ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

12 நவம்பர், 2008

ரஜினி பேசிய வார்த்தை...வேதனையில் இயக்குனர் குடும்பம் உண்மையா ?

மறைந்த இயக்குனர் ஸ்ரீதரின் அஞ்சலி கூட்டத்தில் பேசிய ரஜினி, தன்னிடம் Rajinikanth"வேலை கொடு" என்று ஸ்ரீதர் கேட்டதாக கூறியிருந்தார். அது பெரும் வேதனையை கிளப்பியிருக்கிறது ஸ்ரீதரின் குடும்பத்தினருக்கு. "வேலை கொடுன்னு தன்னிடம் அப்பா கேட்டதாக ரஜினி சொன்னாரு. அதை கேட்டு பதறிட்டேன்" என்கிறார் ஸ்ரீதரின் மகன் சஞ்சய்.

ஸ்ரீதரின் மனைவி தேவசேனா, "பொதுவா இன்னிக்கு சினிமா இருக்கிற நிலையில் நாலு வருஷம் தொடர்ந்து படம் பண்ணலைன்னா மறந்திடுவாங்க. மக்களும் மறந்திடுவாங்க. என் கணவர் டைரக்ஷன் பண்றதை விட்டு 15 வருஷமாச்சு. ஆனாலும் அவரை மறக்காம பெரிய டைரக்டர்கள் வந்து உடல் அடக்கம் பண்ணுற வரைக்கும் இருந்திட்டு போனாங்க. அவர் நாலு பேருக்கு வேலை கேட்கிற மாதிரி வாழ்ந்திருக்காரே தவிர, யாருகிட்டேயும் வேலை கேட்க வேண்டிய நிலையில் இல்லை. என்ன... பிசியா இருந்தப்பே எங்க வீட்டு போர்டிகோவில் பத்து கார்கள் நிக்கும். இப்போ இரண்டு கார் நிக்குது. அவ்வளவுதான்"

"நலிந்த கலைஞர்கள் பத்து பேரை தயாரிப்பாளரா வச்சு அருணாசலம் படத்தை எடுக்கப் போறேன். அதிலே நீங்களும் ஒருத்தரா இருங்கன்னு ரஜினி என் வீட்டுக்காரரை கேட்டிருக்கார். அப்போ எனக்கு தனியா கால்ஷீட் கொடு. நான் படத்தை தயாரிக்கிறேன்னு என் கணவர் சொல்லியிருக்கார். யோசிச்சிட்டு அப்புறமா வர்றேன்னு ரஜினி சொல்லிட்டு போயிட்டார். மறுநாள் திருமதி ரஜினிக்கு போன் போட்டு நலிந்த கலைஞர்கள் லிஸிடில் என் கணவர் பெயர் இடம் பெற வேண்டாம். ரொம்ப கஷ்டத்திலே இருக்கிற இன்னொரு கலைஞருக்கு அந்த வாய்ப்பை கொடுங்கன்னு நானே சொன்னேன். இதுதான் நடந்தது. எனக்கு வேலை கொடுன்னு என் கணவர் கேட்டதா எதை நினைச்சுகிட்டு ரஜினி பேசினாருன்னே தெரியலை" என்கிறார்.

"தந்துவிட்டேன் என்னை படத்தின் மூலமாக என் கணவர்தான் விக்ரமை ஹீரோவாக்கினார். கமல்ஹாசன் எல்லாம் வீடு தேடி வந்தப்பவும் ஏனோ விக்ரம் மட்டும் வரவேயில்லை. இதுவரைக்கும் என்னாச்சு, ஏதாச்சுன்னு போன் பண்ணிகூட விசாரிக்கலை" என்கிறார் திருமதி ஸ்ரீதர்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு