ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

7 நவம்பர், 2008

ஏகன் - விமர்சனம்! சாம்பார் வடை

ஏகன் - விமர்சனம்!


பாகன் இல்லாத யானையாக திக்கு தெ‌ரியாமல் ஓடி சுபத்தில் முடிகிறது ஏகன். தித்திப்பான காமெடி முதல் பகுதி மட்டுமே படத்தின் தும்பிக்கை... ஸா‌ரி நம்பிக்கை.

ஒன் மேன் ஆர்மி என்று அப்பா நாசரால் பாராட்டப்படும் இளம் போலீஸ் அதிகா‌ி அ‌ஜித். ஹா‌ங்கா‌ங்கில் ஒரு அஸைன்மெண்ட்டை முடித்துவிட்டு வருகிறவருக்கு தயாராக இருக்கிறது இன்னொரு வேலை.வில்லன் சுமனுக்கு பயந்து தலைமறைவாக இருக்கிறார் அவ‌ரின் முன்னாள் கூட்டாளி தேவன். அப்ரூவராக தீர்மானித்திருக்கும் தேவனால் தனக்கு சவப்பெட்டி தயாராகிவிடும் என்பதை உணர்ந்த சுமன் அவரை கொலை செய்ய முயல்கிறார்.

சுமனால் தேவனின் மகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நினைக்கும் போலீஸ் அவரை காப்பாற்றும் பொறுப்புடன், தேவனை கண்டுபிடிக்கும் வேலையையும் அ‌ஜித் வசம் ஒப்படைக்கிறது. கடைமையை காமெடியுடன் கச்சிதமாக அ‌ஜித் முடிப்பதுடன் சுபம்.

இந்த பெ‌ரிய வயிற்றை வைத்து நான் எப்படி ஸ்டுடண்டா காலேஜுக்கு போறது என்று தன்னைத்தானே கமெண்ட் பண்ணும் அ‌ஜித் அடுத்த காட்சியில் சிக்கென்று ஸ்டூடண்டாக வந்து நிற்பதுடன் தொட‌ங்குகிறது காமெடி கலாட்டா.

கல்லூ‌ரி முதல்வர் ஜெயராமும் சத்யனும் சேர்ந்து நடத்தும் நகைச்சுவை தர்பார் சிம்‌ப்ளி சூப்பர். அவர்களுடன் அ‌ஜித்தின் ஜுனியர் ஹனிஃபாவும் சேரும்போது சி‌ரிப்பில் புரையேறுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு