்ள ஒரு மடத்துக்கு ரூபாய் 15 லட்சம் கொடுத்து அந்த மடத்தின் சங்கராச்சாரியார் பதவியை விலைக்கு வாங்கி விட்டாராம்!

சங்கராச்சாரி பதவி என்றால், ஏதோ விலை மதிக் கப்பட முடியாத பெரும் பதவி யல்ல; விலைக்கு வாங்கக் கூடிய கத்திரிக்காய் போன் றதுதான் என்பது இதன் மூலம் விளங்கிடவில்லையா?

இந்தச் சங்கராச்சாரி என்ன செய்திருக்கிறார் 700 பேர்களுக்கு வன்முறைப் பயிற்சி கொடுத்து களத்தில் இறக்கிவிட்டுள்ளார். மாலே கான் கலவரம் மற்றும் பல் வேறு மோதல்களுக்கு இவர் ஒரு முக்கிய சூத்திரதாரி என்று தெரிகிறது.

லோகக் குரு இப்பொழுது கம்பியை எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

ஏற்கெனவே காஞ்சி சங் கராச்சாரிகள் இருவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்தவர்கள்தான்; இப்பொழுதுகூட பிணையில் தான் வெளியில் திரிகின் றனர்.

பட்டப்பகலில் பச்சைத் தமிழர் காமராசரைப் படு கொலை செய்ய முயன்ற கூட் டத்தில்கூட சங்கராச்சாரிகள் உண்டு (பூரி சங்கராச்சாரி தான்).

முற்றும் துறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வார் கள். ஆனால், பூரி சங்கராச் சாரிக்குக் குடும்பமே உண்டு! காஞ்சி சங்கராச்சாரிக்குக் குடும்பம் இல்லையென்றா லும், காதலிகள் உண்டு. இவர்கள் லோகக் குருக் களாம்! வெட்கக்கேடு!

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு