ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

16 நவம்பர், 2008

நேரம் வரட்டும், பார்த்துக் கொள்கிறேன்.-நயன்தாரா கோபம்

நேரம் வரட்டும், பார்த்துக் கொள்கிறேன்...
-நயன்தாரா கோபம்

இதுக்கு காரணம் யாருன்னு தெரியும். நேரம் வரும்போது பார்த்துக்கறேன் என்று Sana khanதீப்பொறி திருமுகம் ஆகியிருக்கிறார் நயன்தாரா! எல்லாம் நேற்று முளைத்த காளானின் பேட்டியால் வந்த வினை.

சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வரும் சனாகான் பேட்டியின் போது இவ்வாறு கூறினார். நயன்தாரா எல்லா படத்திலேயும் ஒரே மாதிரி நடிக்கிறார். எல்லாரும் நயன்தாராவை பிடிச்சிருக்கு என்று சொல்றாங்க. ஏன்தான் அப்படி சொல்றாங்களோ? எனக்கு பிடிச்ச நடிகை த்ரிஷாதான்! இந்த பதில்தான் நயனின் டெம்பரேச்சரை அதிகப்படுத்தியிருக்கிறது.

முதல் நாள் இரவு த்ரிஷா வைத்த பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகைகளில் சனாகானும் ஒருவர். அதனால்தான் என்னை பற்றி இப்படி பேட்டி கொடுத்திருக்கிறார். இவருடன் சரிக்கு சரியாக மோத விருப்பமில்லை. இவரை தூண்டி விட்டு பேச வைத்தவர்கள் யார் என்று தெரியும். நேரம் வரும்போது நானும் பேசுவேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் பொறிந்து தள்ளியிருக்கிறார் நயன்.

இவர் த்ரிஷாவைதான் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாரே தவிர, தினந்தோறும் கட்டிப்பிடித்து நடிக்கும் சிம்புவை விட்டுவிட்டாரே என்கிறார்கள் கோலிவுட்டில் சிலர். அதுவும் நியாயம்தான்.

-

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு