ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

16 நவம்பர், 2008

மனித சமத்துவத்துக்கான "சுயமரியாதை இயக்கம்" - தோற்றமும், வளர்ச்சியும்


மனித சமத்துவத்துக்கான
"சுயமரியாதை இயக்கம்" - தோற்றமும், வளர்ச்சியும்


நமது நாட்டு மக்களுக்கு சுயமரியாதையையும், சமத்து வத்தையும், சகோதரத்துவத் தையும் உண்டாக்க தோன்றிய இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். தன் மதிப்பு, தன் மானம் என்பதே சுயமரி யாதை எனக் கூறப்படுவதா கும். இந்தியா முழுவதும் பரவிய ஆரிய பார்ப்பனர்களே நால்வருண ஜாதி முறைகளை உருவாக்கி, திராவிட இனத்த வரை பிரித்து, அதிலும் தாழ்ந்ததாக பஞ்சமர் என்ற ஒரு பிரிவினரை இழிவுபடுத்தி, தாமே உயர்ந்தவர்; தமக்கே அனைத்து உரிமைகளும் என ஏகபோகமாக அனைத்து கல்வி, வேலை வாய்ப்புகளி லும் ஆதிக்கம் செலுத்தி வந் தனர். இதனை புத்தர் முதல் தொடங்கி பல சீர்திருத்த முன்னோடிகள் எதிர்த்து வந்தனர். 1902-ஆம் ஆண்டு முதல் பார்ப்பனரல்லாதார் நலனில் அக்கறையும், வகுப் புரிமை உணர்வும் இருந்ததாக பின்நாட்களில் தந்தை பெரி யார் அவர்களே குறிப்பிடு கிறார்.

19-ஆம் நூற்றாண்டு இறுதி யில்தான் பார்ப்பனரல்லாத பெரு மக்கள் தமக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிமை வேண்டும்; பார்ப்பன ஆதிக் கத்திலிருந்து விடுதலை வேண் டும் என குரல் கொடுக்க தொடங்கினர். இத்தகைய எழுச்சி முதலில் தனியாகவும், பின் சிறு சிறு குழு, சங்கம் போன்ற அமைப்புகள் வாயி லாக எழத் தொடங்கின. 20-ஆம்நூற்றாண்டு தொடங் கிய நிலையில், திராவிட மக் களில் பெரும்பான்மையோர் சமூக, பொருளாதார, அரசி யல், கல்வி, வேலை வாய்ப்பு போன்ற துறைகளில் வீழ்ச்சி யுற்றுக் கிடந்தனர். மேலை நாட்டாரின் சமயநெறிக் கருத் துகளும், ஆட்சி நெறிமுறை களும், அவர்கள் கற்றுத்தந்த சகோதர சமத்துவமும், நாக ரிகப் போக்கும், பண்பாடு களும், திராவிடத்தேசத்தில் மிகப் பெரிய விழிப்புணர்ச் சியை ஏற்படுத்தின எனலாம். ஆங்கிலேய ஆட்சியில், அரசு அதிகாரங்களில் மற்றும் கல்வி, வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். பார்ப்பன ரல்லாதோர் கல்வி அறிவு பெறாமல் இருந்தனர்; படித்த ஒருசில பார்ப்பனரல்லாதோர் நாளடைவில் இதனை உணர லாயினர். வெள்ளையர்களுக் கும், இந்தியர்களுக்கும் இடை யேயான வேலை வாய்ப்பு நலன் கருதி. அதே இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், 1918-ல் காந்தியடிகளின் பெரு முயற்சியால் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் கட்சியாக உருவெடுத்து அதிலும் பெரும்பாலும் பார்ப்பனர் களே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். ஆரம்ப காலத் தில் காங்கிரஸ் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டாத பார்ப்பன தலைவர்கள், காங் கிரஸ் கட்சியின் செல்வாக்கும், மதிப்பும் உயர உயர அரசி யலில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட தொடங்கி, தீவிர மாக பங்கு கொண்டு, செல் வாக்கு பெற முயன்றனர். பார்ப்பனரல்லாதார் நலன், உரிமைகளை பாதுகாக்க, நல்ல நோக்கத்தை அடிப் படையாகக் கொண்டு, தனி மனிதர்களின் எழுச்சியாக எழுந்த நிலை மாறி, வளர்ந்து அவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென குறிக்கோளை முன்வைத்து, கொள்கைகளை உருவாக்கி, தொடர்ச்சியான வேலைத் திட்டங்களை வகுத்து, இடைவிடாது இயங் குவதே இயக்கம் என்ற வகையில் திராவிடர்களின் சமுதாய, கல்வி, வேலை வாய்ப்பு மேம்பாடு என்ற கொள்கைகளின் அடிப்படை யில்,

பார்ப்பனரல்லாதார் சங்கம் (1909) சென்னை அய்க் கிய சங்கம் (1912), சென்னை திராவிடர் சங்கம் (1913), தென் இந்தியர் நல உரிமைச் சங்கம் (1916), நீதிக்கட்சி (1917), சுய மரியாதை இயக்கம் (1925), திராவிடர் கழகம் (1944) என ஓர் ஒப்பற்ற மனித சமத்துவ இயக்கமாக வளர்ந்தது. மேற் கண்ட மனித சமத்துவ இயக் கங்களின் வரலாற்றுப் பின்ன ணிகளையும், அதன் தோற்றம், வளர்ச்சிகளை விளக்கமாகக் காண்போம்.

பார்ப்பனரல்லாதார் சங்கம்:

1909-ஆம் ஆண்டு சென் னையில் இரு வழக்கறிஞர் களான புருஷோத்தம நாயுடு மற்றும் சுப்பிரமணியம் ஆகி யோர் பார்ப்பனரல்லாத மாணவர்களின் கல்வி நலனுக் கும், அவர் தம் வாழ்வு நிலை உயர்வுக்கும் பார்ப்பனரல்லா தார் சங்கம் அமைய வேண்டும் எனக் கருத்து தெரிவித்து, பார்ப்பனரல்லாதார் சங்கம் என அறிவித்து, அதற்கென கீழ்க்கண்ட கொள்கைத் திட் டங்களை உருவாக்கினர், அதன் குறிக்கோள்,

1. பார்ப்பனரல்லாதார் சமூகத்தை தாழ்ந்த நிலையிலி ருந்து மேம்படுத்தப் பாடு படுதல்.

2. அவர்கள் சமூகத்தின் உயர்ந்த நிலையை பெறுவ தற்கு ஏற்ற முறையில் அவர் களை தூக்கி விடுதல்.

3. ஏழைகளாகவும், அறி வாற்றல் மிகுந்தவர்களாகவும் காணப்படுகின்ற பார்ப்பனரல் லாத மாணவர்கள் உயர்கல்வி பெற உதவிகள் புரிதல்.

4. பார்ப்பனரல்லாத இளை ஞர்கள் வெளிநாடு சென்று தொழில் கல்வி பயின்று, இந்த நாட்டில் புதிய தொழில் தொடங்க ஊக்கம் அளித்தல்.

5. சென்னை பார்ப்பனரல் லாதார் சங்கம் அரசியல் சார்பற்ற முறையில் முழுக்க முழுக்க சமுதாய முன்னேற்ற அமைப்பாக செயல்படுதல், போன்றவையாகும்.

சென்னை அய்க்கிய சங்கம்: அரசு உயர் பதவிகள் அனைத்திலும் பார்ப்பனர் களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எடுத்துக்காட்டாக, டிப்டி கலெக்டர்களில் 55 சதவீதம், சப் ஜட்ஜுகளில் 83 சதவீதம் மாவட்ட முன்சீப் களில் 72 சதவீதம் (மக்கள் தொகையில் 3 சதவீதம் மட் டுமே இருந்த பார்ப்பனர்கள்). அத்தோடு, உயர் பதவியில் உள்ள பார்ப்பனர்கள், தமக்கு கீழ் உள்ள பார்ப்பனரல்லா தாரை பாரபட்சமாக, இழிவு படுத்தி, கொடுமைகள் பல புரிந்து வந்தனர். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை வெளியில் எடுத்துச் சொல்ல, சென்னை ரெவின்யூபோர்டு மற்றும் அரசு அலுவலகங் களில் பணிபுரிந்தபார்ப்பன ரல்லாத அலுவலர்கள்,

1912-ஆம் ஆண்டு புதிய சமுதாய தொண்டு அமைப் பாக சென்னை அய்க்கிய சங்கம் என்ற பெயரில் சரவணப் பிள்ளை (தஞ்சை டெபுடி கலெக்டர்) ஜி. வீராசாமி நாயுடு, துரைசாமி முதலியார் (பொறியில் துறை) எஸ். நாராயணசாமி நாயுடு (ரெவின்யூ போர்டு அலுவல கம்) உள்ளிட்ட பணியிலிருந்த பார்ப்பனரல்லாத அரசு அலு வலர்களால் ஏற்படுத்தப்பட் டது. சென்னையில் அப் போது, பிரபல மருத்துவ வல்லுநராக விளங்கிய டாக் டர் சி. நடேசமுதலியார் அந்த சங்கத்தின் செயலாளராக பொறுப்பேற்று பொதுத் தொண்டு புரியலானார். இச்சங்கத்தின் சீரிய சமுதாயப் பணிகளில் முக்கியமானது முதியோர் கல்வி பயிற்சி வகுப்பு தொடங்கியதாகும். இரவு நேரங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.

சென்னை திராவிடர் சங்கம்:

1913-ஆம் ஆண்டு பார்ப் பனரல்லாதார் என்ற எதிர் மறைப் பெயரைவிட, நேர் முகப் பெயராக சென்னை திராவிடர் சங்கம் என்று பெயரை மாற்றி அமைப்பது என டாக்டர் சி. நடேச முதலியாரால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று வெளிவரும் பார்ப் பனரல்லாத பட்டதாரி களைப் பாராட்டி விழா எடுக் கப்பட்டது! அதுவே பார்ப் பன ஆதிக்க எதிர்ப்பு உணர்வு ஏற்பட பெரிதும் காரணமாக அமைந்தது.

1916-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி ஏற்படுத்தப்பட்டது. டாக்டர் சி. நடேச முதலியார் மேற் பார்வையில் திராவிடர் இல்லம் என்று சென்னை திருவல்லிக்கேணியில் தொடங்கி சிறப்பாக இயங்கி வந்தது. பிறகு நூலகமும் திறக்கப்பட்டது.

அன்றைய கால கட்டத்தில் அரசியலில் புகழோடும், பெருமையோடும் திகழ்ந்த காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சர் பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம் நாயர் போன்ற பார்ப்பனரல்லாத தலைவர் களை சென்னை திராவிடர் சங்கம், திராவிடர் இல்லம், டாக்டர் சி. நடேச முதலியார் அவர்களால் எழுப்பப்பட்ட திராவிட உணர்ச்சி கவர்ந்தது. பார்ப்பனரல்லாதாருக்கு என்று சிறந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும், காங்கிரஸ் பேரியக் கத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கப் போக்கிற்கு எதிராக வும், பார்ப்பனரல்லாத தலை வர்கள் கொண்டிருந்த சீரிய எண்ணத்தினடிப்படையில், அப்போது நடந்த இந்திய சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசில் இருந்த பார்ப்பன ரல்லாத தலைவர் டாக்டர் டி.எம். நாயர் தோல்வியுற்ற நிலையில், பார்ப்பன ஆதிக்க வெறி பிடித்த அரசியல் அதிகாரத்தையும் திராவிட மக்களையும் மீட்டெடுப்ப தற்கு தனி இயக்கம் காண் பதைத்தவிர வேறு வழி யில்லை என சர். பிட்டி தியாகராயர், பனகல் அரசர் இராமராயநிங்கர், கே.வி. ரெட்டி உள்ளிட்டோர் முடி வுக்கு வந்தனர்.

தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்:

1916-ஆம் ஆண்டு நவம்பர் 20-ல் சென்னை வேப்பேரி எத்திராஜ் முதலியார் இல்லத் தில் சர். பிட்டி தியாகராயர், டாக்டர் சி. நடேச முதலியார், டாக்டர் டி.எம். நாயர் உள் ளிட்ட பார்ப்பனரல்லாத தலைவர்களின் சிறப்புக் கூட்டம் ஒன்றினைக் கூட்டி, பல முக்கிய பார்ப்பனரல்லாத தலைவர்கள், பெரு மக்கள் கலந்து கொள்ள, சிறப்பு வாய்ந்த தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

சர். பிட்டி தியாகராயர் அவர்களால் வெளியிடப் பட்ட முதல் கொள்கை அறிக் கைதான் பார்ப்பனரல்லாதா ரின் உரிமைச் சாசனம் என அமைந்தது. அதில் சமுதாய வாழ்க்கையில் பார்ப்பனர் முதலிடம் பெற்றிருப்பதும், உடலுழைப்பில்லாதவாறு அன்னார் வாழ்க்கை முறை அமைந்திருப்பதும், மோட்ச உலகத்திற்கு வழிகாட்டிகளாக அவர்கள் மதிக்கப்படுவதுமே, இந்த நாட்டின் பார்ப்பனப் பெருவாழ்வு வாழச் செய்து விட்டது என எல்லா சமு தாயத்தினருக்கும் ஒத்த உரி மையும், ஒத்த வாழ்வும், ஒத்த உயர்வும் பெறுதல் வேண்டும் என உணர்ச்சிமிக்க கருத்துக் களை வெளியிட்டு தெளி வாக்கினார்.

பார்ப்பனரல்லாத பெருங் குடி மக்களின் நலன் காக்க அரசியல் கட்சியாக தென் இந்தியர் நல உரிமைச் சங்கம் ஏற்படுத்தப்பட்டு, கொள்கை திட்டங்கள், குறிக்கோள் அடங்கிய கொள்கை விளக்க அறிக்கை வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டது. 1916 வெளியிடப்பட்ட கொள்கை அறிக்கையில் பெரும்பாலும் மனித சமத்துவ சிந்தனைகள் கொண்டதாகவே இருந்தது. (1,2,6,7).

1. தென் இந்தியாவிலுள்ள பார்ப்பனரல்லாத சமூகப் பிரிவினர் கல்வி, சமூகவியல், பொருளியல், அரசியல், கலை, பயன்பாட்டுத்துறை போன்ற வற்றில் மேம்பாடுறச் செய்தல்.

2. பார்ப்பனரல்லாத பெருங் குடி மக்களின் நலன்கள் மற்றும் உரிமைகள் பாதுகாக் கும் நோக்கத்தோடு, பிரச் சினைகள் குறித்த தீர்வுகாண அரசிடம் முறையீடு செய்தல்.

3. வகுப்புவாரி பிரதிநிதித் துவ முறையை எல்லாத் துறைகளிலும் நியாயமாக கடைபிடிப்பதன் மூலம் பார்ப் பனரல்லாத பெருங்குடி மக்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க பெரு முயற்சி எடுத்துக் கொள்ளுதல்.

4. நாட்டில் நிலவும் ஜாதிப் பிரச்சினைகள் அனைத்தும் இறுதியில் அழிந்து, ஒழிந்து மறைகின்ற முறையில், சமூக சீர்திருத்த தொண்டுகளையும், பொருளாதார வசதி வாய்ப்பு களை மேம்படுத்தும் பணி களையும் நடைமுறைப்படுத்துதல்.

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு