ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

23 நவம்பர், 2008

இனமொழி உணர்வின்றி இளையவர் கூட்டம் திரைப்படக் கவர்ச்சியால் வீணானது!


தமிழின உணர்வுக்குத் தளையா?

தமிழர்தம் தாயகத்தில் தமிழனை வெறும்
சுவைஞனாக்கி சுரண்டியது தமிழ்த்திரை
தமிழுணர்வு தவறியும் தலையெடுக்கவிடாமல்
தடுத்தனர் திரைத்துறைப் பார்ப்பனர்
திரைப்படக் கவர்ச்சியால் தமிழனல் லாதார்
தலைவனாக சித்தரிக்கப் பட்டார்
திரைத்துறையே தமிழக அரசியலைத் தீர்மானம்
செய்யும் வல்லமை பெற்றிருந்தது

இனமொழி உணர்வின்றி இளையவர் கூட்டம்
திரைப்படக் கவர்ச்சியால் வீணானது!
இனமொழி உணர்வுள்ள இயக்குநர் பாரதி
அரசுசீமான் தமிழுணர்வால் தடமமைத்தார்
ஆற்றுநீர்ச் சிக்கலில் அடவாடிசெய்யும்
அண்டை மாநிலத்தைக் கண்டித்தார்
வேற்று மொழியினர் விரவிய தமிழ்த்திரையில்
தமிழின விடியலை முன்னெடுத்தார்!

ஈழத் தமிழர் படுகொலையால் எழுந்தது
எம்மினம் சிவந்து சினந்தது
ஈழத் தமிழர் இன்னல் களைந்திட
ஆர்த்தெழுந்தார் துறைகள் தோறும்
திரைத்துறைத் தீரர்கள் திரண்டனர் கண்டனப்
பேரணி பொதுக்கூட்டம் நடத்திட
திரைத்துறையின் போர்க்கோலம் தமிழரிடை இனவுணர்வு
நீறுபூத்த நெருப்பு கனன்றது

அடியோடு தமிழனை அழிக்கிறான் சிங்களன்
ஆயுதம் கொடுக்கிறது இந்தியா
நடுநிலை தவறிய நடுவண் அரசை

வாழ்த்தி வணங்கிட வேண்டுமா?
வெடித்துக் கிளர்ந்த வீறான தமிழரை
முடக்கிப் போட நினைப்பதா?
தடித்த தோலர்கள் தன்மான மற்றதுகள்
செயா தங்கபாலு வகையறாக்கள்

தொப்புளைச் சுற்றிப் பம்பரம் விட்டவர்
தலைவனாம் அவரோடு கூட்டணி
தொப்புள் கொடி.உறவு பற்றி முழக்கிய
சீமான் தமிழர்க்குப் பகைவரா?
தமிழின உணர்வைத் தமிழர்க்கு ஊட்டினால்
தமிழ்ப்பகைவர் ஊளை யிடுகின்றார்
தமிழ்ப் பகையைக் கக்கிடும் தடித்ததுகளை ஒதுக்கிய
சீமான் அமீருக்குச் சிறையா?

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு