ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

10 நவம்பர், 2008

விடுதலைப்புலிகளின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது! இலங்கை அரசிடம் மத்திய அரசு வற்புறுத்தி போரை நிறுத்தச் செய்ய வேண்டும் தமிழர் தலைவர் கருத்து


விடுதலைப்புலிகளின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!
இலங்கை அரசிடம் மத்திய அரசு வற்புறுத்தி போரை நிறுத்தச் செய்ய வேண்டும்
தமிழர் தலைவர் கருத்து

விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வற்புறுத்தியுள்ள அறிக்கை வருமாறு:
போர் நிறுத்தத்திற்குத் தயார் என்று இலங்கையில் விடுதலைப்புலிகள் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத் தக்கதாகும்! முதல்வர் கலைஞர் தம் அயராத முயற்சிகளுக்கு விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து ஏற்பட்ட சாதகமான விளைவு இது என்றே சொல்லலாம்!
முன்புகூட விடுதலைப்புலிகள் 2002-இல் தங்கள் தரப்பிலிருந்து போர் நிறுத்தம் அறிவித்த பிறகே, ஓராண்டுக்கு பின்பே சிங்கள அரசு, பன்னாட்டு அழுத்தம் காரணமாகவே போர் நிறுத்தம் செய்தது.
தமிழ்நாட்டின் எழுச்சி
தமிழ்நாட்டில் எழுந்துள்ள எழுச்சியையொட்டி, நமது முதல்வர் கலைஞர் அவர்கள் விடுத்துவரும் தொடர் அறிக்கைகளின் விளைவாகவே, விடுதலைப்புலிகள் இந்த நல்லெண்ண சமிக்ஞையைக் காட்டியுள்ளார்கள்.
வழக்கம்போல இருக்கின்ற சில சிங்கள ஆதரவு - இரவல் குரல் சக்திகள் - ஊடகங்களில் சில இதனைக் கொச்சைப்படுத்தி அவர்கள் ஏதோ வலுவிழந்து விட்டனர் என்று வாய்ப்புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று பிரச்சாரம் செய்யக் கூடும். அலட்சியப்படுத்த வேண்டிய இந்த அற்பங்களைப்பற்றிக் கவலைப்படாமல், அங்கு சொந்த மண்ணில் சோற்றுக்கு வழி இன்றி, குண்டு மழைகளிலிருந்து தப்பிக்க காடு, வனாந்திரள்களில் அலையும் தமிழர்கள் குழந்தைக் குட்டிகளுடன் ஊர் திரும்பிட வசதி செய்ய இந்த நல்லெண்ணம் இலங்கை அரசால் எதிர்க் கொள்ளப்பட வேண்டும்.
மத்திய அரசின் கடமை
அதை வற்புறுத்த நமது மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது.
நமது பிரதமரை 13-ந் தேதி அன்று சந்திக்க வரும் இலங்கை அதிபர் இராஜபக்சேயிடம் எடுத்துக் கூறி வற்புறுத்திட வேண்டும். போர் நிறுத்தம் - நிரந்தர அமைதித் திரும்புதல் இவை பிரதமரால் வற்புறுத்தப்பட்டு அரசியல் தீர்வு அங்கு உருவாக்கப்பட வேண்டும் என்பதே நமது மிக முக்கிய வேண்டுகோள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு