ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

13 டிசம்பர், 2008

வடிவேலு நாலு கோடி கேட்டதால் அதிர்ந்து போன சிம்பு தேவன், விவேக்கிடம் போனார்

 லாரன்ஸ்-சிம்பு தேவன் கூட்டு
வடிவேலு நாலு கோடி கேட்டதால் அதிர்ந்து போன சிம்பு தேவன், விவேக்கிடம் போனார். அவரும் ஒன்றரைக் கோடி வரை கேட்டு சிம்பு தேவனை அதிர வைத்தார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மாதிரி இன்னொரு படத்தை இவர்களை வைத்து எடுத்துவிடலாம் என்று கனவு கண்ட சிம்பு தேவன், ஒரு வழியாக உறக்கம் கலைந்து எழுந்துவிட்டார்.
இந்த இரு பெரும் நகைச்சுவை திலகங்களைத் விட்டுவிட்டு, லாரன்ஸ் பக்கம் போய்விட்டாராம். கதையைக் கேட்ட லாரன்ஸ், சம்பளம் ஒரு பொருட்டே அல்ல. படத்தை எப்போ ஆரம்பிக்கிறீங்க என்று கேட்க, இவரல்லவோ கலைஞன் என்கிறார் சந்தோஷக் கூச்சலோடு

லேபிள்கள்: , ,

நான் ரசித்த கவிதைகள்.


நான் ரசித்த கவிதைகள்.

1.ஆண்டின் இறுதியில் என்னை பார்த்து காலண்டர் கேட்டது,என்னை தவிர வேறு என்ன கிழித்தாய்.
2. பூ வைக்கிறாள் பொட்டும் வைக்கிறாள் விதவை,
தினமும் தன் கணவன் படத்திற்கு.
3.சிறு உரசலுக்கே தீக்குளிப்பா?
தீக்குச்சி
4.அம்மண சிறுவன் கீழே,
வெட்கமின்றி காற்றில் பறக்கும் கொடி.
5.வானை பார்த்து சிறுநீர் விட்ட சிறுவன்
நிலவை அசைத்தான் குளத்தில்.

இது எப்படி இருக்கு?

இந்த கதையை நான் என் மாமாவின் blog இல் இருந்து சுட்டது ,
இளைஞன் ஒருவன் மிருகக்காட்சி சாலையில் வேலைக்கு சேர்ந்தான்.அங்கிருந்த கொரில்லா இறந்து விட்டதால் அவன் கொரில்லா போல் வேடமணிந்து கொண்டு குரங்கு சேட்டைகள் செய்ய வேண்டும்.இது தான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை .அவனும் அதை ஏற்றுக்கொண்டு ஒழுங்காக செய்து வந்தான். ஒருநாள் அதிக கூட்டத்தைப் பார்த்த உற்சாக மிகுதியில் கண்டபடி குதித்தான்.அப்படி குதித்தபோது நிலை தடுமாறி பக்கத்திலிருந்த சிங்க கூண்டுக்குள் விழுந்துவிட்டான்.உடனே பயந்துபோய் "காப்பாத்துங்க ! காப்பாத்துங்க !!!" என்று கத்தினான். அந்த சிங்கம் மெதுவாக அவனிடம் வந்து சொன்னது, "முட்டாளே! கத்தாதே!!! நாம் நடிப்பது மக்களுக்கு தெரியக்கூடாது

லேபிள்கள்: , , ,

கொஞ்சம் சிரிங்க,அப்பா 5 + 5 எவ்வளவு?


நன்றி:
sms அனுப்பிய அனைத்துநண்பர்கள் மற்றும் cvag,

டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சிபாக்குற அளவுக்கு!!!
சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்பரோட்டாபோடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…
என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,அதால ஒரு லாக்கை கூட ஒப்பன்பண்ண முடியாது.
ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை,அவங்களை மாதிரியே நல்லாசிகப்பாபிறந்தது. அதுக்குசிங்- சாங்-பங்குன்னு பேர் வச்சாங்க. இரண்டவதுகுழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது. அதுக்குரீங்- சாங்-சிங்குன்னு பேர் வச்சாங்க. ஆனாமூணாவதா பிறந்த குழந்தை, நீக்ரோமாதிரிகறுப்பா பிறந்தது. அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க? ”தெரியலையே””சம்- திங்-ராங்குன்னு.
நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க
அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்ஒரு காப்பிஎவ்வளவு சார் ?5 ரூபாய்.எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!

நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்?

அப்பா 5 + 5 எவ்வளவு?
மடையா, அறிவு இல்லே, வெட்கமாக இல்லே உனக்கு, இது கூட தெரியாதா? சரி, சரி அந்தகால்குலேட்டரை எடுத்து வா நான் பார்த்து சொல்றேன்.

இன்பத்திலும் சிரி,துன்பத்திலும் சிரி,சிரிச்சுக்கிட்டே இரு
அப்பதான் நீ லூசுன்னுஎல்லாரும் நம்புவாங்க………

காலிஃ பிளவரைதலையில் வைக்க முடியாதுஎலக்ட்ரிசிட்டியில் தங்கமுடியாதுகள்ளிப்பாலில்காபி போட முடியாதுகோலமாவில்பூரி போடமுடியாதுகோல்டுபில்டரை அடகு வைக்க முடியாது- இது மாதிரிஉன்னையும்குளிக்க வைக்க முடியாது!
-குளிக்கும்போது யோசிப்போர் சங்கம்

நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா, அது என்ன நினைக்கும் தெரியுமா?
Intel insideMental outside !!!
- மல்லுக்கட்டி யோசிப்போர் ?ங்க?ம்

நண்பா உன் எதிர்காலம்நீ காணும் கனவுகளில்தான் இருக்கிறது!
அதனால
சீக்கிரமா தூங்கப் போடா கண்ணு!

உன்னை யாரவதுலூசுன்னு சொன்னா???..
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படிதெரியும்ன்னு கேள் !!!

என்னதான் கராத்தேலபிளாக்பெல்ட்டுனாலும்தெருநாய் தொரத்தினாஓடத்தான்செய்யணும்!

வாழை மரம்தார்போடும்ஆனால் அதை வச்சுநம்மாலரோடுபோட முடியாதே!

நாய்க்கு நாலு கால் இருக்கலாம்,ஆனால், அதாலலோக்கல் கால்,எஸ்.டி. டி.கால்,.எஸ்.டி. கால்ஏன் ஒரு மிஸ்டு கால் கூடப் பண்ண முடியாது.
- விஞ்ஞானரீதியா யோசிப்போர் சங்கம்

ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னாமாவாட்டச் சொல்வாங்கபஸ்ல காசுக்கொடுக்கலன்னாபஸ் ஓட்டச்சொல்வாங்களா?
- கஷ்டப்பட்டு யோசிப்போர் சங்கம்

டாக்டர் உங்களைச்சந்திக்கனும் நீங்க எப்பஃப்பிரி
எப்ப வந்தாலும் நான்ஃப்பிரிஇல்லபீஸ்வாங்குவேன்

அரண்மனைக்குள்ளே அடிக்கடி சரிங்சு விழுந்து காயம் பண்ணிக்கிறீங்களேமன்னா!
அதற்காக நீங்கள் கொற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம்சிராய்ப்புனுபாட்டெழுதுற்தா?!

என்ன சார், நீங்க யூனிவர்சிட்டியில வேலை செய்யறதாசொன்னீங்க. ஆனாவீட்டுல சமையல்செய்துட்டிருக்கீங்க?நல்லதொரு குடும்பம்பல்கலைக்கழகம்னு உங்களுக்கு தெரியாதா…?!

தண்டோரா போடுபவனை மன்னர் ஏன் தண்டிக்கிறாரு?
இளவரசியை அடக்குபவருக்கு காளை பரிசுன்னு மாற்றிச் சொல்லிட்டானாம்!!

பெப்ஸிக்கு சூர்யாகோக்குக்கு விஜய்ஃபேண்டாவுக்கு சிம்ரன்கவலையேபடாதே மாமுகோலி சோடவுக்கு உன்னை விட்டா யாரும்மில்லை

இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யிலசொன்னாங்க.நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க

என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விலக்கும் போதுஇளிச்சவாயன்தான்.

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால்இல்லன்னாபேலன்ஸ் பண்ண முடியாது.செல்போனில் பேலன்ஸ் இல்லன்னாகால் பண்ண முடியாது.

வாளமீன்???
வின்டோஸ்க்கும் லினக்ஸ்க்கும் கல்யாணம்.அந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர்எல்லாம் ஊர்வலம்.இன்டர்நெட்டில் நடக்குதய்யா திருமணம்.அந்த டிவைஸ்டிரைவர்க்கு எல்லாம் கும்மாளம்.கல்யாணமா கல்யாணம்.கல்யாணமாகல்யாணம்.மாப்பிள்ளை சி ஸ்ட்ராங்கான ஆளுங்கோ,மணப்பொண்ணு சி+ + தானுங்கோ,இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் பெரிய மனுஷர்யாருங்கோ…?தலைவரு பில்கேட்ஸ் தானுங்கோ.

லேபிள்கள்: , , ,

இன்று ரஜினியின் 59வது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி அவரை தொலைபேசி மூலம் வாழ்த்தினார்.

இன்று ரஜினியின் 59வது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி அவரை தொலைபேசி மூலம் வாழ்த்தினார்.

இலங்கைத் தமிழர்கள் துயரத்தில் உள்ள நிலையில் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு அவர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்ததால் பிறந்த நாள் கொண்டாட்டம் வழக்கமான அளவில் இல்லை.

மேலும் ரஜினியும் இன்று ஊரில் இல்லை. ஹைதராபாத்தில் நடந்து வரும் சுல்தான் தி வாரியர் அனிமேஷன் படத்தின் ஷூட்டிங்கில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

இந் நிலையில் முதல்வர் கருணாநிதி, ரஜினியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட ரசிகர்களுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தி.நகர் பகுதியில் ரஜினிகாந்த்தின் பிரமாண்ட கட் அவுட்டும் ரசிகர் மன்றம் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் ரஜினியின் பிறந்த நாளை ரசிகர்கள் கோவில்களில் விசேஷ வழிபாடுகள், பூஜைகளை நடத்தியும், அன்னதானம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டும் கொண்டாடினர். எந்திரன் படம் வெற்றி அடைய வேண்டும் எனவும் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அன்பார்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் நம் தலைவரின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் . 59 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு விடிவெள்ளி இன்று சூப்பர் ஸ்டார் ஆக மின்னிக்கொண்டிருக்கிறது என்றால் அந்த தங்க தலைவனின் உழைப்பு ,விடாமுயற்சி ,தன்னம்பிக்கை ,தனி பாணி , தன்னடக்கம் ,இன்னும் என்னென்ன நற்குணங்கள் உண்டோ அத்தனைக்கும் சொந்தக்காரர் நம் தலைவர் . வட்டமிடும் வல்லூறுகள் போல் எப்போது விழுவார் ஏளனம் செய்யலாம் ,ஏகடியம் பேசலாம் ,எகத்தாளம் பண்ணலாம் என்று காத்திருக்கும் எதிரிகள் ஒருபுறம் , தமிழ் தமிழ் என்று பேசி தனிமைப்படுத்த நினைக்கும் தருக்கர்கள் கூட்டம் ஒருபுறம் , தலைவர் வாயை திறந்தாலே வாய்தா வாங்க வரிசை கட்டி நிற்கும் வக்கற்றவர்கள் ஒரு புறம் , காவேரி .ஒகேனக்கல் ,இலங்கை தமிழர் என்று எதை பற்றி பேசினாலும் தனக்கு தோன்றியதை எழுதி காசு பர்ர்க்க துடிக்கும் தான்தோன்றி பத்திரிக்கைகள் ஒருபுறம் என எண்ணற்ற எதிரிகள் எட்டு திசையிலும் . என்ன செய்ய தலைவா ?

ஒரு சொல் போதும் உன்னிடமிருந்து , உண்மை ரசிகன் உனக்காக உதிரம் உதிர்க்க தயார் . ஏன் இன்னும் மவுனம் ? உன் பலம் உனக்கும் தெரியவில்லையா ? அல்லது எங்கள் பலம் மீது நம்பிக்கை இல்லையா

லேபிள்கள்: , , , , ,

ஜமாத் உத் தாவா;தங்களது அமைப்பின் பெயரை மீண்டும் மாற்றிக் கொண்டு செயல்பட எந்தத் தடையும் இல்லை

Pranab Mukherjee
தீவிரவாத அமைப்புகளை தடை செய்வது, அதன் தலைவர்களை வீட்டுக் காவலில் வைப்பது போன்ற கண்துடைப்பு வேலைகள் எல்லாம் உதவாது. அந்த அமைப்புகளை அடியோடு ஒழித்துக் கட்டும் வேலைகளை பாகிஸ்தான் செய்ய வேண்டும் என அமெரிக்காவிடம் இந்தியா கூறியுள்ளது.

டெல்லி வந்துள்ள அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் ஜான் நெக்ரோபாண்டேவிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இதைத் தெரிவித்தார். மேலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸ்ஸா ரைசுடனும் பிரணாப் தொலைபேசியில் பேசினார்.

அமெரிக்காவிடம் பிரணாப் விளக்கம்:

அவர்களிடம், லஷ்கர் ஏ தொய்பாவின் இன்னொரு முகமான ஜமாத் உத் தாவாவின் தலைவர் ஹபீஸை கைது செய்து வீட்டுக் காவலில் வைப்பதாலோ, அதன் சில அலுவலங்களுக்கு சீல் வைப்பதாலோ மட்டும் நிலைமை மாறிவிடாது, அவர்கள் தங்களது அமைப்பின் பெயரை மீண்டும் மாற்றிக் கொண்டு செயல்பட எந்தத் தடையும் இல்லை என்பதை முகர்ஜி சுட்டிக் காட்டினார்.தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோரையும் நெக்ரோபாண்டே சந்தித்துப் பேசினார்.

ஜெர்மன் அமைச்சர் வருகை:

இதற்கிடையே ஜெர்மன் உள்துறை அமைச்சர் வோல்வ்கேங்கும் டெல்லி வந்து பிரதமரையும் முகர்ஜியையும் நாராயணனையும் சந்தித்து மும்பை தாக்குதல் குறித்துப் பேசினார்.

இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தடை விதிப்பதால் மட்டும் தீவிரவாதத்தை தடுத்துவிட முடியாது. அடுத்த நாட்டில் போய் தாக்குதல் நடத்தாத அளவுக்கு அந்த அமைப்புகளின் செயல்பாட்டை பாகிஸ்தான் முடக்க வேண்டும்.

இந்த தீவிரவாத அமைப்புகளின் திட்டம் இந்தியாவில் இந்து-முஸ்லீம்களிடையே மோதலை ஏற்படுத்துவது தான். மும்பை தாக்குதலையடுத்து ராணுவரீதியிலான நடவடிக்கையில் இறங்காமல் இந்தியா தனது பொறுப்புணர்வைக் காட்டியது பாராட்டத்தக்கது. இதை பாகிஸ்தான் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை:

இதற்கிடையே பாகிஸ்தான் மீது ராணுவத் தாக்குதல் எதையும் நடத்தாத வகையில் இந்தியாவிடம் தாங்கள் பேசி வருவதாகவும், அதே நேரத்தில் இந்தியாவை சமாதானப்படுத்தும் வகையில் தீவிரவாத அமைப்புகள் மீது உண்மையிலேயே தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானிடம் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

'தீவிரவாத நாடாக அறிவி்த்திருப்பார்கள்':

இதற்கிடேயே ராவல்பிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் செளத்ரி அகமத் முக்தார்,

ஜமாத் உத் தாவாவுக்கு அரசு தடை விதி்த்திருக்காவிட்டால் பாகிஸ்தானை ஐ.நா. சபை தீவிரவாத நாடாகவே அறிவித்திருக்கும். எதிரியுடன் (இந்தியாவை சொல்கிறார்) சண்டை போடலாம். ஆனால், ஒட்டு மொத்த உலகத்துடனும் நம்மால் மோத முடியாது என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் ஐ.நா. தடைக்கு பயந்தே இந்த குறைந்தபட்ச நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்திருப்பது உறுதியாகிறது. மனதார அந்த நாடு தீவிரவாதிகளை ஒழிக்கும் வேலைகளில் இன்னும் இறங்கவில்லை.

லேபிள்கள்: , , , , ,

யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் எம்பி சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா

Sivajilingam
யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் எம்பி சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இப்போது இந்தியாவில் உள்ள சிவாஜிலிங்கம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து விளக்கி வருகிறார்.

இவர் புலிகள் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பியாவார்.

இந் நிலையில் 72 மணி நேரத்தில் அவர் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு கடத்துவோம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்ததகவை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத் தளத்தில் நேற்று வெளியிட்டது.ஆனால், கொழும்பு திரும்பினால் தன்னை இலங்கை அரசு கொலை செய்து விடும் என்பதால் தான் இந்தியாவிலேயே தங்கியிருக்க அனுமதிக்குமாறு சிவாஜிலிங்கம் அடைக்கலம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தனக்கு இந்திய அரசிடம் இருந்து இதுபற்றி தகவல் ஏதும் வரவில்லை என்றும், இது இலங்கை அரசால் திட்டமிட்டு பரப்பப்படும் புரளியாக இருக்கலாம் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்ததாக இலங்கை தமிழ் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லேபிள்கள்: , , , , ,

போர் தீவிரமடைந்துள்ள நிலையில் சமாதானப் பேச்சுக்கள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் எட்டாத தொலைவில் உள்ளன. பா.நடேசன்


தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் பிரித்துப் பார்த்து குரூரமாக திருப்தியடைய சில சக்திகள் விரும்புகின்றன. ஆனால், அவையெல்லாம் கற்பனைகளாகவே இருக்கும். தமிழரின் தலைமைச் சக்தி புலிகள் இயக்கம்தான் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுவிசிலிருந்து மாதம் இருமுறை வெளிவரும் 'நிலவரம்' (12.12.08) வார இதழுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கிளிநொச்சி மீதான முற்றுகை இறுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றியே ஆவதெனச் சிங்களம் சூளுரைத்துள்ள நிலையில், என்ன விலை கொடுத்தாவது கிளிநொச்சியைக் காப்பாற்றியே தீர்வதென விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. களநிலவரம் உண்மையில் எவ்வாறாக இருக்கின்றது?

சிங்களப் படைகளின் சிறப்பு டிவிசன்கள் இரண்டின் படையணிகள் கிளிநொச்சிக்கான சமரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் கிளிநொச்சியின் மேற்கே பலமுனைகளில் கடும் சண்டைகள் நாள்தோறும் நடக்கின்றன. சிங்களப் படைகளின் முயற்சியை முறியடிக்கும் எதிர்ச்சமரில் புலி வீரர்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர். இதுவரை இரண்டு காலக்கெடுக்களைச் சிங்களத் தளபதிகள் கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு என்று விதித்தும், அது அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. கிளிநொச்சிக்கான சண்டைகளில் சிங்களப் படைகள் கடுமையான உயிரிழப்புக்களைச் சந்தித்து வருகின்றன. புதிய வியூகங்கள்- தந்திரோபாயங்களுடன் கிளிநொச்சியைப் பாதுகாக்கும் எதிர்ச்சமரில் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.

வன்னியில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஏதிலிகளாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் துயரம் மிக மோசமாக ஆகியிருக்கின்றது. மக்களை வவுனியாவிற்கு வருமாறு அரசு கோரி வருவதுடன், அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாகவும் பிரசாரம் செய்து வருகின்றது. ஏதிலிகளாக உள்ள மக்கள் வவுனியாவிற்கு வருகை தராமைக்குக் காரணம் என்ன?

சிங்களப் படைகள் நிலங்களை ஆக்கிரமிக்கும் போது அங்கிருந்து மக்கள் இடம்பெயர்ந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பாதுகாப்புத் தேடுவதுதான் வழமை. இதுதான் இப்போதும் நடைபெறுகின்றது. தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு காட்டும் அக்கறை 'ஆடு நனையுதென்று ஓநாய் அழுத' கதைதான். இன அழிப்பிற்கும், சமூகச் சீரழிப்பிற்கும் எமது மக்களை உட்படுத்திப் போராட்டத்தை அழிக்கும் நாசகார நோக்குடனேயே சிங்கள அரசு தனது பகுதிக்குள் வருமாறு மக்களை அழைக்கின்றது. எத்தனை தடவைகள் இடம்பெயர்ந்தாலும், புலிகளின் கட்டுப்பாட்டு நிலத்தில் வாழவே மக்கள் விரும்புகின்றனர். சிங்கள அரசின் அழைப்பை மக்கள் தாமாகவே நிராகரிக்கின்றனர்.

போர் தீவிரமடைந்துள்ள நிலையில் சமாதானப் பேச்சுக்கள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் எட்டாத தொலைவில் உள்ளன. அதேவேளை, விடுதலைப் புலிகளைப் புறந்தள்ளி அரசியல் முனைப்புக்களில் ஈடுபட மேற்குலக நாடுகள் ஒரு சிலவற்றின் ஆசீர்வாதத்துடன் ஒருசில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

புலிகளையும் - தமிழ் மக்களையும் பிரித்துப் பார்த்து குரூரமாக திருப்தியடையச் சில சக்திகள் விரும்புகின்றன. ஆனால், அவையெல்லாம் கற்பனைகளாகவே இருக்கும். தமிழரின் தலைமைச் சக்தி புலிகள் இயக்கம்தான். இதனை தமிழ் மக்களும் பல தடவைகள் தேர்தல் நடைமுறைகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியத்திற்கு விரோதமான சில தனிநபர்கள் தம்மைத் தலைவர்களாகக் கற்பனை செய்துகொண்டு திரிவது கேலிக்கூத்தானது. இதுபற்றி புலிகள் இயக்கம் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.

சிறிலங்கா அரசு தொடர்ந்தும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றது. அண்மையிலும் கூட இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்களின் மீது வானூர்தி குண்டுவீச்சுக்களை நடாத்தியிருக்கின்றது. இத்தனை அநியாயங்களைச் சிங்களம் மேற்கொண்டு வரும் நிலையிலும் அனைத்துலகம் இன்னமும் சிங்களத்தின் பக்கமே நிற்பதற்குக் காரணம் என்ன?

சிங்கள அரசு செய்து வரும் தமிழின அழிப்பிற்குச் சில நாடுகள் உதவி வருகின்றன என்பது எல்லோரும் அறிந்ததே. நீதி, நியாயம், தர்மம் என்பவற்றிற்கு முரணாக ஒரு இன அழிப்பு அரசுக்கு இந்த நாடுகள் முண்டு கொடுப்பது தமிழ் மக்களுக்கு வேதனையையும், கோபத்தையும் கொடுக்கின்றது. எமது விடுதலைப் போராட்டம் பற்றியும், புலிகள் இயக்கம் பற்றியும் சிங்கள அரசு கூறும் பொய்ப் பிரச்சாரத்தை ஒருதலைபட்சமாக நம்புவதன் விளைவே மேற்குறித்த செயற்பாடுகளாகும். இதுபற்றி மீண்டும் மீண்டும் உலக நாடுகளுக்கென பல விளக்கங்களை, வேண்டுகோள்களை விடுத்து வருகின்றோம். பல நாடுகள் எமது குரலுக்குச் செவிசாய்த்துச் சிங்கள அரசுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியுள்ளன. ஆயினும் சில நாடுகள் சிங்கள அரசின் வலையில் சிக்குண்டு தமிழின அழிப்பிற்கு உதவுகின்றன.

"சிங்களத்தின் இராணுவ வெற்றிகள் பற்றிய கனவுகள் நிச்சயம் கலையும்" எனத் தேசியத் தலைவர் தனது மாவீரர் நாள் உரையில் தெரிவித்திருந்தார். அதன் அர்த்தமென்ன?

இராணுவ வெற்றி பற்றிய சிங்களத்தின் கனவு அதன் கூடப்பிறந்த குணமாகவே உள்ளது. ஒரு இராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டு கனவு காண்பதும் பின்னர் அந்தக் கனவு கலைந்து இராணுவத் தோல்விக்குள் சிக்குவதும் கடந்தகால உண்மைகளாகும். இப்போதும் அத்தகையதொரு இராணுவ வெற்றி பற்றிய கனவில் சிங்கள தேசம் ஆழ்ந்துள்ளது. தக்க நேரத்தில் சிங்களத்தின் இராணுவத் திமிருக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்.

அண்மைக்காலமாகத் தமிழ்நாட்டில் ஏற்பட்டுவரும் எழுச்சி மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றது. இந்த எழுச்சி தமிழ் மக்களின் விடுதலையை எவ்வகையில் விரைவுபடுத்துமென நினைக்கின்றீர்கள்?

ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டுத் தமிழ் மக்களின் ஆதரவு ஒரு முக்கியமான விடயமாகும். நாம் தனித்து விடப்படவில்லை உலகத் தமிழர்கள் எம்முடன் உள்ளனர் என்ற உணர்வே எமக்குச் செயல் வேகத்தையும், உற்சாகத்தையும் தரவல்லன. தமிழ் நாட்டின் இனவெழுச்சி சிங்களத்திற்கு அச்சமூட்டக்கூடிய வகையிலேயே உள்ளது. அத்துடன், அரசியல் ரீதியாக உலக அபிப்பிராயத்தை எம்பக்கம் திருப்பத் தமிழ்நாட்டின் இனவெழுச்சி உதவும். தமிழ்நாடு சட்டசபையில் எமது மக்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட அனைத்துக் கட்சித் தீர்மானம் எமது விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரமாகவும் உள்ளது.

இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவது தொடர்பில் விடுதலைப் புலிகள் தற்போது அதிக அக்கறை கொண்டுள்ளதைப் போன்று தென்படுகின்றது. அதேவேளை, இது சிலரால் பலவீனத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகின்றதே?

ஈழத் தமிழருக்கும் இந்தியாவிற்குமான உறவு ஒரு வரலாற்று உறவாகும். இடையில் சிங்களத்தின் சதியால் அந்த உறவு அறுந்திருந்தது. மீண்டும் அந்த உறவைக் கட்டியெழுப்பும் புறச்சூழல் இருதரப்பிலும் ஏற்பட்டு வருகின்றது. இந்த இருதரப்பு உறவைச் சிங்கள இனவாதிகள் விரும்பவில்லை. எனவே, இந்த முயற்சியை கொச்சைப்படுத்தி திருப்தி காண முயல்கின்றனர்.

அண்மையில் மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலால் இந்தியாவின் அரசியல் சூழலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் இதன் பாதிப்பு மேலும் உணரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப் புதிய சூழ்நிலை தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்துமென எதிர்பார்க்கின்றீர்கள்?

மும்பாய் மீதான குண்டுத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தியாவின் பாதுகாப்பிற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான ஒரு சீரழிப்பு முயற்சியே அது. குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளை இந்தியப் புலனாய்வுத்துறை கண்டறிந்துள்ளது. இந்தியாவிற்கு எதிராகச் சில நாடுகள் திரைமறைவில் செயற்படுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான அந்தப் பகைமை நாடுகளுடன் சிங்கள அரசு உறவு பேணி வருகின்றது என்பது வெளிப்படை. இது இந்திய இராஜதந்திரிகளுக்கும் நன்கு தெரியும்.

ஒரு இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழம் போராடுகின்றது. இதுவொரு விடுதலைப் போராட்டம் காலங்காலமாக அடக்கப்பட்ட இனங்கள் விடுதலை கோரிப் போராடுவது வரலாற்று வழமை. தமிழீழ மண்ணில் தமிழரின் நலன்களை முன்வைத்து எமது போராட்டம் நடக்கின்றது.

அண்மையில் வன்னியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக எத்தகைய பாதிப்புக்கள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின் நிலை தற்போது எவ்வாறு உள்ளது?

இம்முறை வெள்ள அனர்த்தம் ஏறக்குறைய ஆழிப்பேரலையை நினைவூட்டும் அளவிற்கு அழிவுகளை, சேதங்களைக் கொடுத்துள்ளது. அதுவும் இடம்பெயர்ந்த மக்கள் அதிகளவில் வாழும் வன்னியில் விளைவுகள் கடுமையாகவே இருக்கின்றன. வன்னியில் வாழும் மக்களில் ஏறக்குறைய எண்பது வீதம் மக்கள் இந்த வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான இடர் நிவாரண உதவிகளைச் சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. இப்போது வெள்ளம் வடிந்து விட்டது, ஆயினும் அம்மக்களிற்கான நிவாரண உதவிகள் சரியாகக் கிடைக்கவில்லை. போருக்கும் முகங்கொடுத்தபடி இந்த இடர் நிவாரணப் பணிகளில் எமது இயக்கத்தின் கட்டமைப்புகளே பெரிதும் ஈடுபட்டுள்ளன.

வன்னிக்குத் தொடர்ந்து உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதாக அரசு கூறி வருகின்றது. ஆனால், எமக்குக் கிடைக்கும் செய்திகளோ அங்கு மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. உண்மையில் அங்கு போதுமான உணவு இருக்கிறதா? தமிழ்நாட்டில் சேகரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட பொருட்கள் வந்து சேர்ந்துவிட்டனவா?

வன்னி மீது சிங்கள அரசு ஒரு பொருண்மியத் தடையை இறுக்கமாகக் கடைப்பிடிக்கின்றது. உணவு, மருந்து மற்றும் விவசாய, மீன்பிடி உள்ளீடுகளை அனுமதிக்கவில்லை. இதனால் உணவிற்கும் தட்டுப்பாடு, மருந்திற்கும் தட்டுப்பாடு, எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. உலகத் தொண்டு நிறுவனங்களையும் சிங்கள அரசு வெளியேற்றியதால் நெருக்கடி அதிகரித்துள்ளது. சிங்கள அரசும் உதவிப் பொருட்களை அனுப்பவில்லை. உலகத் தொண்டு நிறுவனங்களையும் அனுப்ப அனுமதிக்கவில்லை. ஒப்புக்காகச் சிறிதளவு பொருட்களையே அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாட்டின் உதவிப் பொருட்களில் ஒரு பகுதி எமது மக்களை வந்தடைந்துள்ளது. இப்போது வன்னியில் மோசமான உணவுத் தட்டுப்பாடு நிலவுகின்றது. இது மேலும் அதிகரித்துச் செல்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.

தாயகத்தில் நிலவும் சூழ்நிலைகள் காரணமாக புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவிதச் சோர்வு ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. அந்த மக்களுக்குக் கூறவிரும்பும் செய்தி என்ன?

சோர்வு என்பது அவநம்பிக்கையால் வருவது. அவநம்பிக்கை என்பது நிலைமைகளைப் பகுத்தாய்ந்து புரிந்து கொள்ளாமையால் வருவது. ஒரு இராணுவ நெருக்கடி தாயகத்தில் நிலவுகின்றது என்பது உண்மைதான். ஆனால், மீளமுடியாத நெருக்கடி என்று அதைக் கருதுவது தவறு. இதைவிடப் பாரிய நெருக்கடிகளை முன்னர் நாம் சந்தித்து மீண்டிருக்கின்றோம். தற்போதைய நெருக்கடியையும் தகர்த்தெறிந்து வெற்றி கொள்வோம். புலம்பெயர் மக்கள் தமது வழமையான போராட்டப் பணிகளில் உற்சாகத்துடனும், வேகத்துடனும் செயற்பட வேண்டும். உங்களது நிதிப் பங்களிப்பு எங்கள் போராட்டத்தின் முதுகெலும்பாகவே உள்ளது. உலக அரங்கில் நீங்கள் செய்யும் பரப்புரைப் பணியை மேலும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்யுங்கள் வெற்றி தரும் மகிழ்ச்சியை விரைவில் நாங்கள் அனுபவிப்போம்.

வன்னியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களுக்குப் புலம்பெயர் தமிழ் மக்கள் எத்தகைய உதவிகளை நல்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

இடம்பெயர்ந்த மக்களுக்கான இருப்பிடங்களை அமைப்பதும், உணவு, மருந்து ஏற்பாடுகளைச் செய்வதும், கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் எமது தலையாய பணிகளாக உள்ளன. இப்பணிகளை ஆற்றப் பெருந்தொகை நிதி தேவை. இதை எமது புலம்பெயர் உறவுகளே வழங்கி உதவ வேண்டும். ஏற்கெனவே நீங்கள் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றீர்கள் தொடர்ந்தும் இந்த உதவிகளை உங்களது தாயகத்து உறவுகள் எதிர்பார்த்திருக்கின்றனர் என்றார் அவர்.

லேபிள்கள்: , ,

இரு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை சுட்டுக் கொன்றுவிட்டனர்.

Encounter
இரு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டனர்.

வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ககதிய இன்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் பயிலும் ஸ்வப்னிகா, பிரனீதா ஆகியோர் தங்களது டூ வீலரில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்களை பைக்கில் வந்த கல்லூரி மாணவர்களான சஞ்சய், ஹரிகிருஷ்ணா, ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் வழிமறித்து ஆசிட் ஊற்றிவிட்டுத் தப்பினர்.

இதி்ல் இரு மாணவிகளின் முகம், உடல் வெந்துபோனது. இருவருமே மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களையும் ஆந்திர போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மூவரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு நேற்றிரவு விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

எந்த இடத்தில் வைத்து ஆசிட் ஊற்றினார்களோ அதே இடத்தில் வைத்து மூவரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். மூவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் சுட்டிக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்டது குறித்து ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி மிகுந்த அதிர்ச்சி தெரிவி்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இந்த எண்கெளன்டர் நடந்துள்ளது.

இதில் ஸ்ரீனிவாச ராவ் ஸ்வப்னிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். ஆனால், கார்த்திக் என்ற மாணவனை காதலித்து வந்த ஸ்பனிகா, ராவின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதையடுத்து உன் மீது ஆசிட் வீசுவேன் என ஸ்வப்னிகாவிடம் ராவ் மிரட்டியுள்ளான். இது குறித்து ஸ்வப்னிகாவின் தந்தை தேவேந்தர் வாரங்கல் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராவும் அவனது நண்பர்களும் தேவேந்தரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் ஸ்ரீனிவாச ராவ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தான்.

இதையடுத்து தனது சகோதரன் சிவப்பிரசாத ராவ், தனது நண்பர்களான ஹரிகிருஷ்ணா, சஞ்சய் ஆகியோருடன் கூடிப் பேசி ஸ்வப்னிகாவின் முகத்தில் ஆசிட் வீச வாரங்கலில் உள்ள ஒரு கடையில் `சல்பியூரிக்' ஆசிட்டை வாங்கியுள்ளான்.

பின்னர் ராவ், சஞ்சய், ஹரி மூவரும் மாமனூர் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைக்கை திருடிக் கொண்டு ஸ்வப்னிகா படிக்கும் கல்லூரிக்கு வந்துள்ளனர்.

தனது தோழி பிரனீதாவுடன் இரு சக்கர வாகனத்தில் வெளியே வந்த ஸ்வப்னிகாவை சிறிது தூரத்தில் வழிமறித்து ஆசிட்டை ஊற்றிவிட்டுத் தப்பினர்.

இதில் பிரனீதா ஹெல்மட் அணிந்திருந்ததால் முகம் தப்பியது. ஆனால், உடல் வெந்தது. ஸ்வ்னிகாவின் முகமும் உடலும் வெந்து போனது. இருவரும் அலறியபடியே மயங்கி கீழே விழுந்துள்ளனர்.

அவர்களை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஸ்வப்னிகாவின் உடல் 60 சதவீத அளவுக்கு வெந்து போய் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்தால் அதிர்ந்து போன முதல்வர் ராஜசேகர ரெட்டி மாணவர்களை உடனடியாகப் பிடிக்க உத்தரவிட்டார். போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து சிவபிரசாத் ராவ் உள்பட 4 மாணவர்களையும் கைது செய்தனர்.

இந் நிலையில் தான் போலீசாரின் குண்டுக்கு 4 பேரும் காலியாகியுள்ளனர். சிவபிரசாத ராவ் ஆசிட் ஊற்றியதில் நேரடியாக ஈடுபடவில்லை. இதனால் அவனை போலீசார் சுடவில்லை என்று தெரிகிறது.

லேபிள்கள்: , , ,

12 டிசம்பர், 2008

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் ஆவேசப் பதிலடி


கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் ஆவேசப் பதிலடி

90 சிங்களச் சிப்பாய்கள் பலி; காயமடைந்த
180 பேருடன் இலங்கை ராணுவம் பின்வாங்கியது

பொன்சேகா ஒப்புதல் வாக்குமூலம்

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் சிங்களச்சிப்பாய்கள் 90 பேர் கொல்லப்பட்டனர். 180 பேர் காயமடைந்தனர். இதனால்ராணுவம் பின்வாங்கியது. இலங்கை ராணுவத்திடமிருந்து ஏராளமானஆயுதங்களையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றினர்.

விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்ற கடந்தமாதமாக சிங்கள ராணுவம் தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தத்தாக்குதலின்போது, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிலஇடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றினாலும் கிளிநொச்சியை இன்னும்நெருங்க முடியவில்லை. கிளிநொச்சிக்குள் ராணுவத்தை நுழைய விடாமல்விடுதலைப்புலிகள் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறார்கள். 2

நேற்று முன்தினம் கிளிநொச்சி அருகேயுள்ள ஒலுமடு, முல்லைத் தீவு, ஓட்டுப்புலம், புத்துமுறிப்பு அறிவியல் நகர் ஆகிய இடங்களில் சிங்களராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சண்டை உச்சக்கட்டத்தைஎட்டியது. கிளிநொச்சியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளபகுதிகளில் இந்தச் சண்டை நடந்தது.

ராணுவத்தினர்
90 பேர் சாவு!

இருதரப்பினருக்கும் 12 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த துப்பாக்கிச்சண்டையில் விடுதலைப்புலிகள், சிங்கள ராணுவம் மீது ஆவேச பதில்தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் சிங்களப் படையினருக்கு பலத்த சேதம்ஏற்பட்டது.

முதலில் பின்வாங்குவதுபோல் போக்கு காட்டிய விடுதலைப்புலிகள் பின்னர்தாங்கள் பாதுகாப்பு அரண் அமைத்திருந்த பகுதிகளில் இருந்து சிங்களச்சிப்பாய்கள் மீது பயங்கரத் தாக்குதலை தொடுத்தனர். இதனால் முன்னேறிச்சென்ற ராணுவ வீரர்கள் நிலைகுலைந்து விடுதலைப்புலிகளின் தாக்குதலில்சிக்கிக்கொண்டார்கள்.

இந்தத் தாக்குதலில் 60 சிங்களச் சிப்பாய்கள் பலியானார்கள். சிப்பாய்களின்பலரது உடல்கள் விடுதலைப்புலிகள் அமைத்திருந்த அகழிப் பகுதிகளில்ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மேலும், இந்த கடும் சண்டையில் 120 சிங்களச்சிப்பாய்கள் படுகாயமும் அடைந்தனர். பலியான சிப்பாய்களின் உடல்களைவிடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள்.

இதேபோல் அறிவியல் நகர் என்ற இடத்தில் சிங்கள ராணுவத்தின் மீதுவிடுதலைப்புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் 29 சிப்பாய்கள்கொல்லப்பட்டனர். இங்கு 60 க்கும் மேற்பட்ட சிங்களச் சிப்பாய்கள்படுகாயமடைந்தனர். இன்னொரு தாக்குதலில் சிங்களச் சிப்பாய் ஒருவர்கொல்லப்பட்டார். 180 ராணுவ வீரர்கள் மோசமாகக் காயமடைந்தனர்.

பின் வாங்கி ஓட்டம்

கடுமையான சேதத்திற்குப் பின் இலங்கை ராணுவம் சண்டையை நிறுத்தியது. உயிரிழந்தவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும் தூக்கிக்கொண்டு அங்கிருந்து வேகமாக பின்வாங்கிச் சென்றது.

சண்டை நடந்த இடங்களில் இருந்து .கே. ரக எந்திர துப்பாக்கிகள், பி.கே.ரகஎந்திர துப்பாக்கிகள், டி.56 துப்பாக்கிகள் மற்றும் ஏராளமானவெடிமருந்துகளையும் விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவத்திடமிருந்துகைப்பற்றினார்கள்.

ராணுவம் மறுப்பு

கிளிநொச்சி அருகே நடந்த சண்டையில் சிங்களச் சிப்பாய்கள் 90 பேர்கொல்லப்பட்டதாகவும், 180 பேர் படுகாயமடைந்ததாகவும் விடுதலைப்புலிகள்தங்களது இணையதளத்தில் அறிவித்துள்ளனர். இதேபோல் ராணுவம் பின்வாங்கி ஓடும் புகைப்படக்காட்சியையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

விமானங்கள் குண்டு வீச்சு

இதனிடையே கிளிநொச்சியின் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இலங்கைபோர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்தின. ராணுவம் முன்னேறிச் செல்லும் விதமாக விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதுஇந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்தது. இழப்புபற்றிபொன்சேகா ஒப்புதல்

விடுதலைப்புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. எனவே தான்படைத்தரப்பு அதிகம் இழப்புகளை சந்தித்து வருகின்றது.

மிதிவெடிகளில் சிக்கி 500 படையினர் கால்களை இழந்துள்ளனர். வன்னியில்ஒவ்வொரு அங்குல நிலமும் பொறிவெடிகளால் சூழப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளை வெல்வது என்பது இலகுவான நடவடிக்கை அல்ல என்றுசிறீலங்காவின் தரைப்படைத் தளபதி பொன்சேகா பிசினஸ் டுடே இதழுக்குஅளித்துள்ள பேட்டியில் கூறி, தோல்வி ஏற்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

லேபிள்கள்: , , ,

9 டிசம்பர், 2008

நயனதாரா போனால் போகட்டும், வேறு ஹீரோயினைத் தேடிக் கொள்கிறோம்


நயனதாரா போனால் போகட்டும், வேறு ஹீரோயினைத் தேடிக்கொள்கிறோம் என்று பையா படத் தயாரிப்பாளர் போஸ்தெரிவித்துள்ளார்.

லிங்குசாமி இயக்கும் இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாகநடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயனதாரா ஒப்பந்தம்செய்யப்பட்டிருந்தார்.

லிங்குசாமியின் அண்ணன் போஸ் தயாரிக்கும் படம் இது.

இப்படத்தில் நடிக்க ரூ 1கோடிக்கும் அதிகமாக நயனதாராவுக்கு சம்பளம்பேசப்பட்டது. இதுவரை எந்த நடிகைக்கும் இவ்வளவு அதிக சம்பளம் தராததால்இது தமிழ் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், சம்பளத்தை குறைக்கக் கூறியதால் லிங்குசாமி படத்திலிருந்துவிலகுவதாக நயனதாரா அறிவித்தார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தயாரிப்பாளர் போஸ் கூறியதாவது:

நயனதாராவுக்கு தருவதாக ஒப்புக்கொண்ட சம்பளத்தை, சமீபத்தில்குறைத்துக்கொள்ள சொன்னது உண்மைதான். அதில் எந்தத் தவறும் இருப்பதாகஎனக்குத் தெரியவில்லை.

சமீபகாலமாக பெரிய பட்ஜெட் படங்களின் வசூல் 50 சதவீதம் குறைந்திருக்கிறது. அதேபோல் வியாபாரமும் பாதியாக குறைந்திருக்கிறது. எனவே படங்களின்பட்ஜெட்டை குறைக்கும்படி தயாரிப்பாளர் சங்கமே கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் நயனதாராவிடம், இப்போதுள்ள சூழலுக்கு ஏற்ப சம்பளத்தைகுறையுங்கள் என்று கூறினோம். அவர் மறுத்துவிட்டார்.

அட்வான்ஸைத் திருப்பித் தரவேண்டும்!

மேலும் கால்ஷீட்டை வீணாக்கிவிட்டோம் என்றும் கூறி இருக்கிறார். எங்கள் படஹீரோ கார்த்தி மற்றொரு படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்புமுடிவடையவில்லை. அதனால் எங்கள் படத்துக்கு கார்த்தியால் வரஇயலவில்லை.

அவர் இல்லாமல் படப்பிடிப்பு தொடங்க முடியாது என்பதால்தான்நயனதாராவிடம் எங்களுக்கு வழங்கிய தேதியை வேறு படத்துக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றோம். அவருக்கு வேறு படம் எதுவும் கையில் இல்லை. இதில் எங்கள் தவறு எதுவுமில்லை. இதுதான் நடந்தது.

இந்நிலையில்தான் எங்கள் படத்திலிருந்து விலகுவதாக கூறியிருக்கிறார்நயனதாரா. பரவாயில்லை. அவர் தாராளமாக விலகிக் கொள்ளட்டும். ஆனால்அட்வான்ஸைத் திருப்பித் தந்துவிட வேண்டும்.

அவருக்கு பதிலாக மற்றொரு முன்னணி நடிகையை நடிக்க வைக்கபேச்சுவார்த்தை நடக்கிறது. இரண்டு நாளில் அது முடிவாகிவிடும். தமிழ் சினிமாஎன்பது நயனதாரா மட்டுமே அல்ல... என்றார்

லேபிள்கள்: , ,

Anjathey அஞ்சாதே | பூ | சுப்ரமணியபுரம் சென்னையில் தமிழக அரசு உதவியுடன் சர்வதேச திரைப்பட விழாசுப்பிரமணியபுரம், அஞ்சாதே, பூ

சென்னையில் தமிழக அரசு உதவியுடன் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 36 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் பங்கேற்கின்றன.

சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, பூ மற்றும் காஞ்சிபுரம் ஆகிய தமிழ்ப் படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன.

சென்னையில் உள்ள பிலிம் சேம்பர், உட்லண்ட்ஸ், சிம்பொனி ஆகிய திரயரங்குகளில் தினசரி 5 காட்சிகளாக இந்தப் படங்கள் காட்டப்படுகின்றன.

இதுகுறித்து சென்னை இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் துணைத் தலைவர் எஸ்வி சேகர் கூறியதாவது:

இந்த திரைப்பட விழா நடக்க தமிழக அரசு உதவி செய்துள்ளது. அதற்காக முதல்வர் கலைஞருக்கு நன்றி. டிசம்பர் 17-ம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கில் இந்த விழா தொடங்குகிறது.உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.

இதுவரை நடந்த திரைப்பட விழாக்களை சற்று சிரமத்துடன்தான் ஏற்பாடு செய்தோம். ஆனால் இந்த முறை அரசு உதவி கிடைத்ததால் சற்று நிம்மதியாக ஏற்பாடு செய்துள்ளோம். இனிவரும் ஆண்டுகளில் இதுபோன்ற சூழல் நிலவ முயற்சி செய்வோம்.

மேலும் அடுத்த ஆண்டு முதல் திரைப்பட விழாவில் பங்கேற்கும் படங்களுக்கு விருதுகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம் என்றார்.

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் தலைவர் கண்ணன், பொதுச் செயலாளர் தங்கராஜ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

விழாவில் இடம்பெறும் திரைப் படங்கள் மற்றும் மற்றும் திரையிடப்படும் நேரம் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும்

லேபிள்கள்: , , ,

8 டிசம்பர், 2008

ஷக்தி சிதம்பரம் மோசம்: ஸ்னிக்தா;அவரும்தான் மிக மோசமாக நடந்து கொண்டார். அசிங்கமாகப் பேசினார்

Sniktha

விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் தந்தால்தான் ஷூட்டிங்கில் பங்கேற்பேன் என ஸ்னிக்தா மிரட்டியதாக இயக்குனர் ஷக்தி சிதம்பரம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் ஸ்னிக்தாவோ, இயக்குநர் நடவடிக்கை மிக மோசம் என்று புகார் தெரிவித்துள்ளார்.

அஞ்சாதே படத்தில் கத்தாழ கண்ணால... பாடலுக்கு ஆடியவர் ஸ்னிக்தா.

லாரன்ஸ் ஜோடியாக 'ராஜாதி ராஜா' படத்தில் நடித்து வருகிறார். ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார். இந்நிலையில் விமானத்தில் பிசினஸ் கிளாஸ் தராததால் 3 மணி நேரம் ஏர்போர்ட்டில் அமர்ந்து கொண்டு, இயக்குனரை மிரட்டியதாக அப் படக்குழு மற்றும் இயக்குநர் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து 'ராஜாதி ராஜா' பட இயக்குனர் தரப்பில் பத்தரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இதுவரை ஒரு படம் கூட நாயகியாக நடிக்காதவர் ஸ்னிக்தா. ராஜாதி ராஜாதான அவருக்கு முதல் படம். இப்படத்தில் ஸ்னிக்தா தவிர மேலும் 5 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஆனாலும் ஸ்னிக்தா கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சம்பளமும் அதிகம் கொடுத்துள்ளோம்.

இருந்தும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆரம்பம் முதலே பிரச்னை செய்து வந்தார். இந்தப் படத்தில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இருக்கும் என தெரிந்துதான் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்போது கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்கிறார். இன்னொரு தமிழ்ப்படம் நந்தலாலா படத்திலும் அவர் நடித்து வருகிறார். அப்படத்துக்காக ஒரு ஓட்டலில் அவர் தங்குகிறார். என் படத்தில் நடிக்கவும் அதே ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்தேன். ஆனால் பைவ் ஸ்டார் ஓட்டல்தான் வேண்டும் என்கிறார்.

நேற்று முன்தினம் சென்னையில் நடந்த ராஜாதிராஜா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு மபும்பை செல்லவேண்டியிருந்தது ஸ்னிக்தா. ஏர்போர்ட்டுக்குச் சென்றவர் திடீரென இயக்குனர் ஷக்தி சிதம்பரத்துக்கு போன் செய்தார்.

வழக்கமாக எனக்கு பிசினஸ் கிளாசில்தானே டிக்கெட் எடுப்பீர்கள். ஏன் இம்முறை எடுக்கவில்லை, என்றார். இந்த முறை பிசினஸ் கிளாசில் டிக்கெட் கிடைக்கவில்லை. அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள், என்றேன். ஆனால் ஸ்னிக்தா ஒப்புக்கொள்ளவில்லை. பிசினஸ் கிளாஸ் டிக்கெட் தந்தால்தான் மும்பை செல்வேன் எனக்கூறி, ஏர்போர்ட்டில் அமர்ந்து கொண்டார். மூன்று மணிநேரம் அங்கிருந்து நகரவில்லை.

பலமுறை போன் செய்து டார்ச்சர் செய்தார். பிசினஸ் கிளாஸ் டிக்கெட் தராவிட்டால் இனி ஷூட்டிங்குக்கு வரமாட்டேன், என மிரட்டினார். இதுகுறித்து நடிகர் சங்கத்தில் புகார் செய்ய உள்ளோம், என்று கூறியுள்ளார்

லேபிள்கள்: , , , , ,

தலிபான்கள் அதிரடி தாக்குதல்-150 நேட்டோ வாகனங்கள் எரிப்பு-3 பேர் பலி

வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படவிருந்த நேட்டோ படையினரின் 150 வாகனங்களை தலிபான் தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல் நடத்தி தீவைத்து எரித்தனர். 3 பேர் கொல்லப்பட்டனர்.

அல் பைசல் என்ற இடத்தில் உள்ள ஒரு டிப்போவில் இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருக்காக இவை அனுப்பப்படவிருந்தன.

இந்த நிலையில் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த 100க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். ராக்கெட்களையும், கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி அங்கிருந்த 150 வாகனங்களை தாக்கி எரித்தனர்.

டேங்கர்கள், லாரிகள் உள்ளிட்டவற்றையும் அவர்கள் தீவைத்துக் கொளுத்தினர்.
மொத்தம் பத்து ராக்கெட்களை வீசியும், பெட்ரோல், மண்ணெண்ணையைக் கொண்டும் இந்த தாக்குதலி்ல அவர்கள் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் டிப்போ வாட்ச்மேன் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர்.

நேட்டோ படையினர் மீது தலிபான்கள் நடத்திய மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

லேபிள்கள்: , , , ,

தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள்;இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா;கண்டனத்துக்குரியது என்று முதல்வர் கருணாநிதி


தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் எனஇலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகாகூறியிருப்பது உண்மையாக இருந்தால் அது கடும்கண்டனத்துக்குரியது என்று முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.

நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: இலங்கை ராணுவ தளபதி தமிழக அரசின் தலைவர்களை கோமாளிகள்என்று கூறியிருக்கிறாரே?

கருணாநிதி: அப்படி இலங்கை தளபதி சொல்லி இருப்பது உண்மையானால் அதுகண்டிக்கத்தக்கது.
இங்குள்ள தமிழக தலைவர்கள் தங்களுக்கு உள்ள பிரச்சனைகள் அடிப்படையில்ஒருவரை பற்றி மற்றொருவர் விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் இன்னொருநாட்டவர் தமிழக தலைவர்களை இவ்வாறு விமர்சிப்பது எந்த காலத்திலும் ஏற்கமுடியாது. அப்படி விமர்சித்திருந்தால் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கேள்வி: இதை நீங்கள் பிரதமர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றுராமதாஸ் கூறியிருக்கிறாரே?

கருணாநிதி: இலங்கை ராணுவ தளபதி கூறியது பத்திரிகையில் வந்துள்ளது. ராமதாஸ் கூறிய கருத்தும் இந்நேரம் பிரதமருக்குத் தெரிந்திருக்கும்.

கேள்வி: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த பிரணாப் முகர்ஜிஎப்போது செல்கிறார்?

கருணாநிதி: இன்னும் தேதி குறிப்பிடவில்லை.

கேள்வி: போர் நிறுத்தம் செய்ய இந்தியா வற்புறுத்தாது என இலங்கை அமைச்சர்கூறியிருக்கிறாரே?

கருணாநிதி: சர்வ கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இலங்கைக்கு சென்றுநமது கோரிக்கை வலியுறுத்தவும், போர் நிறுத்தம் பற்றிய கோரிக்கையைவலியுறுத்தவும் இந்த அடிப்படையில் அவர்களை நடந்து கொள்ள செய்யவும்இலங்கைக்கு செல்ல வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைகேட்டுக் கொண்டோம். அதை பிரதமரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

கேள்வி: கடந்த முறை வெள்ள நிவாரணத்துக்கு நாம் கேட்ட தொகையில் 10ல்ஒரு பங்குகூட மத்திய அரசு ஒதுக்கவில்லையே?

கருணாநிதி: சென்ற முறை வெள்ள நிவாரணத்துக்கு தமிழக அரசு கேட்டதைமத்திய அரசு வழங்கவில்லை. இந்தமுறை அவ்வாறு இல்லாமல் நாங்கள்கேட்கும் நிதியை வழங்க வேண்டும் என பிரதமரிடமும், சோனியாகாந்தியிடமும் கூறியிருக்கிறோம். அதனால் நாங்கள் கோரிய அளவு நிதி வழங்குவார்கள் என நம்புகிறேன்.

கேள்வி: மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்கும்போது தமிழ்நாட்டுக்குவாய்ப்பு கிடைக்குமா?

கருணாநிதி: அதுபற்றி எனக்கு தெரியாது. வாய்ப்பு இருந்தால் மகிழ்ச்சி தான்.

கேள்வி: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போதாது என்று கூறுகிறார்களே?

கருணாநிதி: எனக்குப் போதும்.

கேள்வி: அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு என்ன ஆகும்?

கருணாநிதி:- அது விரைவில் சட்டமாகும். அருந்ததியர் இட ஒதுக்கீடு குறித்துஇன்னொரு துணை கமிட்டி அமைத்து இருந்தோம். அந்த கமிட்டி கூடி இன்றுஅறிக்கை கொடுத்துள்ளது. எனவே மிக விரைவில் அருந்ததியருக்கு இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் கொண்டு வரப்படும்.

கேள்வி: தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை இருக்கிறதே?

கருணாநிதி: இப்போது இல்லை.

கேள்வி: மத்திய அரசிடம் இருந்து ஒதுக்கப்படும் மின்சாரம்கிடைக்கவில்லையே?

கருணாநிதி:- 2000 மெகாவாட் மின்சாரம் வரவேண்டும். அது வரவில்லை. அதுபற்றி அமைச்சரிடம் பேசப்பட்டுள்ளது. டிசம்பரில் 1000 மெகாவாட்மின்சாரமும், ஜனவரி மாதம் 1000 மெகாவாட்டும் தருவதாக கூறி இருக்கிறார்கள்என்றார்.

லேபிள்கள்: , , , ,

அய்ந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரசு வெற்றி ராஜஸ்தானைக் கோட்டைவிட்டது பாஜக


அய்ந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரசு வெற்றி
ராஜஸ்தானைக் கோட்டைவிட்டது பாஜக

மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் மட்டுமே பாஜக ஆட்சி
இடதுசாரிக் கட்சிகளின் முயற்சிக்கு மூக்கறுப்பு

டில்லி, ராஜஸ்தான், மிசோராம், சட்டிஸ்கர், மத்தியப்பிரதேசம்ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத்திற்கான தேர்தல் நடந்துஇன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் டில்லி, ராஜஸ்தான், மிசோராம் ஆகிய மூன்று மாநிலங்களில்காங்கிரசுக் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த இரண்டு முறையாக வெற்றி பெற்று ஆட்சியில்இருந்த பாஜகட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது. சட்டீஸ்கர்மாநிலத்தில் காங்கிரசும் பாஜகட்சியும் சமபலத்தில் இடங்களைப் பெற்றுள்ளன. இந்த மாநிலத்தில் பாஜகட்சி தற்போது ஆளுங்கட்சியாக உள்ள நிலை யில்மீண்டும் ஆட்சி அமைப்பது சந்தேகமே! மத்தியப் பிரதேச மாநிலத்தில் மட்டுமேமதவெறிக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் வருமாறு:

டில்லி: மொத்த இடங்கள் 69
காங்கிரசு 39
பா... 23
பகுஜன் சமாஜ் கட்சி 04
பிற கட்சிகள் 03

ராஜஸ்தான்: மொத்த இடங்கள் 200
காங்கிரசு 96
பா... 77
பகுஜன் சமாஜ் கட்சி 06
பிற கட்சிகள் 21

மிசோராம்: மொத்த இடங்கள் 40
காங்கிரசு 21
பா... 00
மணிப்பூர் தேசியக் கட்சி 05

சட்டீஸ்கர்: மொத்த இடங்கள் 90
காங்கிரசு 37
பா... 47
பகுஜன் சமாஜ் கட்சி 03
பிற கட்சிகள் 03

மத்தியப் பிரதேசம்: மொத்த இடங்கள் 230
காங்கிரசு 71
பா... 128
பகுஜன் சமாஜ் கட்சி 12
பிற கட்சிகள் 18

இது சிறு பொதுத் தேர்தல் என்று வருணிக்கத்தக்க தேர்த லாகக் கருதப்பட்டதேர்தலாகும். மும்பையில் தாக்குதல் நடை பெற்றபின் மாநிலத் தேர்தல்கள்நான்கு மாநிலங்களில் நடை பெற்றது. இதைவைத்து பா..கட்சி தன் வழக்கமானமதவெறி பிரச்சாரத்தைச் செய்தது. ஆனாலும் மதச்சார்பின்மையும் சமூக நீதியும்வெற்றி பெற்றுள்ளன என்பதோடு காங்கிரசை வீழ்த்திட இடதுசாரிக் கட்சிகளின்முயற்சியும் தோற்றுப் போயுள்ளது குறிப்பிடத்தக்கன.

அய்ந்து மாநிலத் தேர்தல் முடிவுக்குப் பின் எல்லோரும் பாஜகட்சியின் பக்கம்வருவார்கள் என்று கனவு கண்ட பாஜகட் சிக்கு இறுதி அடியாக முடிவுகள்அமைந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

மூன்றாவது அணி என்கிற மனக் கோட்டையைக் கட்டலாம் என்று விசித்திரக்கூட்டணியைத் தமிழகத்தில் அமைத்துள்ள வர்களும் பகல் கனவு கலைந்துபோயுள்ளனர் என்றே கூறலாம்.

லேபிள்கள்: , ,

7 டிசம்பர், 2008

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் ;பாகிஸ்தான்


மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் எனபாகிஸ்தான் அதிகாரிகள் தன்னிடம் ஒப்புக்கொண்டதாக அங்கு உயர் மட்ட ஆலோசனைகள்நடத்திவிட்டு இந்தியா வந்த அமெரிக்கமுப்படைகளின் கூட்டுத் தளபதியான அட்மிரல்மைக்கல் முல்லன் கூறியுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி மற்றும்பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனிடம் முல்லன் இந்தத்தகவலைத் தெரிவித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன.

பாகிஸ்தானில் அவர் அதிபர் சர்தாரி, ராணுவத் தளபதி, ஐஎஸ்ஐ தலைவர்உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போதுமும்பையைத் தாக்கிய தீவிரவாதிகள் தங்கள் நாட்டினர் அல்ல என அவர்கூறினர்.

ஆனால், அவர்கள் பாகிஸ்தானியர்கள் தான் என்பதற்கான பல ஆதாரங்களைமுல்லன் காட்டியதையடுத்து அவர்கள் தங்கள் நாட்டரவே என்றும் அவர்கள்அனைவரும் லஷ்கர் தொய்பாவினரே என்றும் அந் நாட்டு ராணுவ, ஐஎஸ்ஐஅதிகாரிகள் ஒப்புக் கொண்டுவிட்டனர்.இந்தத் தகவலை டெல்லி வந்த அவர் ஆண்டனி, நாராயணனிடம் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கடற்படை தடுக்கவில்லை-கஸாவ்:

இதற்கிடையே போலீசாரிடம் சிக்கிய அஜ்மல் அமீர் கஸாவிடமிருந்து மேலும்ஒரு விவரமும் கிடைத்துள்ளது. அவன் அளித்த வாக்குமூலத்தில்,

நாங்கள் 10 பேரும் முமபையில் தாக்குதல் நடத்த கராச்சியிலிருந்து அல்ஹூசைனி என்ற கப்பலில் கடந்த 20ம் தேதி புறப்பட்டோம். இந்தக் கப்பலைபாகிஸ்தான் கடற்படை எந்த இடத்திலும் நிறுத்தவில்லை. நீண்ட பயணத்துக்குப்பின் இந்தியக் கடல் பகுதி வந்தவிட்டதாகக் கூறி எங்களை அதிலிருந்து குபேர்படகுக்கு மாற்றினர் என்று கூறியுள்ளான்

லேபிள்கள்: , , , , ,

6 டிசம்பர், 2008

ஓடோடி வந்த த்ரிஷா, கொடியை தூக்கி கோஷம் போட்டபோது, அதில் நிஜமான அக்கறை தெரிந்தது!

தீவிரவாதத்திற்கு எதிரான பேரணி ஒன்றை கொடியசைத்து துவங்கி வைக்க Srikanth - Trishaசம்மதித்திருந்தார் த்ரிஷா. சென்னையில் நடைபெற்ற இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து அவர் வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம்.

தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க பாங்காக் போயிருந்தார் த்ரிஷா. இவருக்கு ஜோடி நாகார்ஜுன். படப்பிடிப்பு முடிந்து விமான நிலையத்திற்கு வந்து பார்த்தால், பெரிய திண்டுக்கல் பூட்டு தொங்கியதாம்! அச்சச்சோ என்று பதறியவரிடம், அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் விபரத்தை கூறினார்களாம். பாங்காக் நாட்டில் அரசியல் குழப்பம். அந்நாட்டு தலைமையை எதிர்த்து விமான நிலையத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்க்கட்சிகள் மிரட்ட, திறந்திருந்தால்தானே மிரட்டுவார்கள் என்று முடிவு செய்த போலீஸ், விமான நிலையத்தையே மூடிவிட்டது.

அடித்து பிடித்துக் கொண்டு புக்கட் தீவுக்கு வந்து சேர்ந்த த்ரிஷா, அங்கிருந்து கோலாலம்பூரில் ஃபிளைட் பிடித்து சென்னையில் இறங்கினாராம். இப்படியெல்லாம் ஓடோடி வந்த த்ரிஷா, கொடியை தூக்கி கோஷம் போட்டபோது, அதில் நிஜமான அக்கறை தெரிந்தது!

லேபிள்கள்: , ,

வைரமுத்துவின் பாடல்களுக்கு இசையமைக்க தயார்” என்று கூறியிருக்கிறார் யுவன்.

யார் யாரோ ஒட்ட பார்த்தார்கள். ஆனாலும், திசைகள் போலவே திருப்பிக் கொண்டு yuvanநிற்கிறார்கள் வைரமுத்துவும், இளையராஜாவும். இது வாரிசுகளின் காலம். அப்பாவின் கோபமும், பிடிவாதமும் பிள்ளைகளை என்ன செய்யும்? “இதுவரைக்கும் யாருமே ட்ரை பண்ணலே, வேணும்னா யாராவது டைரக்டர்கள் முயற்சிக்கட்டும். வைரமுத்துவின் பாடல்களுக்கு இசையமைக்க தயார்” என்று கூறியிருக்கிறார் யுவன். இந்த நல்ல காரியத்தை எந்த புண்ணியவான் ஆரம்பித்து வைக்கப் போகிறாரோ? அதிருக்கட்டும்... ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து விலகிக் கொண்ட யுவனிடம், அப்படத்திற்காக போட்டுக் கொடுத்த இரண்டு பாடல்களையும் திருப்பி கொடுத்துவிட்டாராம் செல்வராகவன்.

ட்யூனை பயன்படுத்தாமல் விட்டதோடு, பாடல் வரிகளையும், ட்யூனையும் நா.முத்துக்குமாருக்கும், யுவனுக்கும் தபால் மூலம் திருப்பி அனுப்பிவிட்டாராம். மாறாக ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் வைரமுத்துவை பாடல் எழுத வைத்திருக்கிறார்.

முதல் படத்திலிருந்து நேற்றுவரை இளம் கவிஞர்களிடம் மட்டுமே பாடல் வாங்கி பழகிய செல்வா, முதன் முதலாக ஐம்பதை தொட்டவரிடம் பாடல் வாங்குவது ஆச்சர்யம்தான். வயசு போனால் என்ன? வரிகள் இளமையாக இருக்கிறதே என்று நினைத்திருப்பார் போல!

லேபிள்கள்: ,

பீதி அடைந்த ஒரு பெண் பயணி, லக்கேஜ்களை அனுப்பும் கன்வேயர் பெல்ட் மீது ஏறி தப்பிய தகவல்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நடந்ததாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டின்போது, பீதி அடைந்த ஒரு பெண் பயணி, லக்கேஜ்களை அனுப்பும் கன்வேயர் பெல்ட் மீது ஏறி தப்பிய தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் நேற்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் வெளியானது.

இந்த சம்பவத்தின்போது விமான நிலையத்தில் பயணிகள் பீதியடைந்து ஓடியுள்ளனர். அப்போது ஒரு பெண் சூட்கேஸ் உள்ளிட்ட லக்கேஜ்களை அனுப்பும் கன்வேயர் பெல்ட் மீது ஏறி தப்பியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்தப் பெண் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கன்வேயர் பெல்ட் மீது ஏறி விட்டார். இதைப் பார்த்த நாங்கள் அவர் லக்கேஜ் சேகரிக்கும் இடம் வரை வருவதற்கு அனுமதித்தோம். அதன் பின்னர் மின் இணைப்பைத் துண்டித்தோம். அந்த இடத்தில் அவரை பாதுகாவலர்கள் பத்திரமாக இறக்கி விட்டனர்.கன்வேயரை பாதியிலேயே நிறுத்தியிருந்தால், அவரை மீட்பது சிரமமாயிருக்கும். எனவேதான் லக்கேஜ் சேகரிப்பு இடம் வரை வர அனுமதித்தோம்.

கன்வேயர் பெல்ட்டில் ஏறி வந்ததால் அந்தப் பெண்ணுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை

லேபிள்கள்: , , ,

டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் குவாலிஸ் காரில் வந்த மர்மநபர்கள் சரமாரியாக சுட்டதாக பயணிகள்கூறியதால் பெரும் பீதி ஏற்பட்டது. இதையடுத்துஅங்கு கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டனர்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்இன்று அதிகாலை 1.10 மணியளவில் மத்தியதொழிலக பாதுகாப்புப் படையினருக்கு ஒருபோன் வந்தது. அதில் பேசிய பயணிகள், விமான நிலையத்திற்குள் ஒருகுவாலிஸ் கார் வந்தது. அதில் இருந்த நபர்கள், காரிலிருந்தபடியே சரமாரியாகதுப்பாக்கியால் சுட்டபடி சென்றனர் என்று கூறினர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கமாண்டோ படையினர்வரவழைக்கப்பட்டு விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.

விமான நிலையத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. விமானநிலையத்திற்கு வருகிற அனைத்து வாகனங்களும் தீவிரமாகசோதனையிடப்படுகின்றன.இந்த சம்பவம் குறித்து டெல்லி விமான நிலைய மத்திய தொழிலக பாதுகாப்புப்படை டிஐஜியான உதயன் பானர்ஜி கூறுகையில், சில பயணிகளிடமிருந்துதுப்பாக்கிச் சத்தம் கேட்டதாக எங்களுக்குப் போன் வந்தது. இது துப்பாக்கிச்சூடுதான் என்பதற்கான ஆதாரம் இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை. தோட்டாக்கள் எதையும் கைப்பற்றவில்லை.

அந்த சத்தத்திற்குப் பின்னர் மத்திய தொழிலகப் படையினர், டெல்லி போலீஸார்உடனடி நடவடிக்கையில் இறங்கினர். விமான நிலையத்தில் தீவிர சோதனைநடத்தப்பட்டது.

தற்போது நிலைமை இயல்பாகியுள்ளது. விமானப் போக்குவரத்தில்பாதிப்பில்லை. பயணிகள் நடமாட்டமும் வழக்கம் போல உள்ளது என்றார்.

டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் கூறுகையில், நான்குஅல்லது ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதில் யாரும் காயமடையவில்லை.

உண்மையிலேயே இப்படி நடந்ததா அல்லது பயணிகள் பீதியில் கூறினார்களாஎன்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

நேற்றுதான், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை விமானத்தைக் கொண்டுதாக்கி அழித்தது போல இந்தியாவிலும் செய்ய தீவிரவாதிகள்திட்டமிட்டிருப்பதாக விமானப்படைத் தலைமைத் தளபதி கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து டெல்லி, சென்னை, பெங்களூர் விமான நிலையங்களில் மிக பலத்தபாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்ட சத்தம்கேட்டதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

லேபிள்கள்: , ,