ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

27 நவம்பர், 2008

ஜாதி, மத அரசியல் நாட்டை இருளில் மூழ்கடித்து விடும் என்று காங் கிரஸ் தலைவர் சோனியா

ஜாதி-மத அரசியல், நாட்டை இருளில் மூழ்கடித்துவிடும்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

ஜாதி, மத அரசியல் நாட்டை இருளில் மூழ்கடித்து விடும் என்று காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரித்துள்ளார்.

டில்லி மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் சோனியா காந்தி பிரச்சாரம் செய்தார். மங்கள்புரியில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத் தில் கலந்து கொண்டு பேசிய அவர், டில்லியில் மூன்றாவது முறையாக காங்கிரசை ஆட்சி யில் அமர்த்தும்படி வாக்கா ளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் பேசு கையில், பயங்கரவாதத்துக்கு மதம் எதுவும் கிடையாது. அனைத்து மதங்கள் மற்றும் சமுதாயத்தின் அனைத்துப் பிரி வினரையும் சமாதானத்துக்கும், வளர்ச்சிக்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது தான் காங்கிரசின் கொள்கை. இந்தத் தேர்தலில் காங்கிரசை தேர்ந்தெடுப்பதா? அல்லது சமாதானம் மற்றும் வளர்ச் சிக்கு எதிரான, பிளவுபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு சமு தாயத்தின் பல்வேறு தரப்பின ரிடையே அச்சத்தை உருவாக்கி வருபவர்களைத் தேர்ந்தெடுப் பதா? என்பதை வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும். மக்களைப் பிளவு படுத்தும் அரசியல், நாட்டுக்குப் பெரிய சவாலாக உள்ளது. ஜாதி, மதங்களின் பெயரால் மக் களைப் பிளவுபடுத்தும் சக்தி கள், சில நாட்கள் ஆட்சியில் அமரலாம். ஆனால், இந்த நாடு இருளில் மூழ்கிவிடும். அதற்குப் பொறுப்பு ஏற்பதில் இருந்து அவர்கள் தப்பமுடியாது என்று கூறினார்

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு