ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

26 நவம்பர், 2008

அகதி முகாம்கள்பற்றி தேவையற்ற பீதியைப் பரப்புதல் இந்நேரத்தில் தேவைதானா?


இன்று காலை வந்த "ஜனசக்தி" நாளேட்டில் நீலகிரிமாவட்ட கூடலூரில் ஈழத் தமிழர் ஒருவரைப்பற்றிஅவருக்கு நீலகிரி மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் கையொப்பமிட்டு, அவர் ஒருகடிதத்தை அனுப்பியுள்ளார். அவருக்கு ஏற்கனவேவரை தங்க அனுமதிக்கப்பட்டது. மீண்டும்இங்கே தங்க 10.3.2008 வரை கால அவகாசம்நீட்டிக்கப்பட்டது. மேலும் நீங்கள் இங்கே தங்கியிருப்பதுவிரும்பத்தக்கது அல்ல என்பதால், உடனே ஒருவாரத்திற்குள் நீங்கள் வெளியேற வேண்டும்; இல்லையானால், உங்களை கட்டாயமாகநாட்டைவிட்டு அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூடலூர்கொத்திர வாயல் எண் 5/476 என்பதில் தங்கியுள்ள வசந்தன் என்ப வருக்குதனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட கடிதத்தை ஜனசக்தி வெளியிட்டுள்ளது. 14.2.2008

ஒரு வாரத்திற்குள் இந்தியாவைவிட்டு வெளியேறும்படி

அகதிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் ஜனசக்தி கொட்டைஎழுத்துகளில் தலைப்பிட்டு கூறுகிறது. குறிப்பிட்ட நபர் இலங்கையில் உள்ள - அண்மையில் விடுதலைப்புலிகளிலிருந்து பிரிந்த ஒரு பிரிவினைச் சார்ந்தவர்என்ற தகவல் அரசுக்குக் கிட்டிய நிலையிலும், அவர்மீது பல கிரிமினல்நடவடிக்கைகள்பற்றிய தகவல்கள் இருப்பதாக சொல்லப்படுவதாலும், குறிப்பிட்ட நபரை வெளியேறச் சொல்லி ஆணைக் கடிதம் மாவட்ட காவல்துறைஅதிகாரியால் அனுப்பப் பட்டது. அவர் நீதிமன்றம் சென்று வாதாடியபோது, அவருக்கு கூடுதலான கால அவகாசம் தர காவல்துறையினருக்குஉயர்நீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில், 10.2.2008-லிருந்து மேலும் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. மேலும் (10.3.2008) நீட்டிக்கப்பட்டது. 8 மாதங்கள்கூடுதலாக, தங்கியிருப்பதால் குறிப்பிட்ட அந்த நபர்மீது மட்டும் இப்படி ஒரு கடிதஆணை காவல்துறை கண்காணிப்பாளரால் அனுப்பப்பட்டதை, நமது முதல்வர்கலைஞர் அவர்கள் முழு விவரங்களையும், இன்று காலை 5 மணிக்கு ஜனசக்திஏட்டைப் படித்த உடனே, அவரே நீலகிரி மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டுபேசியபோது தான் மேற்கண்ட தகவல்கள் அவரிடம் தெரிவிக்கப்பட்டன.

இன்று காலை 6.30 மணிக்கு, நான் ஏடுகளைப் படித்தவுடன், முதல்வர், அவர்களிடம் தொலைப்பேசியில் பேசியபோது அவர்களே, அகதிகளைவெளியேறச் சொல்லி, மாநில அரசுக்கு எந்தத் தாக்கீதையும் தரவில்லை.

காலை 5 மணிக்கே தொடர்புகொண்டு முழு விவரங்களை அறிந்தேன் என்றுஎன்னிடம் முதலமைச்சர் கூறினார்கள்.

அகதி முகாம்கள்பற்றி தேவையற்ற பீதியைப் பரப்புதல் இந்நேரத்தில்தேவைதானா?

அகதிகள் முகாம்களுக்குச் சென்று அமைச்சர் பெருமக்கள் ஆறுதல் கூறியநிலையில், நேற்று ஒரு மறுப்புச் செய்தி தமிழக அரசின் சார்பில் வந்த பிறகு, இப்படி ஒரு குறிப்பிட்ட நபர்மீது எடுத்த நடவடிக்கையைக் காட்டி, ஏதோ எல்லாஅகதிகளையும் - ஈழத் தமிழர்களையும் வெளியேற்ற முயற்சிப்பதுபோலஅகதிகளுக்கு என்று வெளியிடுவது பத்திரிகா தர்மமா? நியாயமா? காலை 5 மணிக்கே இதுபற்றி செய்தியைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்த முதல்வரின்செயல்திறன் வியக்கத்தக்கது அல்லவா?

நமது கட்சிகள் அரசியல் நடத்த அப்பாவி இலங்கை அகதிகள்தான்கிடைத்தார்களா?

கலைஞர் ஆட்சிமீது சேற்றை வாரி இறைத்துத் தூற்றிட இவர்கள்தானாகிடைத்தார்கள்? அந்தோ!

லேபிள்கள்: , , , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு