காஞ்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா! எதிர்ப்புக் காரணமாக ரத்து!

காஞ்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா!
எதிர்ப்புக் காரணமாக ரத்து!

காஞ்சிபுரம், நவ. 9: ஆர்எஸ்எஸ் கருத்தரங்கம் நடந்த பள்ளி மீது கல்வீசி தாக்குதல் நடந்தது. 6 பேர் காயம் அடைந்தனர். பதற்றம் நிலவியதால், போலீஸ் குவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை கிராமத்தில் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி உள்ளது. இங்கு 3,500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால் 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடந்தது. பள்ளியின் மற்றொரு பகுதியில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் 2 நாள் கருத்தரங்கம் தொடங் கியது. பல ஊர்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். காலை 10 மணிக்கு கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத் தைகள், தமுமுக ஆகியவற்றின் கொடிகளுடன் பலர் பள்ளி முன் திரண்டனர். ஆர்எஸ்எஸ் கருத்தரங்கம் நடத்த அனு மதித்தது யார் என்று பள்ளி நிர்வாகி அருண்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர். பள்ளிக்குள் இருந்து தடிகளுடன் வெளியே வந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கல்வீசியவர்களை தாக்கினர். இதனால் கூட்டத்தினர் சிதறி ஓடினர். அவர்கள் மீது கல்வீச்சு நடந்தது. இதில் 6 பேர் காய மடைந்தனர். அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். பள்ளியில் இருந்த மாணவ, மாணவியர் அதிர்ச் சியில் உறைந்தனர். தகவல் நகரில் பரவி, பெற்றோர் பதற் றத்துடன் வந்து பிள்ளைகளை அழைத்து சென்றனர். பள்ளி நிர்வாகி அருண் குமாரை போலீஸ் அதிகாரிகள் கூப்பிட்டு, ஆர்எஸ்எஸ் இயக் கத்தினரை உடனே வெளி யேற்றும்படி கூறினர். கோட் டாட்சியர் முருகையா (பொறுப்பு), தாசில்தார் நடராஜன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். சம்பவம் பற்றி ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் ராஜன் கூறுகையில், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் 2 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந் தோம். கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் வந்து எங்கள் மீது கல்வீசினர். பள்ளி நிர்வா கம் கேட்டுக் கொண்டதால் வேறு இடத்துக்கு செல்கிறோம் என்றார். இன்று காலை காஞ்சி இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத் தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் டி.ஏ.ஜி. அசோகன் மற்றும் காஞ்சி கதிரவன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை