ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

23 நவம்பர், 2008

வடிவேலுவின் ஹீரோ ஆசை. போதும்டா சாமி


வடிவேலு கேட்ட நாலரை கோடி
ஆளை மாற்றிய சிம்புதேவன்

ப்ரீயா இருந்தா வாடா மச்சான், இங்கே ஒருத்தன் சிக்கியிருக்காங்கிற ரேஞ்சுக்கு Vadiveluபுண்ணாக்கிவிட்டது வடிவேலுவின் ஹீரோ ஆசை. போதும்டா சாமி என்று ஒதுங்கிப் போனவரை மறுபடியும் இழுத்து வர முயற்சித்திருக்கிறார் சிம்புதேவன். இம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தின் மூலம், வடிவேலுவின் யானை பலத்தை ரசிகர்களுக்கு நிரூபித்தவர் சிம்புதேவன்.

இந்த ஒரு காரணத்திற்காகவே அவர் அழைப்பை ஏற்றுக் கொண்டு மீண்டும் ஹீரோவாக நடிக்க சம்மதித்தார் வடிவேலு. இதற்கு அவர் கேட்ட சம்பளம்தான் தலையை ரங்கராட்டினம் போல் சுற்ற வைக்கும் சமாச்சாரம். நான் இந்த படத்தில் நடிக்க வந்தால், சுமார் பத்து படங்களையாவது இழக்க வேண்டி வரும். எனவே சம்பளமாக நாலரை கோடி கொடுத்துவிடுங்கள் என்றாராம்.

அறை எண் 305 க்கு பிறகு சிம்புதேவனுக்கு படம் கிடைத்ததே பேரதிர்ஷ்டம். இதில் Vivekவடிவேலுவுக்கு நாலரை கோடி என்றால்? குதிரையில் ஏறி தப்பிக்காத குறையாக ஓடிப்போனது தயாரிப்பு தரப்பு. சரி, வடிவேலுவே வேண்டாம். விவேக்கை வைத்து ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று தயாரிப்பாளரை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்தார் சிம்புதேவன்.

கதையை கேட்டு சந்தோஷப்பட்ட விவேக் சம்பளமாக கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா? ஒன்றரை கோடி! இப்படியெல்லாம் படம் எடுத்து கலைசேவை செய்ய வேண்டுமா என்று தாவாங்கட்டையை சொறிய ஆரம்பித்திருக்கிறது தயாரிப்பு தரப்பு.

லேபிள்கள்: , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு