ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

7 நவம்பர், 2008

ரஜினி மன்னிப்பு கேட்கணும்... குரல் உயர்த்தும் இந்துமத அமைப்புகள் வெட்டி அறிக்கை

வாலு போயி கத்தி வந்திச்சு டும்டும்டும்... ராமர் பாலம் பிரச்சனையே இன்னும் Rajinikanthமுடியவில்லை. அதற்குள், பகவத் கீதையை அவமானப்படுத்தி விட்டார் ரஜினி என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் சிலர். தலைக்கு ஹெல்மெட் மாதிரி வாய்க்கு ஏதாவது ஹெல்மெட் இருந்தால் சொல்லுங்க என்கிற அளவுக்கு வெறுத்து போயிருக்கிறார் ரஜினி.

‘கடமையை செய், பலனை எதிர் பார்’ இப்படி ஒரு ஸ்லோகனுடன் தனது ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது, பகவத் கீதையில் கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்று கண்ணன் சொன்னதில் எனக்கு உடன்பாடில்லை என்ற ரீதியில் கருத்து சொல்லப் போக, கொதித்து எழுந்துவிட்டார்கள் சில இந்து மத அமைப்பினர்.

கருத்து சுதந்திரத்தை குருத்தோடு வெட்டிப்போடும் இவர்கள், இப்போது தனது பேச்சுக்காக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

1 கருத்துகள்:

Anonymous williamssoloman கூறியது…

கண்ணன் சொன்னது போல கடமையை செய், பலனை எதிர் பார்க்காதே இந்து அமைப்பினரிடம் வேலையையை வாங்கிவிட்டு சம்பளம் தரத்தேவையில்லை.அவர்கள் கண்ணனிடமே பெற்றுக்கொள்வார்கள்.

7 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:38  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு