ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

9 நவம்பர், 2008

பத்திரிகை செய்தி... படபடத்த நயன்தாரா

பத்திரிகை செய்தி...
படபடத்த நயன்தாரா

கடந்தவார கசமுசா இது. சென்னையில் நடைபெற்ற முக்கியமான பார்ட்டி ஒன்றிற்கு Nayantharaசென்றிருந்தார் நயன்தாரா. நேரம் செல்ல செல்ல, சற்றே கிறக்கத்திற்கு போனது மூட்! அந்த நேரம் பார்த்துதானா அந்த பாடலை போடவேண்டும்? காதல் வளர்தேன்... காதல் வளர்த்தேன் என்று சிம்பு பாடிய பாடலை அங்கிருந்த ஸ்கிரீனில் ஓட விட்டார்கள்.

அவ்வளவுதான்... அப்படியே எழுந்து அந்த ஸ்கீரினை நோக்கி ஓடினாராம் நயன். மை ஸ்வீட் டார்லிங் என்று கொஞ்சியபடியே சிம்புவின் பிம்பத்திற்கு முத்தங்களை கொடுக்க, பார்ட்டிக்கு வந்த பலருக்கும் அதிர்ச்சி. ஏனென்றால், இருவருக்கும் இடையில் இருந்த காதல் ஆக்சிடென்ட் ஆகி, ஐசியூ வில் இருப்பது தெரிந்த விஷயம்தானே? இத்தனைக்கு பிறகும் நயன் சிம்புவை நேசிக்கிறார் என்றால், இருவருக்குள்ளும் எவ்வளவு தூரம் காதல் இருந்திருக்கும் என்று பரிதாபப்பட்டார்களாம்.

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் சென்னை வந்த நயனுக்கு மற்றுமொரு எரிச்சல். லிங்குசாமி படத்திலிருந்து நயன் நீக்கப்பட்டார் என்று செய்தி வந்தது பிரபல நாளிதழ் ஒன்றில். தூங்கி எழுந்தவுடன் கையில் காபி கோப்பையுடன் பேப்பரை திறந்தால் இப்படி ஒரு செய்தி! சும்மாயிருப்பாரா? தனது கால்ஷீட் மேனேஜரை பொறித்துவிட்டாராம். வேறு வழியில்லாமல் லிங்குசாமியிடமே சொல்லி வந்திருந்த செய்திக்கு மறுப்பு கொடுக்க வைத்தார்களாம். இவருக்கு பதிலாக நடிப்பதாக சொல்லப்பட்ட தமன்னாவிடம் கேட்டால், எனக்கு வாய்ப்பு கொடுத்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன் என்றாராம். எப்போ எப்போன்னு இருப்பாங்க போலிருக்கு!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு