சென்னையில் இருப்பதால், மக்கள் விரோத ஏடான இந்து ஆங்கில நாளிதழ் எந்தவிதப் பெருமையையும் கொண்டாட முடியாது

"இந்து" ஆங்கில நாளிதழைவிட வேறு எவராலும்
சென்னையை அதிகமாகக் கெடுக்க முடியாது

சென்னையில் இருப்பதால், மக்கள் விரோத ஏடான இந்து ஆங்கில நாளிதழ் எந்தவிதப் பெருமையையும் கொண்டாட முடியாது.

சென்னை- அரசு பொது மருத்துவமனையில் புரட்சிக் கவிஞர் கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) இறந்தபோது, இந்த நாளிதழ் அச்செய்தியை இறப்புச் செய்திகள் என்ற தலைப்பில் பிரசுரித்தது. பிற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்த ஒரு கவிஞர் மீது அவ்வளவு வெறுப்பு இதற்கு. பழைய மவுண்ட் ரோடு என்ற பெயர் அண்ணா சாலை என்று மாற்றப்பட்டபோது, இந்து நாளேடு தனது இதழில் எந்த இடத்திலும் அண்ணா சாலை என்ற முகவரியைக் குறிப்பிட்டதே இல்லை. அதற்கு பதிலாக தி இந்து, சென்னை-2 என்றே குறிப்பிட்டு வருகிறது.

போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், நடைபாதைக் கோயில்கள் அனைத்தையும் அகற்றவேண்டும் என்று முன்னாள் சென்னை மாநகர மேயர் வேலூர் நாராயணன் உத்தரவிட்டபோது, இந்த நாளிதழ் இந்த முயற்சிக்கு எதிராக நின்றதுடன், ஏதுமறியா மக்களிடையே மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் செய்திகளை வெளியிட்டது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மண்டல் குழு பரிந்துரைத்தபோது, நாடாளு மன்றத்தில் இந்தப் பரிந்துரை விவாதத்திற்கு வைக்கப்படுவதற்கு முன்பே இந்து நாளிதழ் இந்தப் பரிந்துரையை எதிர்த்தது.

எப்படியோ, கடைசியாக எனது பெயர் இந்து நாளிதழில் வந்துவிட்டது இது முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் கூறியது. இந்த நடிகர் முதல்வர் என்ற அறிவிக்கப்படும் வரை, அவரது பெயரை இந்த நாளிதழ் எப்போதுமே குறிப்பிட்டதே இல்லை. இந்து நாளிதழின் மக்கள் விரோத, சமதர்ம விரோதப் போக்கிற்கு இவை ஒரு சில எடுத்துக் காட்டுகளே.

சென்னையை அதிகமாகக் கெடுத்தது இந்து நாளேட் டினைத் தவிர வேறு எவருமில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை