ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

15 நவம்பர், 2008

தமிழ் இன அழிப்பு வேலை இலங்கையில் நடக்கிறது ,தமிழர்களுக்கான தனி அரசை அமைப்பது-


தமிழ் இன அழிப்பு வேலை இலங்கையில் நடக்கிறது

வன்முறையற்ற போராட்டத்தை அன்று அடக்கியது சிங்கள அரசு

13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்

இலங்கை எம்.பி. இரா.சம்பந்தன்

- இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மகிந்த அரசாங்கத்தினால் சிங்களப் பவுத்த தேசியவாதத்தில் இருந்து விடுபட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இரா. சம்பந்தன் எம்.பி.

சிறீலங்கா நாடாளுமன்றம் நேற்று காலை 9.30 நிமிடத்துக்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டாரா தலைமையில் கூடியது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல கேள்வி நேரம் முடிவடைந்ததும் இரா.சம்பந்தன் வரவு-செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றினார்.

ரைம்ஸ் பத்திரிகையில் பாரக் ஒபாமா குறித்து வெளியான கட்டுரை ஒன்றில் விடுதலை இயக்கங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கருத்து மற்றும் டெய்லிமிரர் பத்திரிகையில் மங்கள சமரவீர தெரிவித்திருந்த விஷயங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி உரை நிகழ்த்திய இரா.சம்பந்தன், போரில் புலிகளை வெற்றிபெற முடியாது என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆங்கில மொழியில் நீண்ட நேரம் அமைதியாக உரை நிகழ்த்திய இரா.சம்பந்தன், அவ்வப்போது உரத்த தொனியிலும் விளக்கமளித்தார். கடந்த காலத்தில் பதவி வகித்த சிங்கள அரசாங்கங்கள் தமிழ் மக்களை அடக்கி ஆள முற்பட்டமை தொடர்பாகவும் எடுத்துக் கூறினார்.

தந்தை செல்வா காலத்தில் இருந்து தமிழர்கள் நடத்திய அகிம்சை போராட்டங்களை சிங்கள அரசுகள் வன்முறைகள் மூலம் அடக்கி அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டிய அவர், தற்போது படை நடவடிக்கைகள் மூலம் மகிந்த அரசு தமிழ் இன அழிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

மூன்று வழிகளில்...

இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றால் மூன்று வழிகள் உள்ளன இதில் ஏதேனும் ஒன்றை கையாளலாம்.

ஒன்று தமிழர்களை முற்றாக அழிப்பது-

இரண்டாவது உரிய அரசியல் தீர்வை முன்வைப்பது-

மூன்றாவது தமிழர்களுக்கான தனி அரசை அமைப்பது-

இவ்வாறு குறிப்பிட்ட இரா.சம்பந்தன், இந்த மூன்றிலும் முதலாவதாக கூறப்பட்ட விஷயமே தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

இரா.சம்பந்தன் உரை நிகழ்த்திய போது மூத்த அமைச்சர்கள் சிலர் அமைதியாக இருந்து செவிமடுத்துக் கொண்டிருந்தனர்.

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு