தள்ளிப்போகும் மர்மயோகி கமலின் அடுத்தகட்ட மூவ்...?
| |
மர்மயோகியை தள்ளி போட்டுவிட்டாராம் கமல். கோடம்பாக்கத்தின் மற்றொரு சூடான செய்தி இதுதான். கிட்டதட்ட 100 கோடி செலவில் தயாரிப்பதாக திட்டமிடப்பட்ட மர்மயோகி சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிரேக் அடித்து நிற்கிறதாம். மலைக்கள்ளன் கதையை போலவே உருவாக்கப்பட்டுள்ளது இந்த கதை. ராபின் ஹ§ட் மாதிரி, இருப்பவர்களிடமிருந்து பறித்து இல்லாதவர்களுக்கு கொடுக்கிற கேரக்டரில் நடிக்கிறார் கமல். இந்த படம் வந்தால், நிஜமாகவே உலக நாயகன் ஆகிவிடுவார் என்பது நிச்சயம். ஆனால், இந்த வெற்றியை கொஞ்சம் தள்ளி போட்டிருக்கிறாராம் கமல். இதற்கிடையில் வெங்கடேஷ், மோகன்லால், அக்ஷய்குமார், கமல் இந்த நால்வரும் நடிக்கும் ஒரு படத்தை இடையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கமலே இயக்கவிருக்கும் இந்த படம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகுமாம். பரிதாபம் என்னவென்றால், மர்மயோகிக்காக கொடுத்திருந்த கால்ஷீட் தேதிகளை கூவி கூவி விற்றுக் கொண்டிருக்கிறார்கள் ஸ்ரேயாவும், த்ரிஷாவும். ஐயோ பாவம் |
கருத்துகள்