ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

19 நவம்பர், 2008

தகவல் தொழில்நுட்பப்பொறியாளர்கள் டைடல் பார்க் அருகே மனிதச்சங்கிலி நடிகர்கள், சூர்யா, கார்த்திக் பங்கேற்று கைகோத்து நின்றனர்

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்தக் கோரி சென்னை தகவல்தொழில்நுட்பப் பூங்கா பொறியாளர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்

ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தி வரும் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும், சிங்களப் போர்ப்படையினருக்கு பயிற்சி உள்பட எந்த உதவிகளையும் இந்திய அரசு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்று சென்னையில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்கள் சென்னை டைடல் பார்க் அருகே மனிதச்சங்கிலி அணி வகுப்புப் போராட்டம் நடத்தினார்கள். நடிகர்கள், சூர்யா, கார்த்திக் ஆகியோர் இதில் பங்கேற்று தகவல் தொழில் நுட்பப் பொறியாளர்களுடன் இணைந்து கைகோத்து நின்றனர். போரை நிறுத்து என்ற வாசகம் பொறித்த சட்டையை அவர்கள் அனைவரும் அணிந்திருந்தனர். இனப் படுகொலை நடத்தும் இலங்கை அரசுக்கு எதிராக அவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்

லேபிள்கள்: , , , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு