ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

15 நவம்பர், 2008

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படவேண்டும்

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்:
ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படவேண்டும்

சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

சென்னை சட் டக் கல்லூரி மாணவர்களி டையே நடைபெற்ற மோதல், வன்முறை தொடர்பான செய்தி களை ஊடகங்கள் பொறுப்பு டன் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன் றம் அறிவுரை வழங்கியுள்ளது.

சட்டக் கல்லூரி மாணவர் களிடையே ஏற்பட்ட மோத லைத் தடுக்கத் தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவர் பாலு சென்னை உயர்நீதிமன்றத் தில் பொதுநல வழக்கு ஒன்றை நேற்று தொடர்ந்தார்.

மாணவர்களிடையே நடந்த மோதலை காவல்துறை யினர் தடுக்காததாலும், அம் மோதல் தொடர்பாக ஊடகங் களில் பரபரப்பாகச் செய்தி ஒளிபரப்பப்படுவதாலும் தமிழ கத்தில் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, பணியைச் செய்யாத காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்களிடையே நடந்த மோதலை மீண்டும், மீண்டும் தொலைக்காட்சிகளில் ஒளிரப் பத் தடை விதிக்கவேண்டும் என்று தமது மனுவில் பாலு குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.கே. கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகி யோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதா ரர் சார்பில் வழக்குரைஞர் பாலுவும், ஞானசேகரனும் வாதிட்டனர். அரசு தரப்பில் நேர் நின்ற வழக்குரைஞர் இராசா கலிபுல்லா, இந்நிகழ் வுத் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்கினார்.

அதைக் கேட்ட நீதிபதிகள், மாணவர்களிடையே நடந்த மோதல் தொடர்பாகத் தமிழக அரசு என்னென்ன நடவடிக் கைகள் எடுத்திருக்கிறது என் பதை வரும் 17 ஆம் தேதிக்குள் பதில் மனுவாகத் தாக்கல் செய்யவேண்டும் என்று ஆணை யிட்டனர்.

அதேநேரத்தில், இந்த வன் முறை குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிட தடை விதிக்க முடியாது. ஆனால், ஊடகங்கள் இந்த விசயத்தில் கட்டுப்பாட்டுடனும், பொறுப் புடனும் நடந்துகொள்ள வேண்டும். பொதுமக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும், சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையிலும் செய்தி களை ஒளிபரப்பவேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணை யிட்டனர். இவ்வழக்கின் விசா ரணை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு