ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

13 நவம்பர், 2008

இலங்கை தமிழர்கள்நிவாராணம்நேற்று வந்த லாரன்ஸ் 12 லட்சம் கொடுக்கும் போது விஜய் ஒரு லட்சம் மட்டுமே கொடுக்கிறாரே, நியாயமா ?

Vijay - Lawrence

சுண்டு விரலில் அடிபட்டால், நடுவிரலுக்கு மருந்து போடுகிற வழக்கம் நம்மை விட்டு போகவே போகாது போலிருக்கிறது. வந்த விஷயத்தை மறந்து, வேறொரு விஷயத்தில் லயிக்கிற நமது எண்ணம், இந்த முறையும் பளிச்சென்று வெளிப்பட்டிருக்கிறது.

இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு உடனடி நிவாராணம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் கூடியது திரையுலகம். அங்கே தமது உணர்வுகளோடு, உதவியையும் தர வேண்டும் என்ற உந்துதலில் பலரும் உதவித் தொகை வழங்கினார்கள். இந்த தொகையில் சிறு ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம்.

பெரிய நடிகர்கள் லட்சக்கணக்கில் தர வேண்டும் என்றும், சின்ன நடிகர்கள் ஆயிரங்களாவது தர வேண்டும் என்றும், வற்புறுத்தி பேசுவது வீண் விரோதங்களையே வளர்க்கும். நேற்று வந்த லாரன்ஸ் 12 லட்சம் கொடுக்கும் போது விஜய் ஒரு லட்சம் மட்டுமே கொடுக்கிறாரே, நியாயமா? என்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

தவறி விழுந்த சொந்தங்களை தாங்கி பிடிக்கும்போது, சிலருக்கு கால் பக்கமும், சிலருக்கு தலை பக்கமும் அமையும். அது அவரவர் பதட்டத்தை பொறுத்தது. பாதிப்புள்ளானவருக்கு தாங்கியவர்கள் மீது அன்பு இருக்கிறது. அதுதான் இப்போதைய நிறைவு!

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு