ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

7 நவம்பர், 2008

இலங்கைத் தமிழருக்கு உதவி புரிந்த உடல் ஊனமுற்ற தமிழர்!திருந்துமா "தினமலர்" கூட்டம்?

இலங்கைத் தமிழருக்கு உதவி புரிந்த
உடல் ஊனமுற்ற தமிழர்!

திருந்துமா "தினமலர்" கூட்டம்?

சிங்கள இனவெறி பிடித்த இராணுவம், இலங்கைத் தமிழர் களைக் குண்டுகள் வீசி கொன் றொழிக்கிறது. அய்.நா மன்றம் உள்ளிட்ட உலகின் பல்வேறு அமைப்புகளும் இதற்குக் கடும் கண்டனமும், தொடர் எச்சரிக்கை களும் விடுத்து வருகின்றன.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்க ளுக்கு ஆதரவாக ஒன்றுபடுவதி லும், நிதியுதவி செய் வதிலும் தமிழர்கள் எப்போதும் நீறுபூத்த நெருப் பாகவே உள்ளனர். இந்த இன வுணர்ச்சி பொங்கிப் பீறிடும் போதெல்லாம் பார்ப்பனர்கள் நெருப்பில் கால் வைத்ததுபோல அலறிவிடுகின்றனர்.

சிங்கள இனவெறியைப்போல பார்ப்பன இனவெறி பிடித்த இந்து, துக்ளக், தினமலர் போன் றவை தமிழர்களுக்கு எதிராகக் கடும் நம்பிக்கைத் துரோகம் செய்து வருகின்றன.

தமிழில் பத்திரிகைகள் நடத்தி, தமிழர்களிடமே விற்று, தமிழ் நாட்டில் பிழைப்பு நடத்தி வரும் இக்கூட்டத்திற்கு மானம், மரி யாதை, நன்றியுணர்ச்சி என்ப தெல்லாம் அறவே கிடையாது.

ஒரு பக்கம் நிவாரண நிதி கொடுப்பதுபோல தினமலர் கூட்டம் நடிப்பதும், மறுபுறம் செய்திகளிலும், வாசகர் கடிதங் களிலும் பூணூலைக் கொண்டு சொறிந்து கொள்வதிலும் அவர்க ளுக்கு அலாதி பிரியம். தினமலர் போன்ற கருமாதிப் பத்திரிகைக ளுக்கு எதிர்ப்புணர்வு பலமாக வலுத்து வருவதை நடைமுறை யில் காணலாம்.

ஒரு கட்டத்தில் இக்கருமாதிப் பத்திரிகையைச் சராசரித் தமிழனும் வெறுத்து ஒதுக்கும் நிலை வரும்; அப்போது பூணூ லின் திரி அக்கு வேறாய் பிரிந்து, கலைந்து காற்றில் பறக்கும்.

இவர்கள் என்னதான் பேனா வில் கொள்ளளவைவிட அதிக மாக மை நிரப்பி எழுதினாலும், தமி ழனின் இன உணர்ச்சி ஒரு போதும் காய்ந்து போய்விடாது என்ப தற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு.

சிங்கள இனவெறி பிடித்த இராணுவத்தைக் கண்டித்தும், மனித இரத்தம் குடிக்கும் இராஜ பக்சேவைக் கண்டித்தும், சொந்த மண்ணில் அல்லலுறும் தமிழ னைக் காப்பாற்ற வேண்டி இரண்டு கால்களும் ஊனமுற்ற சுரேஷ் என்ற இளைஞர் உதவி செய்திருக்கிறார்.

இனி தமிழன் ஒருவன் கூட உடல் ஊனமடையக் கூடாது என்ற உத்வேகத்துடன் துறையூர் வட்டம், கீரம்பூர் பகுதியிலிருந்து வந்து, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தா.சவுண்டையாவைச் சந்தித்துத் தன் பங்காக ரூ. 200 வழங்கியிருக்கிறார்.

கொல்லுப்பட்டறைத் தொழிற் செய்து, எளிய வாழ்க்கை வாழ்பவர் சுரேஷ். இவர் கொடுத்த நிதி சிறி தாயினும் அவரின் இனவுணர்வுக்கு எத்தனை கோடியும் சமமாகாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு