புகை உடலுக்கு பகை ‘சுருட்டு’ மும்தாஜ் அட்வைஸ்
‘சுருட்டு’ மும்தாஜ் அட்வைஸ்
அட, மும்தாஜா இது? தேவையில்லாமல் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த எக்ஸ்ரா சதைகளை குறைத்து ‘ஏஞ்சல்’ போலிருந்தார். ஒரு காலத்தில் தனது ரசிகர்களை சென்னைக்கு அழைத்து பிரமாண்ட சந்திப்பு நடத்துகிற அளவுக்கு எதிர்கால கனவுகளை வளர்த்துக் கொண்டிருந்த மும்ஸ், திடீரென்று எங்கு போனார் என்றே தெரியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய.டிராஜேந்தருடன் வீராசாமி என்ற படத்தில் நடித்ததோடு சரி. அதன்பின் வந்த வாய்ப்புகளையும் ஓரம் கட்டி விட்டார். இவராக கட்டினாரா? அல்லது கட்டப்பட்டாரா? என்பது ஆராய்ச்சிக்கு தேவைப்படாத விஷயம்.
மும்சுக்கு டும்டும்டும் என்று வந்த தகவல்களும் அவர் தரப்பில் மறுக்கப்பட்டன. இந்நிலையில் ராஜாதிராஜா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மும்தாஜை அழைத்த ஷக்தி சிதம்பரத்திற்கு பெருத்த ஆச்சர்யம். நேற்றுதான் சினிமாவில் நடிக்க வந்தது போலிருக்கிறாரே? அதற்காக ஹீரோயின் வேடம் கொடுத்துவிட முடியுமா என்ன? பாழாய் போன அதே கவர்ச்சி வேடம்தானாம். போதும் போதாதற்கு வாயில் சுருட்டை வேறு கொடுத்துவிட்டார்கள்.
ஷாட்டில் மட்டுமல்ல, பிரேக்கில் கூட சுருட்டும் விரலுமாக அமர்ந்திருக்கிறார் மும்ஸ். தேடி தேடி சேகரித்த அந்த பழைய அழகை சுருட்டு காலி பண்ணிவிடுமே என்ற கவலையோடு அவரை பார்த்தால், ஷாட்டுக்கு மட்டும்தான் புகை. மற்ற நேரங்களில் புகை எனக்கு பகை என்றார்! (வீராச்சாமியின் இன்ஸ்பிரேஷனாக இருக்குமோ) படத்தில் அமைச்சராக வரும் மும்ஸ், படம் முழுக்க கேரவேனிலேயே பயணிப்பாராம். நடிகர் நடிகைகளுக்கு கேரவேன் கொடுக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் பிடிவாதம் காட்டும் நேரத்தில், கதைப்படியே கேரவேன் வருவதால், ஜம் உலா வருகிறார் மும்ஸ்.
கருத்துகள்