ஊழல் மலிந்த அரசியல் வாழ்வு நடத்திவரும் ஜெயலலிதா - பார்வையில் பெரும் ஊழலா? எந்த முறைகேடும் இல்லை: ஜெயலலிதாவுக்கு ஆ.இராசா பதில்

"அலைவரிசை ஒதுக்கீட்டில் எந்த முறை கேடும் நடைபெறவில்லை. ஊழல் மலிந்த அரசியல் வாழ்வு நடத்தி வரும் ஜெயலலிதாவிற்கு எல்லாமே ராட்சத ஊழ லாகத்தான் தெரியும்" என்று மய்யத் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:

இரண்டு முறை மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் - ஆங்கிலம் தன் வாய்க்கு மட் டுமே வசப்படும் என்று கருதிக் கொண்டிருப்பவர். டான்சி நிலத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கியதில் தன் மனசாட்சிப்படி கழுவாய் தேடிக் கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தால் அறிவுறுத் தப்பட்டவர். இன்றும் நீதிமன் றத்தில் வழக்குகளை இழுத் தடித்துக் கொண்டு மக்கள் பணத்தில் ஊதாரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் - அலை வரிசை குறித்த அறிக்கை விவரமற்ற வேடிக்கையான பேத்தலாக இருப்பதில் ஆச்சரி யமில்லை என்றாலும், அவ ருக்கு சுருக்கமான பதில் தரு வதன்மூலம் மற்றவர்களுக்கும் உண்மை மறுபடியும் போய்ச் சேரும் என்ற நம்பிக்கையில் பதில் தர விழைகிறேன்.

தன்னுடைய அறிக்கையில் - ராஜாவின் கூற்றில் அதிக நியா யம் இருப்பதாகத் தெரிய வில்லை என்று குறிப்பிட்டிருப் பதன் மூலம் ஓரளவு நியாய மாவது ஜெயலலிதாவிற்குத் தெரிந்திருக்கிறதே என்பது வியப்பிற்குரிய ஒன்றுதான்.

சட்டப்படியான முதலீடு

ஸ்வான், யுனிடெக் நிறுவனங்களில் உள்ள பங்கு நிறுவனங்களின் பட்டியலும் அவைகளின் பங்கு மாற்றமும் நிதித்துறைக்கும் கம்பெனி விவ காரத் துறைக்கும் சம்பந்தப் பட்ட விஷயமாகும். எனினும் இந்நிறுவனங்கள் தங்கள் பங்கு களை தளர்த்திக் கொண்டு அரசு அனுமதித்துள்ள 74 சத விகிதம் அன்னிய முதலீட்டுக் குறியீட்டுக்குள்ளாக தங்கள் நிறுவனத்தின் வியாபார அபி விருத்திக்காக மட்டுமே அன் னிய முதலீடுகளைப் பெற்றுள் ளன. அன்னிய முதலீடுகளைக் கண்காணிக்கும் நிதித்துறையும் இந் நிறுவனங்கள் தங்கள் உரி மங்களையோ, அலை வரிசை யையோ அல்லது நிறுவனத்தில் உள்ள தனிப்பட்ட ஒருவரின் பங்குகளையோ விற்பனைக்கு உட்படுத்தவில்லை என்றும் தெளிவாகக் கருத்து தெரிவித் துள்ளது. எனவே இந் நிறு வனங்கள் பெற்றுள்ள அன் னிய முதலீடு தற்போது இயங் கும் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த காலங் களில் செய்து கொண்ட சட் டப்படியான முதலீடுகளைப் போன்றதே என்பதையும் ஏற் கெனவே தெளிவுபடுத்தியுள் ளேன்.

1994 ஆம் ஆண்டு உரிமமும் அலைவரிசையும் ஏலம் விடப் பட்டபோது, ஏலம் எடுத்த நிறுவனங்களால் ஏலத் தொகை செலுத்த இயலாமல் போன தால் வருவாயில் பங்கு (Revenue Share) எனும் அடிப்படையில் உரிமம் மற்றும் அலை வரிசை களை வழங்க அரசு முடிவு செய்தது. அதன்படி தரைவழித் தொழில் நுட்பம் (Landline) ஜி.எஸ்.எம். தொழில் நுட்பம், சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பம் ஆகியவைகளைக் கொண்ட அனைத்துத் தொழில் நுட்பங் களையும் உள்ளடக்கிய ஒருங் கிணைந்த உரிமம் (Unified Access Services Licence) 2003 ஆம் ஆண்டு கொண்டு வரப் பட்ட போது 2001 ஆம் ஆண் டில் பெறப்பட்ட ஏலத் தொகையான 1650 கோடி ரூபாயை உரிமத்தின் அடிப் படை விலையாக ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரை செய்தது.

அரசுக்கு இழப்பு என்பது கற்பனையானது

வருவாயில் பங்கு எனும் அடிப்படையில் உரிமத்தின் மீதும் அலை வரிசை மீதும் (Licence Fee and Spectrum Fee) வருவாய் விகிதத்தை அவ்வப் போது உயர்த்தி பரிந்துரை செய்யும் ஒழுங்கு முறை ஆணையம் உரிமக் கட்ட ணத்தை உயர்த்தப் பரிந்துரை வழங்கவில்லை. எனவேதான் தொடர்ந்து இத்துறையில் 50-க்கும் மேற்பட்ட உரிமங்கள் நான் பொறுப்பேற்றதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை எவ் வித மாற்றமும் செய்யாமல் அதே தொகைக்கு வழங்கப் பட்டுள்ளன. இரண்டாம் தலை முறை அலைவரிசை ஏலம் விடப்பட வேண்டியதல்ல என்று தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரை செய்ததின் அடிப் படையிலேயே ஒதுக்கீடு செய் யப்பட்டது என்றும், அதன் மீது வருவாயில் பங்கு எனும் அடிப்படையில் ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது என்றும் பல முறை விளக்கமளித்தும் அவை யெல்லாம் செவிடன் காதில் ஊதப்பட்ட சங்காக ஜெயலலி தாவிற்கு போனதில் வியப் பொன்றுமில்லை. ஒவ்வொரு ஆண்டும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை உயர உயர தொடர்ந்து இவ்வருவாயும் உயரும். எனவே அரசுக்கு இழப்பு என்பதே கற்பனையா னது என்பதை ஏற்கெனவே விளக்கியுள்ளேன்.

வழக்கமான நடவடிக்கை ஜெயலலிதாவின் அறிக்கை யில் சொல்லப்பட்டதுபோல் சந்தேகப்படக் கூடியதாகவும் அரசியல் தொடர்புடன் கூடிய தாகவும் உள்ளது என்று கண் காணிப்பு ஆணையம் எங்கே யும் விமர்சிக்கவில்லை. பத்திரி கைகளில் வெளியான பல்வேறு சந்தேகங்களின் அடிப்படை யில் கண்காணிப்பு ஆணையம் அவ்வப்போது பல்வேறு துறை களிடமும் விளக்கம் கேட்பது இயல்பான வழக்கமான நட வடிக்கையாகும். அந்த வகை யில் கேட்கப்பட்ட விவரங் களுக்கு விளக்கமும் துறைச் செயலாளர் அளவிலேயே அனுப்பப்பட்டுவிட்டது.

அதேபோல ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளது போல் ஊழல் நிரூபிக் கப்பட்டால் ராஜினாமா செய்வதாக நான் எப்போதும் கூறவில்லை. நான், ஊழல் நிரூபிக்கப்படும் வரை சண்டி வழக்காடுபவனுமல்ல. தானே போட்ட கையெழுத்தை நிறைந்த நீதிமன்றத்தில் தன்னு டையது அல்ல என்று சொன்ன டான்சி ராணியுமல்ல. எந்த விதிமுறை மீறப் பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தினால் ராஜினாமா செய்யத் தயார் என்றுதான் கூறினேன்.

ஜெயலலிதாவிற்கு எந்த யோக்கியதையும இல்லை

ஜெயலலிதா உள்பட ஏலம் விட்டிருக்கவேண்டும் என்று தொலைத்தொடர்பு ஆணை யத்தின் பரிந்துரைக்கு எதிரான ஆலோசனைகளைச் சொல் கிறார்களே தவிர விதி மீறல்கள் என்று எவரும் இதுவரை பட்டியலிட இயலவில்லை. தனது இயலாமைக்கு என்னை ராஜினாமா செய்யச் சொல்ல ஜெயலலிதாவிற்கு எந்த யோக் கியதையும் இல்லை.

மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் நம் பூதிரி இரண்டாம் தலை முறை அலைவரிசை ஒதுக்கீட்டில் எந்த விதி மீறலும் இல்லை என்று கூறியதைச் சுட்டிக் காட் டிய தலைவர் கலைஞர். நான் இந்தத் துறைக்கு உழைத்து முன்னேறி வந்திருப்பதாகத் தன்னுடைய பெருமிதத்தை வெளிப்படுத்தியபோது, அவ ரது உயிரணுக்களில் கலந்து விட்ட சமூக நீதிக் கொள்கை காரணமாக, நான் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் என்று குறிப்பிட்டாரே தவிர, ஜெயலலிதாவைப்போல தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவரை விமானத்தில் இருந்து தள்ளி விடுவதற்கோ, அரசு விழாக் களில் கூட காலில் விழ வைத்து கைகட்டி வாய்பொத்தி நிற்க வைத்து மகிழ்கிற வக்கிர புத்திக்காகவோ அல்ல, சட்ட மன்றத்தில் ஒரு சாதி சாயம் பூசிக் கொள்வதும் மற்ற இடங் களில் வேறு வேறு சாயங்கள் பூசிக் கொள்வதும், வேஷங் களை மாற்றிக் கொள்வதும் ஜெயலலிதாவிற்கு பழக்கப் பட்டுப் போனவைகளாகும். அவைகள் தலைவர் கலைஞர் அவர்களுக்கு அன்னியப்பட்டவை மட்டுமல்ல, அருவருப் பானவையும் கூட.

சட்டப்படி நடைபெற் றுள்ள உரிமம் மற்றும் அலை வரிசை ஒதுக்கீடு ஜெயலலிதா வின் கண்களுக்கு இராட்சத ஊழலாகத் தெரிவது அவரது ஊழல் மலிந்த அரசியல் வாழ் விற்கு சாத்தியம் என்றாலும், மற்றவர்கள் உண்மையை உணர்ந்து கொள்ளவே இப்பதில் அறிக்கையை அளிக்கிறேன்.

- இவ்வாறு மய்ய அமைச்சர் ஆ.இராசா தமது அறிக்கையில் கூறியுள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை