த்ரிஷா வீட்டுக்கு கமலே போனார்; மர்மயோகியை கைவிடவில்லை

சந்துக்கு வந்த நந்தவனத்தேரு...
த்ரில்லானார் த்ரிஷா!

நந்தவனத் தேரு சந்துங்குள்ளும் வரும் என்பதற்கு கமல்ஹாசனின் விஜயம் ஒரு Trishaஉதாரணம். மர்மயோகி தள்ளிப் போனதால் அப்செட் ஆகியிருந்தார் த்ரிஷா. தசாவதாரத்தின் சூடான வெற்றிக்கு பிறகு கமல் இயக்கி நடிக்கும் படம் என்பதாலும், தமிழ் திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவர் என்பதாலும், கமல் படத்தில் நடிப்பதில் த்ரிஷாவுக்கு பரம திருப்தி.

இதுவரை த்ரிஷா வாங்காத சம்பளத்தையும் கொடுத்து கையோடு 100 நாட்கள் டேட்சையும் வாங்கியிருந்தார் கமல். இந்த நேரத்தில் சந்தை பொருளாதாரம், சறுக்கலில் விட்டது மர்மயோகியை. படமே நிறுத்தப்பட்டு விட்டது என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல், “இந்த படத்தை கைவிடவில்லை. தள்ளிப் போட்டிருக்கிறோம். அவ்வளவுதான்” என்று விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் மிகுந்த அப்செட் ஆகியிருந்த த்ரிஷாவை தேற்ற வேண்டிய பெரும் கடமையும் அவருக்கு இருந்தது. திடீரேன்று ஒருநாள் த்ரிஷா வீட்டுக்கே வந்தாராம் கமல். திக்குமுக்காடி போனார் த்ரிஷ். இந்த படம் ஏன் தாமதம் ஆகிறது என்று விளக்கமாக கூறியவர், “படத்தை மீண்டும் துவங்குவேன். “அப்போதும் நீங்கள்தான் நாயகி” என்று ஆறுதல் கூறினாராம். த்ரிஷாவின் கால்ஷீட்டை வீணடித்ததற்காக தார்மீக வருத்தமும் தெரிவித்தாராம்.

த்ரிஷா வீட்டுக்கு கமலே போனார் என்பதுதான் கோடம்பாக்கத்தின் இன்றைய தலைப்புச் செய்தி

கருத்துகள்

குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
இது மிகவும் பெருமை பட வேண்டிய விஷயம். இதில் வெக்கப் படவோ, வேதனை படவோ ஒன்றுமே இல்லை.

கமலின் தொழிழ் பக்தியை, ஈடுபாட்டை காட்டுகிறது, சக தொழிலாளி வருத்தம் அடைய கூடாது என்று அவர் இல்லம் தேடி சென்று ஆறுதல் கூறி இருக்கும் கமலின் மனிதாபின செயல் போற்றுதலுக்கு உரியது.

கமல் தான் மூத்த நடிகர், அதிக விருதுகள் வாங்கிய நடிகர் என்ற கர்வம் இல்லாமல் சக நடிகர் (நடிகையை) தனக்கு இணையாக நடத்தி இருக்கும் பண்பை பிற நடிகர்களும் கடை பிடிக்க வேண்டும். இந்த கலாச்சாரம்தான் ஐ டி நிறுவன கலாசாரம்.

நம் இந்திய பழைமை நிறுவன கலாசாரம் எனில் கமல் த்ரிஷாவை தன் வீட்டிற்கு அழைத்து இருப்பார்.

பெண் நடிகைகள் வெறும் போக பொருட்கள் மட்டுமே என்று காட்டிய/ கருதிய எம் ஜி யார், சிவாஜி காலங்கள் மலை ஏறி விட்டது.

வாழ்க கமல் ஏமான் நீவிர்.

குப்பன்_யாஹூ

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா