ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

9 நவம்பர், 2008

இந்திய-அமெரிக்கருக்கு அமெரிக்காவில் உயர் பதவி

Kris Kolluri
நியூயார்க்: நியூஜெர்சி மாகாண பள்ளி வளர்ச்சி ஆணையத்தின் தலைமை செயலதிகாரியாக இந்தியரான கிறிஸ் கொல்லூரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியூஜெர்சி மாகாணத்தின் ஒரு நாள் ஆளுநராக தற்காலிகப் பொறுப்பை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பான அறிவிப்பை நியூ ஜெர்சி மாகாண ஆளுநர் ஜான் கோர்ஸைன் வெளியிட்டு்ளார். டிசம்பர் 1ம் தேதி முதல் இப்பதவியை வகிப்பார் கொல்லூரி.

தற்போது நியூஜெர்சி மாகாண போக்குவரத்துத் துறை ஆணையராக பணியாற்றி வருகிறார் கொல்லூரி. கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி முதல் இப்பொறுப்பில் இருக்கிறார் கொல்லூரி.

39 வயதாகும் கொல்லூரி, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மேற்கு வின்சர் நகரில் மனைவி, இரு மகள்களுடன் அவர் வசித்து வருகிறார்.

நியூஜெர்சி மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக ஒரு நாள் பதவி வகித்தவர் கொல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு