முக்கிய பிர முகர்களை வரவேற்க மாண வர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு மேயர் உத்தரவிட்டுள்ளார்.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பாம்!
கர்நாடக பா.ஜ. ஆர்ப்பாட்டம்

- ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக எல்லையில், கர்நாடக பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள், தமிழக எல்லைப் பகுதிக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு, ஜப்பான் நாட்டு உதவியுடன் ரூ.1,334 கோடியில் திட்டம் வகுத்துள்ளது.
இதற்கு கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும், ஒகேனக்கல் பகுதியில் மீண்டும் எல்லை மறுஅளவீடு செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், கர்நாடக பாரதிய ஜனதா கட்சி சார்பில் 1 மணியளவில் 51 வாகனங்களில் கர்நாடக மாநிலம் மாறுகொட்டாய் என்னுமிடத்தில் கட்சியினர் திரண்டனர்.
பின்னர், முன்னாள் அமைச்சர் பெங்கிமாதேவப்பா, சாம்ராஜ் நகர் மாவட்ட பா.ஜ தலைவர் நிரஞ்சன் குமார், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக எல்லையான ஒகேனக்கல்லில் 3 மாவட்டத்தை சேர்ந்த 252 போலீசார், தர்மபுரி எஸ்.பி நஜ்மல்கோடா தலைமையில் குவிக்கப்பட்டிருந்தனர்.
மாறுகொட்டாயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கட்சியினர், திடீரென தமிழக எல்லைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை கர்நாடக போலீசார் தடுத்தனர். அப்போது, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பெங்கிமாதேப்பா பேசுகையில், தமிழக - கர்நாடக எல்லையில் மத்திய அரசு மீண்டும் சர்வே செய்ய வேண்டும். அதன்பிறகு தான் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எங்களது கோரிக்கைமீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றார். முக்கிய பிரமுகர்களை வரவேற்க மாணவர்களை பயன்படுத்தக்கூடாது


சென்னை மாநராட்சிப் பள்ளிகளுக்கு மேயர் உத்தரவு

முக்கிய பிர முகர்களை வரவேற்க மாண வர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு மேயர் உத்தரவிட்டுள்ளார்.
மன அழுத்தம், மன இறுக் கத்தில் இருந்து மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் விடு படும் வகையில் பயிற்சி வகுப்பு களை மேயர் சுப்பிரமணியன் கிண்டி, மடுவங்கரை மாநக ராட்சி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
சென்னைமாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு, ஆசிரியர்களுக்கு இன் றைய காலகட்டத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கு வதற்காக உளவியல் துறை ஆலோசகர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே முன் னோடித் திட்டமாக சென்னை மாநகராட்சி மூலம் 40-க்கும் மேற்பட்ட பல்வேறு திட் டங்கள் செயல்படுத்தப்படு கின்றன. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊனமுற்ற மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு பயிற்சிகள் பெற இல வசப் பேருந்து அட்டைகள் வழங்க உள்ளார்.
விழாக்கள் மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் மேயர் உள்பட மன்ற உறுப்பி னர்களை வரவேற்பதற்காக மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர்களைப் பயன்படுத் துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மனிரீதியான பாதிப்பு ஏற் படக்கூடாது என்ற நோக்கத் தில் இந்த அறிவுரை வழங் கப்படுகிறது.
- இவ்வாறு மேயர் சுப்பிர மணியம் பேசினார்.


காரணம்

அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து மருத்துவமனை களில் கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் களின் எண்ணிக்கை 5 லட்ச மாம். காரணம் - இந்தியாவை விட அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு பத்து மடங்கு செலவு அதிக மாம்.
பணம் குறைவு என்றாலும் மருத்துவத் துறையில் இந்தியா முன்னேறியுள்ளது மிகவும் முக்கிய காரணம்தான்.



கடலூர் மாவட்டம் பெரியகங்கனாங்குப்பம் கிராமத்தில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணிபுரிபவர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யும் தானியங்கி இயந்திரத்தை திறந்து வைத்தார். மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தினு ஆகியோர் உடன் உள்ளனர் (22.11.2008)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...!

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்