ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

17 நவம்பர், 2008

நாட்டை ஆளும் பயிற்சி அளிப்பதுதான் கல்வி, அரசியல் வளர்ச்சிக்காக மாணவரைத் தூண்டிவிட வேண்டாம் கலைஞர் வேண்டுகோள்

நாட்டை ஆளும் பயிற்சி அளிப்பதுதான் கல்வி,
அரசியல் வளர்ச்சிக்காக மாணவரைத் தூண்டிவிட வேண்டாம்

அண்ணா நூற்றாண்டு விழாவில் கலைஞர் வேண்டுகோள்

- பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நேற்று கோவையில் எழுச்சி பொங்க நடைபெற்றது. பல்லா யிரக்கணக்கானோர் திரண்டிருந்த இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் கலை ஞர், அண்ணா விரும்பிய இளைஞர் எழுச்சிக்கு மாறாக இன்றைக்கு பள்ளி, கல்லூரி களில் நடைபெறும் விரும்பத் தகாத நிகழ்வுகள் கண்டு வேதனையுறுகிறேன். எதிர் காலத்தில் நாட்டை ஆளக் கூடிய பயிற்சி அளிப்பதற்குத் தான் கல்லூரிகள் உள்ளன என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். மாணவர் களைத் தூண்டி விட்டு தங் களின் அரசியலை வளர்த்துக் கொள்ளலாம் என்று யாரும் கருதாமல் நாட்டிலே கலவ ரத்தை உருவாக்கக் காரணமாக இருக்க வேண்டாம் என்று உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் ஆற்றிய உரை வருமாறு:

பேரறிஞர் அண்ணா அவர் களுடைய நூற்றாண்டு விழாவை தமிழகமெங்கும் சிறப்புறக் கொண்டாட தி.மு.க., தலைமைக் கழகம் முடிவு செய்து, மாவட்டச் செயலாளர் களை அணுகி இரண்டு அல்லது மூன்று மாவட்டங் களை ஒருங்கிணைத்து மண் டல அளவில் இந்த மாபெரும் விழாவை ஆங்காங்கு கொண் டாடுவது என்று முடிவெடுத்து அந்த வரிசையில் இன்றைக்கு கோவையிலே நான்கு மாவட் டங்களின் சார்பில் இந்த விழா சீரோடும், சிறப்போடும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

தி.மு.க. ஆட்சியை ஒழிக்க நினைத்தால் . . .

ஆளுகின்ற கட்சியாக இருக் கின்ற இந்தக் கட்சியை அகற்றி விட வேண்டும், அரியாசனத் தில் இருந்து விரட்டிவிட வேண்டும் என்று சிலர் எண் ணிக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்குச் சொல்லுகிறேன். அப்படி அகற்றினால் இன் றைக்கு உள்ள ஒரு கோடி உறுப்பினர்கள் - நாளைக்கு நீங்கள் அகற்றினால் - மூன்று கோடி உறுப்பினர்கள் திரா விட முன்னேற்றக் கழகத்திலே இருப்பார்கள் என்பதை மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் உணர்ச்சி களின் சங்கமம் திராவிட முன்னேற்றக் கழகம். ரத்தக் கலப்பு, சாதாரண ரத்தக் கலப் பல்ல, சுத்த சுயம் பிரகாசமான தமிழ் இரத்தக் கலப்பு. தனித் தமிழ் இரத்தக்கலப்பு. அப்ப டிப்பட்ட சகோதரப் பாசத் தோடு, உடன்பிறப்பு உணர் வோடு, இந்த இயக்கம் பேர றிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டு, நடத்தப் பட்டு, நம்முடைய கைகளிலே ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற ஒன்று என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் மக்கள் இலங்கையில் கொல்லப்படுகின்றனர்

இந்த விழாவை நாம் இங்கே நடத்திக் கொண்டு இருக்கிற நேரத்தில் நாட்டின் நிலை என்ன? நாம் பேசுகின்றோமே தமிழன் தமிழன் என்று. அந்தத் தமிழன் நிலை என்ன? கேள்விக்குறி. இலங்கையிலே இந்நேரம் எத்தனை தமிழர்கள் கொல்லப் பட்டார்களோ, எத்தனை தமிழர்கள் செத்து மடிந்தார்களோ, எத்தனை குடும்பங்கள் ஏதிலிகளாக ஆக்கப் பட்டனவோ, எத்தனை குடும்பங்களில் குழந்தைகள் குற்றுயிரும், குலை உயிருமாகச் செத்து மிதந்தனவோ ரத்த வெள்ளத்தில் என்கின்ற அந்த எண்ணத்தோடுதான் நான் இங்கே அமர்ந்திருக்கிறேன்.

என்னுடைய சிந்தனைகள் எல்லாம் கிளிநொச்சிப் பகுதி, இலங்கையிலே போர் முனை மிகப் பிரதானமான இடமாகக் கருதப்பட்ட பூநகர் என்ற அந்த இடங்களையெல்லாம் பிடித்துவிட்டோம் என்று யாரிடத்திலே நாம் கேட்டுக் கொண்டோமோ, எந்த இந்திய அரசின் மூலமாகக் கேட்டுக் கொண்டோமோ அந்த இந்திய அரசின் கோரிக்கையைக் காது கொடுத்துக் கேளாமல் எங்க ளுடைய இலட்சியம், தமிழர் களை அழிப்பதல்ல, எங்கள் லட்சியம் தீவிரவாதிகளை ஒழிப்பது என்று ஒரு சாக்குப் போக்குச் சொல்லி தமிழர் களை ஒழிக்கின்ற காரியம் இலங்கைத் தீவிலே இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக் கிறது.

மறக்கமுடியாத அண்ணா

1956-ஆம் ஆண்டில் அறி ஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக் குழுவில் இலங்கையிலே தமிழர்களுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும், அப்படியானால் இலங்கையிலே தனி நாடு வேண்டும் என்ற பொருளிலே அல்ல; தமிழர்களுடைய உரிமை காப்பாற்றப்பட வேண் டும். தமிழர்களுடைய சுதந்திரத் திற்கு வழிவகை காணப்பட வேண்டும். சிங்களர்களுடைய அடிமையாக, சிங்களர்க ளுடைய வீட்டு வேலைக்காரர் களைப் போல, சிங்கள மொழிக்கு அடிமையாக, தமிழ் மொழி இருத்தல் கூடாது. ஆகவே தமிழர்களுக்கு உரிமை வேண்டும் என்று 56--ஆம் ஆண்டிலே எழுந்த முழக் கத்தை தமிழகத்தில் எதிரொ லிக்கச் செய்தவர் பேரறிஞர் அண்ணா என்பதை மறந்து விடக்கூடாது.

இன்றைக்கு யார் யாரோ அந்த முழக்கத்தை எதிரொலிக் கிறார்கள் என்றாலும் நான் வரவேற்கிறேன். மற்றவர் களுக்கு உரிமையில்லை என்று சொல்லமாட்டேன். எல்லோ ருக்கும் உரிமை இருக்க வேண் டும். எல்லோருக்கும் அந்த உணர்வு இருக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக எல்லோரும் அந்த உணர்வை வெளிப்படுத்துகின்ற அந்த அளவிற்கு வளர்ந்துள்ள அந்த முழக்கத்திற்குக் காரணம் இலங்கையைப் பற்றிய எண் ணத்தை நமக்கு உருவாக்கிய ஒரு தலைவர், நாம் மறக்க முடியாத தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய விழா கொண்டாடுகிற நேரத் தில் அந்த இலங்கைத் தமிழர் களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டிய கட்டத்திலேதான் இங்கே அமர்ந்திருக்கின்றோம். ஆனால், தமிழர்கள் என்ன செய்து கொண்டு இருக் கிறார்கள்? ஏன் தமிழ் நாட் டிலிருந்து கிளம்புகின்ற அந்த முழக்கத்திற்கு நாம் நினைத் தவாறு வலுவில்லை? வெட்கத் தோடு ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஆனால், இங்கே ஒரு தமிழன் இன்னொரு தமிழ னைப் பார்த்து என்ன சொல் கிறான். சிங்களன் எப்படி நம்முடைய கருத்துக்கு மதிப் பளிப்பான்? இங்கே இருக் கின்ற தமிழன் சொல்லுகிறான் - தமிழ் நாட்டில் நடைபெறு கின்ற ஆட்சியைப் பற்றி என்ன சொல்லுகிறான், தமிழன் என்று சொல்லிக் கொள்ப வனும் என்ன சொல்கிறான்? நாம் தமிழ்நாடு அரசின் சார் பாக பிரதமரோடு பேசுகி றோம். தமிழ்நாடு அரசின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சரோடு பேசுகிறோம். தமிழ் நாடு அரசின் சார்பாக காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் சோனியா காந்தி யோடு பேசுகிறோம். நாம் அரசின் சார்பாக அரசுப் பணியிலே உள்ள இலங்கை யோடு தொடர்பு கொண் டுள்ள தூதர்களோடு பேசுகி றோம். ஆனால் எந்த அரசு என்று அதை இங்கே சொல் லுகிறார்கள்? ஒரு பத்திரி கையைப் பார்த்தேன், எப்படித் தான் அந்தச் செய்திகளைப் பத்திரிகையிலே போடுகி றார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

கிரிமினல் என்பவர்களுக்கும் பண்புக்கும் வெகுதூரம்

தமிழ்நாடு அரசு இலங் கையை வலியுறுத்துகிறது. இலங்கை அதிபரை வலியுறுத் துகிறது. இலங்கை அதிபர் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத்துகிறது என்று தமிழ்நாடு அரசின் சார்பாக நான் கேட்டால் புதிதாகக் கட்சி ஆரம்பித்த வர்கள் சொல்லுகிறார்கள், இவர்கள் எல்லாம் கிரிமினல் பேர்வழிகள் என்று. நாம் கிரிமினல் பேர் வழிகளாம். இவர்கள் கவுதமர், முகமது நபிகளாம். நாம் கிரிமினல் பேர்வழிகளாம். சில பத்திரி கைகள், அதைக் கண்டித்து எழுதியும் கூட அவசரத்தில், ஆத்திரத்தில் சொல்லிவிட் டேன் என்று சொன்னார்களா என்றால் இல்லை.

நம்மைப் பார்த்து கிரிமினல் என்று சொன்னவர்களுக்கும் பண்புக்கும் வெகுதூரம். ஆகவே, அவர்கள் நம்மை கிரிமினல் என்றே சொல்லிக் கொண்டிருக்கட்டும். இந்தக் கிரிமினல்களால் இலங்கை யோடு போரிட முடியுமா? இலங்கை அதிபரே
வாதிட முடியுமோ? இலங்கை அதிபரை நம்முடைய கருத் துக்கு சம்மதம் தெரிவிக்கச் செய்ய முடியுமோ? இலங்கை அதிபர் இருக்கட்டும். இந்திய அரசுதான் இந்தக் கிரிமி னல்களை மதிக்குமா? எனவே தான் தமிழர்களுடைய உணர் வுகள் ஒன்றுபட்டு ஒலிக்காத காரணத்தால்தான் நாம் தனித்தனியாகப் பிரிந்து - இவர் என்ன இலங்கைக்காக, இலங் கைத் தமிழனுக்காக வாதிடு வது? போரிடுவது? இவர் என்ன பட்டினிப் போராட்டமிருப் பது? ஏன் நாங்கள் இருக்க மாட்டோமா? என்று போட்டி பட்டினிப் போராட்டமும், போட்டிப் பேரணியும் நடக் கட்டும்.

இன்னொன்றையும் சொல்லவேண்டும். இளமைக் காலத்திலிருந்து மாணவப் பருவத்திலிருந்து பட்டதாரி யாக அவர்கள் புகழ் பெற்று பெரியாரைச் சந்திக்கின்ற வரையிலே ஒரு அரசியல்வாதி அல்ல. பெரியாரைச் சந்தித்த பிறகுதான் இயக்கத்தில் முன் னோடியாக அரசியல் தலை வர்கள் வரிசையிலே வைத்து எண்ணத் தக்கவராக வளர முடிந்தது பேரறிஞர் அண்ணா அவர்களால். ஆனால் அவர் இளைஞர்களை வளர்த்தார், மாணவர்களை வளர்த்தார், மாணவர்களுக்கு எந்த அரசியலைக் கற்பிக்க வேண்டுமோ அந்த அரசியலைக் கற் பித்தார். அதன் காரணமாகத் தான் தமிழகத்திலே அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தி லிருந்து ஒரு அன்பழகன் வந் தார், அங்கே ஒரு நெடுஞ் செழியன் வந்தார், அங்கே ஒரு மதியழகன் வந்தார், அங்கே ஒரு இளம்வழுதி வந்தார் - திரு வாரூர் என்றால் அந்தப் பள்ளி யிலிருந்து ஒரு கருணாநிதி வந்தான். இப்படி ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் கல்லூரியிலி ருந்தும், பல்கலைக் கழகத்திலி ருந்தும் இந்த இயக்கத்திற்கு தளபதிகள் கிடைத்தார்கள். சுயமரியாதை வீரர்கள் கிடைத்தார்கள், அரசியல் தெளிவு படைத்தவர்கள் கிடைத்தார்கள், இலக்கியவாதி கள் கிடைத்தார்கள், அறிஞர் பெருமக்கள் கிடைத்தார்கள். ஆனால் இன்றைக்கு மாணவர் கள் படி என்று சொன்னால், அடி என்று போகிறார்கள், அடிதடியிலே இறங்குகிறார் கள். எந்த மாணவர்கள் அடிதடியிலே இறங்கியவர்கள் மீது வழக்கு என்றால், அதற்காக வாதாட வேண்டிய பயிற்சியைப் பெறுகின்ற மாண வர்கள் - சட்டத்துறை மாண வர்கள் - சட்டத்தை மதிக் காமல் அவர்கள் இன்றைக்கு கைகலப்பிலே ஈடுபடுகிறார்கள்.

இவைகள் எல்லாம் நிறுத்தப்பட்டு, இவர்களைத் தூண்டிவிட்டு அதன் மூலம் தங்களுடைய அரசியலை வளர்த்துக் கொள்ளலாம் என்று யாரும் கருதாமல், அந் தப் பிள்ளைகளும் நம் வீட்டுப் பிள்ளைகள்தான், அவர்களைத் தூண்டிவிட்டு, மோத விட்டு, நாட்டிலே ஒரு கலவரத்தை உருவாக்கக் காரணமாக இருக்க வேண்டாமென்று நான் பெரியவர்களுக்கு, அரசி யல் அறிஞர்களுக்கு, அரசி யல்வாதிகளுக்கு, அரசியல் தலைவர்களுக்கு, அத்தனை பேருக்கும் அண்ணாவின் இந்த நூற்றாண்டுவிழாவில் வேண்டு கோள் விடுக்க விரும்புகிறேன்.

அண்ணா ஆற்றிய ஆற்றோரம் உரை

அண்ணாமலைப் பல் கலைக் கழகத்திற்கு அண்ணா அழைக்கப்பட்டார். அங்கே அவர் ஆற்றிய உரைதான் இன்றைக்கு திராவிடத்திலே எழுச்சி உரையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த உரைக்குத் தலைப்புதான் ஆற்றோரம். அந்த ஆற் றோரம் என்ற தலைப்பில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நம்முடைய பேராசிரியர் போன்றவர்கள் அண்ணாவை பேச அழைத்த போது, பேசிய அந்தப் பேச்சின் தலைப்புதான் ஆற்றோரம். அந்தத் தலைப்பிலே அண்ணா என்ன சொன்னார்?

தமிழ்நாட்டின் சரித்திரமா னாலும் - இந்தியாவின் சரித்திர மானாலும், அது இப்போது கங்கைக் கரையிலிருந்து ஆரம் பிக்கிறது. கங்கை ஆற்றங்கரை யிலிருந்து ஆரம்பிக்கக்கூடாது. உண்மையான சரித்திரம் எழுதப்பட வேண்டுமானால் காவேரி ஆற்றங்கரையிலிருந்து தமிழர் சரித்திரம் எழுதப்பட வேண்டும் என்ற கருத்தை அன்றைக்கு எதிரொலித்தவர், எடுத்துச் சொன்னவர் பேரறி ஞர் அண்ணா. அதன் விளைவு தான் இன்றைக்கு உருவான மாணவர் இயக்கங்கள். அந்த மாணவர் இயக்கங்களின் மறுமலர்ச்சியாக திராவிடர் கழகம் - திராவிடர் கழகத்தின் புது எழுச்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நாம் யாரும் மறந்துவிடக் கூடாது.

தேவை, கத்திச் சண்டை அல்ல - கல் எறிதல் அல்ல

எனவே, இளைஞர்கள், மாணவர்கள், கல்லூரிகள் தங்களுக்கு இருப்பது, எதிர் காலத்திலே இந்த நாட்டை ஆளுவதற்கு, பரிபாலிப்பதற்கு, நமக்குப் பயிற்சி அளிப்பதற் காகத்தான் என்று எண்ணிக் கொள்ள வேண்டுமே அல்லா மல், என்று எண்ணி பயில வேண்டுமே அல்லாமல், நாம் கல்லூரிகளிலே கற்றுக் கொள்ள வேண்டியது கவாத்து அல்ல - கல்லூரிகளிலே கற்றுக் கொள்ள வேண்டியது கத்திச் சண்டை அல்ல - கற்றுக் கொள்ள வேண்டியது கல் எறிதல் அல்ல - இரண்டு கோஷ்டியாகப் பிரிந்து சண்டை போட்டுக் கொள்வ தற்கல்ல என்பதில் நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து கல்வியைப் பிரதானமாகக் கருதுவீர் களேயானால், அண்ணா எனக்கு அப்போதே சொன் னார் - இந்த வயதில் கதைகளை எல்லாம் அதற்குள் எழுதாதே, கட்டுரைகளையெல்லாம் எழுதாதே, நன்றாகப் படி என்றார். அண்ணா சொல்லி நான் கேட்காத ஒன்று, அது ஒன்றுதான். அவர் என்னைத் தொடர்ந்து கல்லூரி வரை சென்று படி என்றார். நான் படிக்கவில்லை. பாதியில் நிறுத்திக் கொண்டேன். இந்த இயக்கத்தில் என்னை ஒப் படைத்துக் கொண்டுவிட்டேன். அது ஒன்றும் தவறல்ல என்று இன்றைக்குத் தெரிகிறது.

ஆனால் மாணவர்களைப் பொறுத்தவரை அவர்கள் அண்ணா அவர்கள் எனக்குச் சொன்ன சொல்லை, தங்களுடைய மூளையிலே பதிய வைத்துக் கொண்டு நெஞ்சிலே பதிய வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும் - பயில வேண்டும், பயிற்சி பெற வேண்டும். ஏனென்றால் இந்த நாட்டின் வருங்கால மன்னர்கள் மாணவர்கள்தான் என்பதை மறந்து விடாமல் இருக்க வேண்டும். அண்ணாவின் நூற்றாண்டு விழாவில் இந்தச் செய்தியை இளைஞர்களுக்கு மாணவர்களுக்குக் கூறி, அண்ணா வாழ்க, அண்ணா வின்சிறப்புகள் வாழ்க, வளர்க என்று கூறி விடை பெறுகிறேன்.


லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு