ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

21 நவம்பர், 2008

வீக் எண்ட் என்றால், கோலாகல பார்ட்டிகளை அரங்கேற்றுகிறார்கள் ,ஸ்ரேயா, த்ரிஷா, இலியானா ,நடிகைகளும் கும்மாளம் போடுவார்களாம்.


எங்க ஊர்ல இப்படியில்லை....
விஷால் வருத்தம்

“எங்க ஊர்ல இப்படியெல்லாம் கிடையாது. இங்கேதான் இரண்டு பேர் சிரிச்சு Vishal-Trishaபேசினாலே காதல்னு கிசுகிசு கிளப்புறாங்க” இப்படி புலம்பி தவித்திருக்கிறார் புரட்சித்தளபதி விஷால். இவர் எங்க ஊரு என்று சொன்னது டோலிவுட்டை.

வீக் எண்ட் என்றால், கோலாகல பார்ட்டிகளை அரங்கேற்றுகிறார்கள் தெலுங்கு தேசத்தில். முன்னணி ஹீரோவிலிருந்து, காமெடி நடிகர்கள் கூட இந்த பார்ட்டிகளில் கலந்து கொள்வார்களாம். அதுமட்டுமல்ல, ஸ்ரேயா, த்ரிஷா, இலியானா என்று டாப் மோஸ்ட் நடிகைகளும் கும்மாளம் போடுவார்களாம். இந்த பார்ட்டிகளில் தவறாமல் கலந்து கொள்கிற ஹீரோக்களில் ஒருவர் விஷால்.

அந்த பார்ட்டிகளின் போதுதான் இவருக்கும் த்ரிஷாவுக்கும் நெருக்கமே அதிகரித்தது என்கிறார்கள். சில நேரங்களில் இந்த வைபவத்திற்கு போக முடியாமல் சென்னையில் மாட்டிக் கொள்ளும்போது ரிலாக்சுக்காக இங்கேயே கூடும் இந்த ஜோடிகளின் மீதுதான் காதல் பழி விழுந்திருக்கிறது. செல்வராகவன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் விஷால். அதற்கு முன்பாகவே தோரணை படத்தில் விஷாலுடன் இணைய முடியாத த்ரிஷா, தனது தேதிகளை ஒதுக்கி இந்த படத்தில் இணைந்துவிட்டாராம். இப்போதும் விஷால் சொல்வது, இது வெறும் நட்புங்க... என்பதுதான்.

கொஞ்சம் லிமிட் மீறிய நட்பு என்று எடுத்துக் கொள்ளலாமா?

லேபிள்கள்: , , , , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு