ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

6 நவம்பர், 2008

kamal birthday statement

கமலும் பிறந்தநாளும்...

Kamalhasan

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 7 ந் தேதி தனது பிறந்த தினத்தை ரசிகர்களுடன் கொண்டாடும் கமல்ஹாசன், இந்த வருடம் இந்த கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். காரணம்? இலங்கையில் நடக்கும் இனப் படுகொலை!

‘இலங்கை நம் அண்டை வீடு என்ற சமீபம் போக, ஈழப்போர் நம் தற்கால தமிழ் சரித்திரம் என்ற நெருக்கமும் என்னை எந்த கொண்டாட்டத்திலும் மனம் லயிக்க முடியாமல் தடுக்கிறது. மனிதனே, மனிதனை கொல்லும் இந்த போர் இந்த நவீன யுகத்தின் ஊடகங்களால் நம் காது கேட்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் நடக்கிறது. இந்த சோக சூழலுக்கு முடிவு சொல்லும் ஞானமில்லாவிடினும், அடுத்த வீட்டில் அடுத்தடுத்து இழவுக்கூட்டங்கள் நடக்கும் இவ்வேளையில், நம் வீட்டில் குதூகல கொண்டாட்டங்கள் நடப்பது மனித நேயம் சார்ந்த செயலாக இருக்காது’ என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார் கமல்.

கொண்டாட்டத்தை அடக்கிக் கொள்ள சொன்ன கமலுக்கு உளமார்ந்த பாராட்டுகள். அப்படியே தனது ரசிகர்களை குரல் கொடுக்கவும் சொன்னால், இந்த அறிக்கையின் பலன் அதிகரிக்கும். செய்வீர்களா கலைஞானி?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு