எட்டாம் வகுப்பு படிக்கும் மகனின் முயற்சியால், அந்த பெண்ணிடம் இருந்து உடல் உறுப்புகள்தானமாக பெறப்பட்டன.


தாயிடம் இருந்து கண், சிறுநீரகம் உள்ளிட்டஉடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. எட்டாம் வகுப்பு படிக்கும் மகனின் முயற்சியால், அந்த பெண்ணிடம் இருந்து உடல் உறுப்புகள்தானமாக பெறப்பட்டன.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் யூனியன் வெள்ளையக் கவுண்டம்பட்டியைச் சேர்ந்த தச்சு தொழிலாளி மருதை (39). அவரது மனைவிசாந்தி (32). அவர்களுக்கு சுரேஷ்குமார் (14) என்ற எட்டாம் வகுப்புபடிக்கும் மகனும், கோமதி (7) என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும்மகளும் உள்ளனர். கடந்த நான்கு நாள் முன்னர் சாந்திக்கு காய்ச்சல், தலைவலி ஏற்பட்டது. திருச்சி சூப்பர் பஜார் ஜி.வி.என்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளைக்காய்ச்சல்இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக, .பி.சி., தனியார்மருத்துவமனையில் சேர்ந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், சாந்திமூளைச்சாவு நிலையை அடைந்து விட்டார் என்று தெரிவித்தனர். "சாந்தியை உயிரோடு பார்க்க முடியாது' என்று அவரது குடும்பத்தினர்கவலையில் ஆழ்ந்தனர்.



அவரது மகன் சுரேஷ்குமார், "தாயின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம்' என்று தந்தை மருதையிடம்கூறியுள்ளான். "இனி அம்மாவை உயிரோடு பார்க்க முடியாது. ஆனால், அவருடைய உறுப்புகளைபொருத்துபவர்களை பார்த்தாவது, அம்மாவை நேரில் பார்த்த ஆறுதல் அடைவோம்' என்று மகன் சுரேஷ்குமார்கூறியதாக மருதை தன் உறவினர்களிடம் கூறியுள்ளார். சாந்தியின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் விருப்பத்தைமருதை .பி.சி., மருத்துவமனை டாக்டர்களிடம் தெரிவித்தார். துரிதமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம், உடல் உறுப்புகளை தானம் பெறுவதற்காக சென்னையில் இருந்து டாக்டர் குழுவை வரவழைத்தது. நேற்று அதிகாலைஉடல் உறுப்புகளை எடுக்கும் ஆபரேஷன் நடந்தது. சாந்தியின் உடலில் இருந்து கண்கள், சிறுநீரகங்கள், இதய வால்வுஉள்ளிட்ட உடல் உறுப்புகள் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன. எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளைதேவைப்பட்டவர்களுக்கு பொருத்தும் ஆபரேஷன் .பி.சி., மருத்துவமனையில் நடந்து வருகிறது. உடல் உறுப்புகள்தானம் பெறப்பட்ட சாந்தியின் உடல் ஆபரேஷனுக்கு பின்னர் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்தஊரான வெள்ளையக்கவுண்டம் பட்டிக்கு சாந்தியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.



இறந்த பெண் சாந்தியின் கணவர் மருதை கூறுகையில், ""மூளைச்சாவு அடைந்துவிட்ட அம்மாவின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என்று மகன்சுரேஷ்குமார் சொன்னான். அவன் ஆலோசனைப்படியே என் மனைவியின் உடல்உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தேன். என் மனைவி இறந்தாலும், அவரதுஉடல் உறுப்புகளால் சிலர் உயிர்வாழ்வது எங்கள் குடும்பத்துக்கு பெரும்ஆத்மதிருப்தியை அளிக்கும்,'' என்றார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை