ஏப்ரல் 14- ந்தேதி கேப்டன் டிவி உறுதியாக டெலிகாஸ்ட் ஆகும் என்கிறார்கள் விஜயகாந்த் தரப்பிலிருந்து.

மரியாதை படத்திற்காக பொள்ளாச்சியில் கேம்ப் போட்டிருக்கிறார் கேப்டன். Vijayakanthஅங்கிருந்தபடியே அரசியல் நிலவரத்தை கவனித்து வரும் அவரிடம், கேப்டன் டி.வி எப்போ? என்று துளைத்தெடுக்கிறார்களாம் தொண்டர்கள். எவ்வளவோ கூட்டம் கூடுது. ஆனால், அதையெல்லாம் பாரபட்சமில்லாமல் காட்டணும்னா நமக்குன்னு ஒரு சேனல் வேணும். இப்படி விஜயகாந்த்தை வற்புறுத்திய அவரது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் நற்செய்தி. ஏப்ரல் 14- ந்தேதி கேப்டன் டிவி உறுதியாக டெலிகாஸ்ட் ஆகும் என்கிறார்கள் விஜயகாந்த் தரப்பிலிருந்து.

வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், மக்களுக்கு பயனுள்ள விஷயங்களை சொல்ல வேண்டும் என்றெல்லாம் யோசித்து வருகிறாராம் தேமுதிக தலைவர். இதற்கிடையில் எங்கள் ஆசான் படப்பிடிப்புக்காக மலேசியா சென்றிருந்த விஜயகாந்த், அங்கு புத்திர ஜெயா என்ற இடத்திற்கும் போனாராம். இன்னும் இருபது வருடங்கள் கழித்து இருக்கும் மக்கள் தொகையை கணக்கிட்டு இந்த புதிய நகரத்தை அமைத்து வருகிறதாம் அந்த நாட்டு அரசு. மலேசியாவில் இருந்து வந்ததில் இருந்தே தானும் அப்படி ஒரு திட்டம் வைத்திருப்பதாக சொல்லி வருகிறாராம் தொண்டர்களிடம்.

அதை வெளிப்படையாக சொல்ல மாட்டேன் என்பீர்கள்... அப்படிதானே கேப்டன்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை