ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

26 நவம்பர், 2008

தனது 'திரு. போடா திருமதி. போடி' பட டைட்டிலை 'போடா போடி' என்று மாற்றியிருக்கிறார் சிலம்பரசன்


கிளாஸ்மேட்ஸ்', 'மீசா மாதவன்' போன்றமாபெரும் ஹிட்டுகளைக் கொடுத்தபிரபல மலையாள இயக்குனர் லால்ஜோஸ் 'மழை வரப் போகுது' படம் மூலம்தமிழில் என்ட்ரி ஆகிறார். ஆனந்தசாமிமற்றும் ரீமா நடிக்க, வித்யாசாகர்இசையமைக்கிறார். ஜேம்ஸ் ஆல்பர்ட்கதைக்கு நெல்லை ஜெயந்தாவசனமெழுதுகிறார். கிராமப்புறங்களில்நிலவும் தண்ணீர் பிரச்சினையை மையக்கருத்தாக வைத்து படம் உருவாகிறதுஎன லால் ஜோஸ் கூறுகிறார். கூல் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

‘தோரணை’ ஜெயிக்குமா?

விஷாலுடன், ஸ்ரேயா ஜோடி சேர அய்யப்பன் படம் இயக்குவதாக இருந்ததுஅறிந்ததே. அப்படத்திற்கு 'தோரணை' எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. 'சத்யம்' தோல்விக்குப் பின் தான் பாடம் கற்றுள்ளதாகத் தெரிவிக்கும் விஷால் நல்லகதைக் கருவைத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறுகிறார். பிரகாஷ்ராஜ் வில்லனாகநடிக்கிறார். விஷாலின் சகோதரர் படத்தைத் தயாரிக்கிறார்.

பாடல்கள் வெளியீடு

கவிதாலயா பேனரில் பேரரசு இயக்க, அர்ஜூன், தான்யா, கருணாஸ் மற்றும் பலர்நடிக்கும் 'திருவண்ணாமலை' படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது. ஸ்ரீகாந்த்தேவாவின் இசையில் ஆறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஷக்தி நடிக்கும்மகேஷ், சரண்யா மற்றும் பலர்' படத்தின் இசையும் வெளியாகி இருக்கிறது. இளமையான படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம்கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எட்டு பாடல்களைத் தந்திருக்கிறார்வித்யாசாகர்.

' ‘மரியாதையான’ படம்

தனது 'திரு. போடா திருமதி. போடி' பட டைட்டிலை 'போடா போடி' என்றுமாற்றியிருக்கிறார் சிலம்பரசன். சிம்புவுடன் சரத்குமார் மகளான வரலஷ்மிஜோடி சேர்கிறார். முழுக்க முழுக்க கனடாவில் தயாரிக்கப்பட இருக்கிறதுஇப்படம். ‏இதற்கிடையில் அவரது 'சிலம்பாட்டத்தில்' இன்னுமொரு பாடல் காட்சிஷூட் செய்யப்பட இருப்பதாகத் தெரிகிறது.

அரதப் பழசோ?

"வில்லத்தனம் நிறைந்த வில்லன் இல்லாத படம்". இப்படி சொல்பவர் 'பலம்' திரைப்படத்தின் இயக்குனர் முரளிகிருஷ்ணா. அரவிந்த் வினோத் என்ற புதுமுகம்கதாநாயகனாக அறிமுகமாக, மும்பை மாடல் தீபா சாரி கதாநாயகியாகஅறிமுகமாகிறார். கதை? கதாநாயகியுடன் காதலில் விழும் கதாநாயகன், கதாநாயகியின் சகோதரர் போடும் முட்டுக்கட்டைகளை எப்படி எதிர்கொள்கிறார்என்ற அரதப் பழசான கதைதான்.

ஆர்யாவி‎ன் பிரதர் அறிமுகம்

ஆர்யாவின் சகோதரர் ஷாஹிர் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் படம் 'காதல் டுகல்யாணம்'. அவருடன் திவ்யா ஜோடி சேர்கிறார். மணிரத்னத்தின்அஸிஸ்டெண்ட் மிலின்ட் ராவ் இப்படத்தை இயக்குகிறார்.

வந்துருச்சு ‘போல்ட்’

வால்ட் டிஸ்னி பிக்சர்ஸின் காமெடியுடன் கூடிய சாகசப் படமான 'போல்ட்' வெளியாகி இருக்கிறது. வால்ட் டிஸ்னியின் 48வது அனிமேஷன் படமிது. ஹாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின்கதாநாயகன் ஒரு நாய். இதன் பெயர்தான் போல்ட். அது செய்யும் சாகசங்கள்தான்கதை.

சிபி சோபிப்பாரா?

பிரசன்னாவும் சிபிராஜும் இணைந்து நடிக்கும் புதிய படம் 'நாணயம்'. எஸ்.பி.பி. சரண் தயாரிப்பில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. பிரசன்னா கதாநாயகனாக நடிக்க சிபி நெகட்டிவ் ரோல் செய்கிறார். இப்படம் தன்நடிப்புத் திறமையை வெளிக்காட்டும் படமாக அமையும் என்று சிபிகூறியிருக்கிறார்.

மெகா பட்ஜெட்டில் ஹாட் ஸ்டார்கள்

பாலிவுட்டில் விகாஸ் கபூரும், சமீர் கார்னிக்கும்லங்கான்ற புதியபடத்தயாரிப்பில் சுறுசுறுப்பாய்இறங்கியுள்ளனர். அதிர வைக்கும் செய்திபடத்தின் பட்ஜெட். சுமார் 90 கோடி எனத் தெரிவிக்கின்றன செய்திகள். பாலிவுட்டின் ஐந்து ஹாட் ஸ்டார்களான சல்மான்கான், ஹ்ரித்திக் ரோஷன், அபிஷேக் பச்சன், அஜய் தேவ்கன் மற்றும் பாபி தியோலுடன் பிரியங்காசோப்ராவும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் எதுவும் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
‎ ‎ ‎‎‎‎‎‎‎ நன்றி நிலா சாரல்

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு