ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

7 நவம்பர், 2008

ரசிகர்கள் அனுப்பிய 30 ஆயிரம் தந்தி பெருமைப்படுகிறார் விஜய்

அரசியல் ஆசை நடிகர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ? ரசிகர்களுக்கு Vijayஇருக்கிறது. லேட்டஸ்டாக தனது ரசிகர்களை உசுப்பேற்றியிருக்கும் விஜய், பொதுநல நோக்கத்தோடு ஒரு விஷயத்தை அறிவித்தார். ஆனால் அவரே வியக்கும் விதத்தில் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்புங்கள் என்று தனது ரசிகர்களை கேட்டுக் கொண்ட விஜய், ஃபெப்சி உண்ணாவிரத பந்தலில் இதுபற்றி விவரங்களை அப்டேட் செய்தார். இதுவரை விஜய் ரசிகர்கள் 30 ஆயிரம் தந்திகள் அனுப்பியிருக்கிறார்களாம் பிரதமருக்கு.

இன்னும் தொடர்ந்து அனுப்ப வேண்டும் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய். இதற்கிடையில் ஈழத் தமிழர் நிவராண நிதியாக 12 லட்சத்தை கொடுத்த லாரன்ஸ், உங்களை வாழ வைத்த தமிழனுக்காக நீங்கள் இன்னும் நிறைய செய்திருக்கலாமே என்று விஜயிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். குடுமிப்பிடி சண்டை ஆரம்பிச்சிடுச்சுப்பா...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு