திரைப்படம் பற்றி பேசினோம்” ரஜினி சந்திப்பு பற்றி அத்வானியே சொன்ன ஜோக்

“திரைப்படம் பற்றி பேசினோம்”
ரஜினி சந்திப்பு பற்றி அத்வானி!

ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று டெல்லியில் இருந்து கொண்டு குரல் Rajinikanthகொடுக்கிறார் சத்ருஹன் சின்கா. ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் ஆந்திராவிலிருந்து ஆர்வளப்படுகிறார் சிரஞ்சீவி. ஆனால், பதில் சொல்ல வேண்டிய ரஜினி, ஆகாயத்தை காட்டிக் கொண்டிருக்கிறார் நீண்டகாலமாக!

அதுபோகட்டும்... நேற்றைய செய்தி சுறுசுறுப்பளித்திருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு. சென்னைக்கு வந்த அத்வானி போயஸ் தோட்டம் பக்கம் காரை திருப்ப, முன்னாள் முதல்வர் ஜெ. வீட்டிற்குதான் செல்வார் என்று நினைத்திருப்பார்கள் மக்கள். ஆனால், கார் போய் நின்ற இடம் ரஜினி குடியிருக்கும் பதினெட்டாம் நம்பர் வீடு.

இருவரும் சந்தித்து இலங்கை பிரச்சனை பற்றியா பேசியிருக்கப் போகிறார்கள்? 45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பில் திரைப்படங்கள் குறித்து பேசினார்களாம் இருவரும். ( இது) சந்திரமுகி, சிவாஜி படத்தின் டிவிடிகளை கொடுத்தாராம் ரஜினி. ‘கடவுள் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்’ என்று ரஜினி கூறியிருந்ததற்கு பாராட்டுகளை தெரிவித்தாராம் அத்வானி. (ம்...இதை நம்பலாம்) அன்று மாலை நடைபெற்ற அத்வானியின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் ரஜினி. நூலின் பெயர் ‘என் தேசம், என் வாழ்க்கை’

ரஜினியோட நூல் வெளியீட்டுக்கு வருவீங்களா, அத்வானிஜி?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை