வலிப்பு வரும்போது சாவிக் கொத்து தருவது தவறான நம்பிக்கை - மருத்துவர்கள் கருத்து

வலிப்பு வரும்போது சாவிக் கொத்து தருவது
தவறான நம்பிக்கை - மருத்துவர்கள் கருத்து

வலிப்பு வரும்போது சாவிக் கொத்து அல்லது இரும்புப் பொருள்களைக் கொடுப்பது தவறான நம்பிக்கை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்திய வலிப்பு நோய் சங்கம் சார்பில் தேசிய வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடைப்பிடிக்கப் பட்டது. இதை யொட்டி வலிப்பு நோய் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச் சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மருத்துவக் கல்வி இயக்குநர் தனபால், பேராசிரியர்கள் சீனிவாசன், ஜோசப் நவசீலன், செல்வம், பானு உள்பட பலர் கலந்து கொண்டனர். நோயாளிகளின் கேள்விகளுக்கு மருத்துவர்கள் அளித்த பதில்: வலிப்பு நோய்க்கு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டும். சாவிக் கொத்து கொடுப்பதால் வலிப்பு நிற்காது. இது தவறான நம்பிக்கை. வலிப்பு நோயாளிகளுக்கு தினமும் 8 மணி நேரத் தூக்கம் வேண்டும். மாத்திரைகள் தவறாமல் சாப்பிட வேண்டும். முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் வலிப்பு நோய் குணமடையும். -

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை