ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

5 நவம்பர், 2008

kilinochi mutrukai

கிளிநொச்சி முற்றுகை : இலங்கை ராணுவம் அறிவிப்பு
கொழும்பு : விடுதலைப்புலிகளின் தலைநகரமாகக் கருதப்படும் கிளிநொச்சியின் வடமேற்கு கடற்கரையின் பெரும்பகுதியை முற்றுகையிட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் புலிகளின் இரண்டு முக்கிய கடற்படை தளங்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை. நாவலடி என்ற இடத்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான இளகூன் என்பவர் கொல்லப்பட்டதாக புலிகள் வானொலி அறிவித்தது. 80 கி.மீட்டர் பரப்பளவு கொண்ட கிளிநொச்சியின் வடமேற்கு கடற்கரை பகுதியில் 90 சதவிகிதத்தை கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், இந்த போரில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 80 சதவிகித பகுதிகளைக் கைப்பற்றி விட்டதாகவும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க தேர்தலை சித்தரிக்கும் மணல் சிற்பம்
பூரி : உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலை ஒரிசா மாநிலம் பூரி கடற்கரையில் கலைஞர் ஒருவர் மணல் சிற்பமாக வரைந்து பார்வையாளர்களை அசத்தி உள்ளார்.

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். கடற்கரை மணலில் சிற்பங்கள் வரையும் ஆற்றல்கொண்ட இவர், உலகமே பரபரப்பாக எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலை தத்ரூபமாக சித்தரித்தார். வெள்ளை மாளிகை மற்றும் தேர்தலில் போட்டியிடும் பாரக் ஒபாமா மற்றும் மெக்கைன் ஆகியோரை மிகவும் நேர்த்தியாக பூரி கடற்கரை மணலில் சிற்பமாக வடித்துள்ளார். இங்கு சுற்றுலா வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இதனைக் கண்டு களித்தனர். அதிபர் தேர்தலில் ஒருதலைப்பட்சமாகக் கருத்து தெரிவிக்காமல், இரண்டு கட்சியின் வேட்பாளர்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து மணல் சிற்பம் வரைந்துள்ளதை சுற்றுலாப் பயணி ஒருவர் வெகுவாகப் பாராட்டினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு