ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

5 அக்டோபர், 2008

செவ்வாயில் நீர்

செவ்வாய்த் தளத்திலே

செம்மண்ணுக் கடியிலே

கண்ணுக்குத் தெரியும் வைரங்கள்

வெண்ணிறப் பனிக்கட்டிகள் !

"புனித பசுத்தளம்" என்னும்

பனித்தளம் மீது

·பீனிக்ஸ் முக்காலி

ஆசனம் யுள்ளது !

கோடான கோடி ஆண்டுக்கு முன்

ஓடிய ஆற்று வெள்ளத்தின்

நாடித் துடிப்புகள் !

பனிக்கட்டி உறைந்த

நீரென்று

நிரூபித்துக் காட்டியது

தளவுளவி !

உயிர் நுண்ணணுக்களின்

மூலச் செல்லின் சந்ததிகள்

ஆழ்பனிக் கடியிலே

வீழ்ந்து கொண்டு உறங்குதா

என்று காண்பது அடுத்த

விண்வெளிப் பயணம் !

4 அக்டோபர், 2008

மீண்டும் மீண்டும் சிரிப்பு

"டாக்டர், எங்கப்பாவுக்கு இன்னும் பத்து நாள் கழிச்சி ஆபரேஷன் பண்ணுங்க...''

"ஏன்''

"சொத்துக்களை என் பேருக்கு இன்னும் மாத்தி எழுதல...''


*************


உமா: ஆபீசுக்கு போகும்போது உன் கணவர் `குட்நைட்'ன்னு சொல்லிட்டுப் போறாரே?...எதுக்கு?

ரமா: அங்க போய் தூங்கத்தானே போறார்.


*************


பெரியவர்: படிக்கட்டில் தொங்கும் தம்பிகளா, உள்ளே வாங்கப்பா...

மாணவர்கள்: ஏன் பெருசு?...

பெரியவர்: பஸ்சுக்குள்ளே நாம ஏறினாலும் நம்ம மேல பஸ் ஏறினாலும் `டிக்கட்' வாங்கப் போறதென்னவோ நாமதானே?...


*************


மதுமதி: என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன்

சுமதி: ஏன்?..

மதுமதி: என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிக்க முடியாது.


*************


"அவர் சாமி...உங்க சிஷ்யனை ஏன் துரத்திட்டீங்க?...''

"சாமியார் பெண் பக்தர்களை வசியப்படுத்துவதில் என்னையே மிஞ்சிட்டான். அதான்''.


*************


(செல்போன் கடையில்... கடைக்காரர் கிராமவாசியிடம்)

ரீசார்ஜ் பண்ணாமலே `லைப்' பூராவும் பேசலாம்னுதான் சொன்னோம். பேட்டரி சார்ஜ் பண்ணாமலே செல் பேசணுமன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்..


*************

நண்பர்-1: என் பையனுக்கு `செக்காலை' அதிபர் பொண்ணை கட்டி வச்சது தப்பாப் போச்சு!

நண்பர்-2: ஏன்,என்னாச்சு?

நண்பர்-1: எந்த நேரமும் அவளையே `சுத்திச் சுத்தி' வர்றான்.

சிரிக்கலாம் வாங்க

மல்லாக்கப் படுத்து வீட்டின் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்த நான் கால எந்திரத்தில் 2020-க்குப் பயணித்தால் என்ன எனத் திடீரென்று தோன்றியது.

மூளையைக் கசக்கி அங்கு பத்திரிகைகளில் நான் படித்த தலைப்புச் செய்திகளே இவை.

குறிப்பு : இதில் கூறப்படும் செய்திகள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல; சிரித்துவிட்டு மறந்துவிடுங்கள்; சிரித்துவிட்டு சில விஷயங்களைக் குறித்துச் சிந்தித்தாலும் சரி.

தேதி : 24.9.2020

1. ஸ்பைடர்மேன் பாகம் 15 இன்று வெளியீடு

2. ஆஸ்திரேலியா எட்டாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.

3. ஐஸ்வர்யாராயின் ஏழாவது திருமணம் - சல்மான், விவேக், அபிஷேக் பங்கேற்பு

4. பெட்ரோல் விலை சற்றே சரிவு – விலை லிட்டருக்கு ரூ. 999 மட்டுமே.

5. சன் டிவியில் "கோலங்கள்" 4,450 வது பாகத்தைத் தொட்டது.

6. இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தன் பதவியை ராஜினாமா செய்தார்.

7. திரிஷாவினுடைய இளைய மகள் ரஜினியின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பெயர் எம்.ஜி.ஆர்.

8. எட்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் 95 வயதாகும் கலைஞர் கருணாநிதி.

9. நடிகர் தனுஷுக்கும், இயக்குனர் சூர்யாவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது தனியார் பல்கலைக்கழகம்.

10. வரலாறு காணாத உயர்வு : பங்குச் சந்தை சென்செக்ஸ் 34,000 புள்ளிகளைத் தொட்டது.

11. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகப்பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம். அவரது சொத்துமதிப்பு 1,00,00,00,00,00,00,000 கோடி.

12. "கிரி டிவி" – மதுரையில் புதிய டிவி சேனலை அழகிரி துவக்கினார்.

13. நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை வேலைகள் விரைவில் முடிவடையும். நாடாளுமன்றத்தில் அமைச்சர் உறுதி.

14. காஷ்மீர் பிரச்சினையில் விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் – பிரதமர் ராகுல் காந்தி அறிக்கை.

15. சுனாமி தாக்கியதில் கலிங்கப்பட்டிக்குள் தண்ணீர் புகுந்தது. எதிரிக்கட்சிகளின் திட்டமிட்ட சதி என வைகோ முழங்கினார்.

16. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்.

17. இந்தியாவின் மக்கள்தொகை 220 கோடியை எட்டி மகத்தான சாதனை.

18. வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் இந்தியாவில் 43% பேர் என மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

19. பின்லேடன் சுற்றி வளைக்கப்பட்டான் – அமெரிக்கா அறிவிப்பு

20. ஓசோன் படலம் தடவப்பட்ட குடைகள் அமோக விற்பனை. இக்குடைகள் விற்பனையில் ரிலையன்ஸ் முன்னிலை.

21. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 220 ஆக விலை குறைந்தது. சென்ற வாரம் அது 230 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

22. வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் – விஜயகாந்த் அறிக்கை.

23. பிரேமானந்தாவின் அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அவர் நிரபராதி எனக் கூறி விடுவித்தார்.

24. அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு 95 MBPS - பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. மாத வாடகை ரூ. 51 மட்டுமே.

25. டாடா இண்டிகாம் தனது புதிய சலுகையை வெளியிட்டது. பத்துத் தலைமுறைக்கு வேலிடிட்டி உள்ள புதிய ப்ரீபெய்டு கார்டின் விலை ரூ. 69.

முயுற்சியுங்களேன்!


சில கேள்விகள் பார்க்க ஒன்றும் இல்லாதவை போல் தோன்றினாலும்,அதன் ஆழம் நம்மை வியக்க வைக்கும்,பிறகு தான் நம் தவறு நமக்கு புரியும்,அவற்றில் சில,

1.மேரி இன் அப்பாவிற்கு நான்கு குழந்தைகள்,
முதல் குழந்தையின் பெயர் AIBQ


இராண்டாவது குழந்தையின் பெயர் BJCR


மூன்றாவது குழந்தையின் பெயர் CKDS


எனில் நான்காம் குழந்தையின் பெயர்?

2.இது situation handling என்ற வகையறாவை சேர்ந்தது,

நீங்கள் உங்கள் காதலியுடன் ஒரு சிறிய காரில் சென்று கொண்டு இருக்கிறீர்கள், அந்த கார் இரண்டு பேரை மட்டுமே சுமக்க வல்லது,போகும் வழியில்,சற்றே தூரத்தில் நீங்கள் ,உங்கள் அப்பா மற்றும் உங்கள் நெருங்கிய, உங்களுக்கு கார் ஓட்ட கத்துகொடுத்த நண்பன் ஆகியோரை பார்கிறிர்கள் அவர்களை காரில் கடந்து போனால் வீண் கசப்பு வரும் என்கின்ற நிலையில்,நீங்கள் என்ன செய்வீர்கள்...அந்த இடத்தை தாண்டி சற்று தொலைவில் உள்ள restaurant இல் நடக்கும் பார்டியை (party)நீங்கள் உங்கள் காதலியுடன் attend பண்ண வேண்டும் எவ்வாறு செய்வீர்கள்?
3.typical classical question இது,
ஒரு வித்தியாசமான அல்லி செடி ஒரு நாளில் இரண்டு மடங்காக பெருகும்,அந்த செடிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு குளத்தை மூட நூறு நாட்கள் எடுத்து கொண்டன எனில்,அந்த குளத்தில் பாதியை மூட எத்தனை நாட்கள் எடுத்து கொண்டிருக்கும்?
4.நீங்கள் ஒரு சிறிய குளத்தில் ஒரு படகில் போகும் போது கடுமையான மழை வந்து விடுகிறது,உங்கள் படகில் இருந்து ஒரு கயிறு 50 cm கீழே நீட்டி கொண்டிருக்கிறது,அதில் குளத்தில் 25 cm உள்ளது எனில் முழு 50 cm குளத்தில் மூழ்க எவ்வளவு நேரம் ஆகும்?மழை குளத்தை நிமிடத்திற்கு இரண்டு cm என்ற நிலையில் நிரப்பி கொண்டு வருகிறது....
5.ஒரு physics question,ஒரு பாத்திரம் நிரம்ப தண்ணீர் ஊற்றி ஒரு சின்ன படகு போன்ற பொருளை மிதக்க விடுகிறிர்கள்,அந்த படகில் ஒரு கல்,இரண்டு இரும்பு துண்டு உள்ளது,அந்த படகு கஷ்ட பட்டு மிதக்கிறது,இப்பொழுது நீங்கள் அந்த கல்லையும் இரும்பையும் படகில் இருந்து எடுத்து அது மிதக்கும் தண்ணீரிலேயே போட்டு விடுகிரிர்கள் இப்பொழுது அந்த பாத்திரத்தை நிரம்பி இருந்த தண்ணீரின் level குறையுமா கூடுமா?பதில்களை comment மூலம் சொல்லலாம்.

விடை காண முடியாத கேள்விகளுக்கு பின்னால் விடை தரப்படும்.

கவிதை

அன்பானவராய்
ஆர்வம் மிக்கவராய்
இனிமை பேச்சு உடையவராய்
ஈகை கொண்டவராய்
உண்மையானவராய்
ஊக்கம் உள்ளவராய்
எளிமையானவராய்
ஐயம் இல்லாதவராய்
ஒளி மிக்கவராய்
ஓங்கிய புகழ் அடைந்தவராய்
ஔவை வழி நடப்பீராக.

லேபிள்கள்: