ஈழத்தமிழர் இன்னல் களைய முதல்வர் கலைஞர் உரை : குறுந்தகடு ஒலிபரப்பு


ஈழத்தமிழர் இன்னல் களைய முதல்வர் கலைஞர் உரை :
குறுந்தகடு ஒலிபரப்பு

பொதுமக்கள் இன உணர்வுடன் வரவேற்று எழுச்சி பெற்றனர்

ஈழத்தமிழர் இன்னல் களைய தமிழக முதல்வர் கலைஞர் ஆற்றிய உரைகுறுந்தகடு தமிழ்நா டெங்கும் ஒலிபரப்பப்பட்டது. அதனை கேட்டு பொதுமக்கள்இன உணர்வுபெற்றனர்.

சென்னை மயிலை மாங் கொல்லையில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள்ஈழத் தமி ழர் தம் அவலநிலை குறித்து நெஞ்சுருக ஆற்றிய இனமான மனிதநேயஉரையின் குறுந்தகடு நாடெங்கும் திராவிடர் கழகம் சார்பில் எழுச்சியுடன்ஒலிபரப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

ஒழுகினசேரி

குமரி மாவட்ட தி. சார்பில் அக். 20 அன்று மாலை 6 மணிக்கு நாகர்கோவில் - ஒழு கினசேரி பெரியார் படிப்பகத் தில் எழுச்சியுடன் கலைஞர் உரைஒலிபரப்பப்பட்டது. மாவட்ட தி.. தலைவர் . சங்கரநாராயணன் தலைமைதாங்கினார். மாவட்ட தி.. செயலாளர் கோ. வெற்றிவேந் தன் முன்னிலைவகித்தார். நாகர்கோவில் நகர தி.. தலைவர் கவிஞர் எச். செய்க் முகமதுஒலிபரப்பை தொடங்கி வைத்தார். இராஜாக்கமங்கலம் ஒன்றிய தி.. இளைஞரணி தலைவர் . மகேஷ், செயலா ளர் . ஜெகன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அகஸ் தீசுவரம் ஒன்றிய செயலாளர் பேரரசு மற்றும்ஏராளமா னோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்களும்கலைஞர் உரையை கேட்டு இன உணர்வு பெற்றனர்.

வடிவீசுவரம்

குமரி மாவட்ட தி.. சார்பில் நாகர்கோவில் வடிவீசுவரத்தில் அக். 20 அன்றுகலைஞர் உரை குறுந்தகடு ஒலிபரப்பப்பட் டது. மாவட்ட தி.. தலைவர்.சங்கரநாராயணன், தி.. மகளிரணி அமைப்பாளர் அருணா சங்கரன், நாகர்கோவில் நகர் மன்ற உறுப்பினர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோட்டாறு

நாகர்கோவில் நகர தி.. இளைஞரணி சார்பில் கலை ஞர் உரை குறுந்தகடு அக். 20 அன்று திங்கள் மாலை 6 மணிக்கு கோட்டாறு வட்ட விளை பகுதிகளில் எழுச்சியுடன் ஒலிபரப்பப்பட்டது. நாகர்கோவில் நகர தி.. இளைஞரணி தலைவர் மு. சேகர் அதற்கான ஏற்பாடு களை சிறப்புடன் செய்திருந் தார். திராவிடர் கழகதோழர் களும், ஏராளமான பொது மக்களும் இந்நிகழ்வில் பங் கேற்றனர்.

ஆரல்வாய் மொழி

தோவாளை ஒன்றிய தி.. சார்பில் கலைஞரின் மனிதநேய உரை குறுந்தகடு அக். 20 அன்று 6 மணிக்கு ஆரல்வாய் மொழி பெருமாள்புரம் பகுதி யில் எழுச்சியுடன்ஒலிபரப் பப்பட்டது. தி.. பொறுப் பாளர் மா. மணி அதற்கான ஏற்பாடுகளைச்சிறப்பாக செய்திருந்தார். தோவாளை ஒன்றிய தி.. தலைவர் லெ. சண்முகவேல்மற்றும் கழகத் தோழர்கள், பொதுமக்கள் என பலரும் கலைஞரின் உரையைகேட்டனர்.

கொட்டாரம்

அகஸ்தீசுவரம் ஒன்றிய தி.. சார்பில் தமிழக முதல்வர் கலைஞரின் சங்கநாதம்அக். 20 அன்று மாலை 6 மணி கன்னியாகுமரி - கொட்டாரம் சந்திப்பில்எழுச்சியுடன் ஒலி பரப்பப்பட்டது. அகஸ்தீசு வரம் ஒன்றிய தி. செயலாளர்கோம்பவிளை செ. நாகலிங்க பெருமாள் அதற்கான ஏற் பாடுகளை செய்திருந்தார். அங்கு ஒலிபரப்பட்ட கலை ஞரின் உரையை தி.., தி.மு.. தோழர்கள் மற்றும்அப்பகுதி பொதுமக்கள் என பலரும் கேட்டு மகிழ்ந்தனர். திங்கள் நகர்

குருந்தன்கோடு ஒன்றிய தி.. சார்பில் அக். 20 அன்று மாலை 6 மணிக்கு திங்கள்நகர் சந்திப்பில் பெரியார் திடலில் கலைஞர் உரை குறுந்தகடு ஒலி பரப்பப்பட்டது. குருந்தன் கோடு ஒன்றிய தி.. தலைவர் பெ. சுப்பிரமணியம் தலைமைதாங்கினார். தி.மு.. பேரூர் செயலாளர் திங்கள் நகர் கா. பாலையன் கலைஞர்உரை ஒலிபரப்பை தொடங்கி வைத் தார். குருந்தன்கோடு ஒன்றிய தி.. செயலாளர் .. நூர்தீன், ஒன்றிய தி.மு.. இலக்கிய செயலாளர் கவிஞர்இப்ராகிம், தி.. தோழர்கள் நெய்யூர் ஜெப ராஜ், சுபாஷ் மற்றும் தி.மு.. தோழர்கள்பலர் கலந்து கொண்டனர் பொதுமக்கள் கலைஞரின் உரையை உணர்ச்சி பொங்ககேட்டனர்.

இடைப்பாடி

அக். 20 அன்று காலை 10.30 மணிக்கு இடைப்பாடி பேருந்து நிலையம் முன்புள்ளதி.மு.. கொடிக்கம்பம் அருகில் நகர தி.. சார்பில் நகர தி.. செயலாளர் கே.என்பாலு தலைமையில், நகர தி. தலைவர் சி. இராமன், ஒன்றிய தி.. அமைப்பாளர்கே. கதிர் வேல் ஆகியோர் முன்னிலை யில் தமிழக முதல்வரின் உரை குறுந்தகடுஒலிபரப்பப்பட் டது.

இடைப்பாடி நகர தி.மு.. செயலாளரும் நகர்மன்ற துணைத் தலைவருமான கே. ஜெயபூபதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். எட்டா வது வார்டு தி.மு.. செயலாளர் .பி. மணி, நகர தி.. இளை ஞரணி தோழர் வடிவேல், பெரியார்பெருந்தொண்டர் கள் . சந்தியநாதன், எஸ்.பி. மெய்வேல், கோ. அன்புமதிமற்றும் திரளான தி.மு.. இளைஞரணி தோழர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

பேருந்து நிலையம் முன் புள்ள சேலம் பிரதான சாலை இருமருங்கிலும் தி.., தி.மு.. கொடிகள் கட்டப்பட்டு, எட்டுக்கும் மேற்பட்ட ஒலி பெருக்கிகள் அமைத்து, தி..., தி.மு.. கழகப் பாடல்களுக்கு இடைஇடையே முதல்வர் கலைஞரின் உரைஒலி பரப் பப்பட்டது. மாலை 6 மணி முதல் மேல் இரவு 10 மணி வரையிலும்நிகழ்ச்சி எழுச்சி யோடு நடைபெற்றது.

சேலம்

அக். 21 அன்று மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை சேலம் மாநகர் மாவட்டகழகம் சார்பில் பொன்னம் மாப்பேட்டை, அம்மாப் பேட்டை பெரியார் படிப் பகம், வித்தியா நகர், கடைவீதி, ஆனந்தா அருகில் சேலம் சின் னக் கடைவீதி மற்றபகுதி களில் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி கலைஞர் ஆற்றிய உரைஒலிபரப்பப்பட்டது.

அக். 25 அன்று மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை சேலம் தாதகப்பட்டி, தாகூர் தெரு, குமரன் நகர் 1, குமரன் நகர் 2, குமரன் நகர் 3, தாகதப் பட்டி கீழத் தெரு, காமராசர் ககர் மன்ற பகுதிகளில் தமிழர் தலைவர் கி. வீரமணி, சுப. வீரபாண்டியன்மற்றும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் உரை சிறப்பானமுறையில் ஒலிபரப்பப்பட்டது.

கரூர்

கரூர் பேருந்து நிலையம் சுற்றுப்பாதையிலுள்ள சூரியா தேநீர் விடுதியின் முன்புஅக். 20 அன்று மாலை 6 மணிக்கு ஒலிபெருக்கி அமைத்து கலை ஞர் உரைஒலிபரப்பட்டது தாந்தோணி நகராட்சியின் நகராட்சி அலுவலகம் முன்புஒலிபெருக்கி அமைத்து கலை ஞரின் உரை ஒலிபரப்பப்பட் டது. இதற்கானஏற்பாட்டை மாவட்ட அமைப்பாளர் வே. இராசு மற்றும் தாந்தோணி நகராட்சிதிராவிடர் கழக அமைப்பாளர் மா. மனோகரன் உள்ளிட்ட பலர் ஏற்பாடு செய்தனர்.

வெங்கமேடு

இனாம் கரூர் நகராட்சி பகுதியான வெங்கமேட்டில் தி.மு.. பணிமனை முன்புசேலம் பிரதான சாலையில் அக். 20 அன்று மாலை 6 மணிக்கு குறுந்தகடுஒலிபரப் பட்டது. இந்நிகழ்ச்சியை கரூர் நகரத் தலைவர் தி. செல்வராஜ், துணைத்தலைவர் தே. அலெக்ஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அனைத்து இடங்களிலும் கொட்டும் மழையிலும் ஈழப் பிரச்சினை குறித்தகலைஞரின் உரை குறுந்தகடு தலைமைக் கழகத்தின் ஆணைப்படி அக். 20 அன்றுமாலை 6 மணிக்கு ஒலிபரப்பப்பட்டது.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் கரூர் மாவட்ட தி.. தலைவர் வழக்கறிஞர் மு.. இராசசேகரன், செயலாளர் . சதாசிவம், துணைச் செயலாளர் . இராமராசு ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை