எந்திர(ன்)கோளாறு..... இக்கட்டில் ஷங்கர்! நம்பினா நம்புங்க.. நம்பாட்டி போங்க.
நம்பினா நம்புங்க.. நம்பாட்டி போங்க. அந்த பிரபல படத்திற்கு ‘எந்திர’க்கோளாறு! சரி பண்ணும் வேலைகளில் இறங்கியிருக்கிறது தயாரிப்பு தரப்பு. படத்தின் நாயகிக்கு எட்டு கோடி சம்பளம். உடன் வரும் உதவியாளர்கள் இருவருக்கும் தினந்தோறும் ஒரு லட்சம் பேட்டா என்று தடபுடலாக இறங்கிய கம்பெனி, இயக்குனர் காட்டும் எக்குதப்பான வேகத்தால் தடுமாறிக் கொண்டிருக்கிறதாம்.
முதலில் கொடுத்த 150 கோடி பட்ஜெட், இன்னும் ஏறலாம். ஏறாமலும் போகலாம் என்று இயக்குனர் ஒரு ஆர்.டி.எக்ஸை வீச, அதிர்ந்து போனது கம்பெனி. இதுவரை ஆன செலவுகளே தாறு மாறாக இருக்கிறதாம். இன்னும் பட்ஜெட் ஏறினால் என்ன செய்வது? இந்த 150 கோடியை சூப்பர் ஹிட் ஆனால் கூட, திருப்பி எடுக்க முடியுமா என்ற நிலையில் போட்ட அசலை மீட்டால் போதும் என்ற கவலையில் இருக்கிறது கம்பெனி.
இன்னும் எத்தனை நாள் படப்பிடிப்பு நடக்கும்? தினந்தோறும் ஆகும் செலவு என்ன? இதையெல்லாம் தெளிவாக எழுதிக் கொடுங்கள் என்று கூறிவிட்டார்களாம் இயக்குனரிடம். ஆனால் இயக்குனரோ, அப்படியெல்லாம் எழுதி தர இயலாது. கம்பெனி என்ன முடிவெடுக்கிறதோ, எடுக்கட்டும் என்று கூறிவிட்டாராம். இம்மாதம் 16 ந்தேதி கிளம்ப வேண்டிய யூனிட், உத்தரவுக்காக காத்திருக்கிறது.
சமாதானம் பேச வேண்டிய உச்ச நடிகர், தயாரிப்பாளர் பக்கம் நிற்கிறார்! அப்போ பிரச்சனை சீக்கிரம் முடிஞ்சிடும்!
கருத்துகள்